திடீரென உயர்ந்த தங்கத்தின் விலை நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியான தகவல்!!
Today Gold Rate 24 Feb 2024
Today Gold Rate 24 Feb 2024 பிப்ரவரி மாதம் தொடக்கம் முதல் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் தற்போது தங்கத்தின் விலை திடீரென உயர்ந்துள்ளது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 40 ரூபாய் குறைந்த நிலையில் இன்று சற்று அதிகரித்து உள்ளது. எனவே நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி அடைந்துள்ளனர் அதை பற்றிய விரிவான தகவலை கீழ்க்கண்டவற்றுள் நாம் காணலாம்.
Today Gold Rate 24 Feb 2024
தங்கம் விலை:
தமிழகத்தில் தங்கம் விலையானது நேற்று சவரனுக்கு ரூ.40 குறைந்த நிலையில் இன்று ஒரே நாளில் உயர்ந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,820க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 24 காரட் தங்கம் விலையும் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 6,290 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 50,320 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன் படி ஒரு கிராம் வெள்ளி ரூ.76.40 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 76400க்கு விற்பனை செய்யப்படுகிறது.