அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. இனி பிப்ரவரி 14 முதல் மாலை சிற்றுண்டி!!.. Puducherry Govt School Evening Snacks Scheme Start Feb 14

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. இனி பிப்ரவரி 14 முதல் மாலை சிற்றுண்டி!!..

Puducherry Govt School Evening Snacks Scheme Start Feb 14

Puducherry Govt School Evening Snacks Scheme Start Feb 14 அரசு பள்ளி மாணவர்கள் பசியின்றி கல்வி கற்பதற்காக, தமிழக முதல்வர் காலை உணவுத் திட்டத்தை 2022-2023 ஆம் கல்வி ஆண்டு முதல் தொடங்கி வைத்தார். இந்த திட்டம், பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில அரசுகளும் காலை உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டு வருகின்றனர். புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாலை சிறுதானிய உணவு வழங்கும் திட்டம் பிப். 14 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Puducherry Govt School Evening Snacks Scheme Start Feb 14
Puducherry Govt School Evening Snacks Scheme Start Feb 14

உணவுத் திட்டம்

புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் இயங்கி வரும் அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் மூலம் பால் வழங்கப்படுகிறது. முன்னதாக, பிஸ்கெட், பழம் கொடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட இருக்கிறது. அது மட்டுமில்லாமல், மதிய உணவுத் திட்டத்துடன் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் புதுச்சேரி மாநில அரசு, பள்ளி மாணவர்களுக்கு காலையில் பால் மற்றும் முட்டை தருவதால் காலை உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வாய்ப்பு குறைவு தான் என்று தெரிவித்திருந்தது. ஆனால், காலை உணவுக்கு பதிலாக மாலை நேரத்தில் சிறுதானிய சிற்றுண்டியை மாணவர்களுக்கு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்படி, புதுச்சேரியில் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

Puducherry Govt School Evening Snacks Scheme Start Feb 14

அதனை தொடர்ந்து மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும் என ஏற்கனவே கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இந்த திட்டம் எப்போது தொடங்கப்படும் என மாணவர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், வருகிற பிப். 14 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய உணவு வழங்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

Leave a Comment

error: Content is protected !!