திருவண்ணாமலை ஆனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவிப்பு…Tiruvannamalai pournami girivalam june 2024 date and time best

Tiruvannamalai pournami girivalam june 2024 date and time best 

திருவண்ணாமலை ஆனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவிப்பு திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள “அண்ணாமலை” என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

tiruvannamalai pournami girivalam june 2024 date and time best
tiruvannamalai pournami girivalam june 2024 date and time best

இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமியன்றும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில் ஆனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

பவுர்ணமி வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7.46 மணிக்கு தொடங்கி மறுநாள் 22-ந்தேதி (சனிக்கிழமை) காலை 7.21 மணிக்கு நிறைவடைகிறது. பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் என அழைக்கப்படும் திரு அருணாசலேசுவரர் திருக்கோயில் தென் இந்தியாவில் புனிதமான நகரமானதும், நினைத்தாலே முக்தி தரக் கூடியதுமான திருவண்ணாமலையில் 2668 அடி உயரம் கொண்ட மலை அடிவாரத்தில் அழகுற அமைந்துள்ளது. இத்திருக்கோயில் தென் இந்திய, (திராவிட) கட்டிட கலை மற்றும் சிற்ப அம்சங்களுக்கு சிறந்த உதாரணமாக விளங்குகின்றது.

இத்திருக்கோயிலில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுக்களால், இத்திருக்கோயில் முற்கால சோழ அரசர்கள் காலத்தில் (கி.பி. 9-ம் நூற்றாண்டு) கட்டப்பட்டு, பிற்கால சோழர்கள் ஹோய்சள (போசள) அரசர்கள், விஜய நகர நாயக்க அரசர்கள் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டு, மூலவர் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கற்தூண் வரிசை வைத்து கட்டப்பட்ட பிரகாரம், மற்றும் அம்மன் சன்னதி உள்ளிட்ட பல தெய்வங்களின் உப சன்னதிகள், 9 கோபுரங்கள், 5 பிரகாரங்கள், பல மண்டபங்கள், திருக்குளங்கள் ஆகியவற்றுடன் மிக பிரமாண்டமான கட்டிட அமைப்புகளைக் கொண்டு விளங்குகிறது.

இத்திருக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டு முழுவதும் திருவிழாக்கள், வழிபாடுகள், அறச்செயல்கள் பல இத்திருகோயிலில் செவ்வனே நடத்தப்பட்டு வருகிறது.

இத்திருத்தலத்தின் சிறப்புகள் காஞ்சிபுரம் சைவ சமய குரவர் எல்லப்பநாவலர் அவர்கள் இயற்றிய அருணாச்சல புராணம் என்ற நூலிலும் அருணைக் கலம்பகம், மற்றும் குமரகுருபரன் இயற்றிய சோண சைலமலை, அருணகிரியாரின் திருப்புகழ் நூலிலும், விரிவாக காணலாம்.

10-ம் நூற்றாண்டு முதல் 18-ம் நூற்றாண்டு வரை உள்ள கால பகுதி, இதுவரை ஆராயப்பட்ட 119 கல்வெட்டுகளில் இருந்து திருவண்ணாமலை ஆலயம் முதலில் எப்படி தோன்றியது, எப்படி வளர்ச்சி பெற்றது, யார்-யாரெல்லாம் கோவிலை கட்டினார்கள் என்ற உண்மை ஆதாரப்பூர்வமாக நமக்கு கிடைத்துள்ளது. ஆனால் கல்வெட்டு ஆய்வுப்படி பார்த்தால், இதிகாச காலத்தில் மகிழம் மரத்தடியில் ஈசன் சுயம்புலிங்கமாக தோன்றினார் என்று தெரிய வருகிறது. அதனால் தான் திருவண்ணாமலை தலத்தில் மகிழ மரம் தல விருட்சமாக உள்ளது.

பல்வேறு நகரங்களிலிருந்தும் ஊர்களிலிருந்தும் எண்ணற்ற சித்தர்கள் இந்நகருக்கு வந்து வாழ்ந்து சமாதியடைந்துள்ளார்கள். அவர்களில் ரமணர், சேசாத்திரி சாமிகள், விசிறி சாமிகள், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் சமாதிகள் கிரிவலப் பாதையில் அமைந்துள்ளன.

Thiruvannamalai Temple wesite

Home Page

Leave a Comment

error: Content is protected !!