அரசு பள்ளி மாணவர்களுக்கு நற்செய்தி!! பள்ளி கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு!.. Happy All Government Schools Conduct Annual Function Before Feb10

அரசு பள்ளி மாணவர்களுக்கு நற்செய்தி!! பள்ளி கல்வித்துறை

சூப்பர் அறிவிப்பு!..

All Government Schools Conduct Annual Function Before Feb10

All Government Schools Conduct Annual Function Before Feb10 தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் ஆண்டு விழாவினை நடத்துமுடிக்கும்படி பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

ஆண்டு விழா:

தமிழக அரசு பள்ளிகளில் ஒவ்வொரு மாணவனின் திறமையையும் வெளிக்கொணரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் தமிழகத்தில் இயங்கி வரும் 37,576 அரசு பள்ளிகளில் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் ஆண்டு விழாவினை நடத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், மாணவர்கள் கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட திறன்களை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் முன்னிலையில் வெளிக்காட்ட வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் எனவும், இதற்காக 15 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

All Government Schools Conduct Annual Function Before Feb10
All Government Schools Conduct Annual Function Before Feb10

மேலும், ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் சாதாரணமாக ஆண்டு விழாவினை நடத்தாமல் சிறந்த ஒளி, ஒலி அமைப்பினை ஏற்படுத்தி மிகச் சிறப்பாக பள்ளி ஆண்டு விழாவினை நடத்தும் படி பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளும் படியும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வி – மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு – அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துதல் -மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் – சார்பு

ஒரு மாணவனின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கு , அம்மாணவனின் வகுப்பறை கற்றல் அனுபவங்களும் , கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் புற கல்விச் செயல்பாடுகளில் அம்மாணவர்கள் சிறப்பான பங்களிப்பும் காரணமாக அமைகின்றன. கல்வியாண்டு முழுவதும் பள்ளியில் நிகழும் தொடர்ச்சியான கல்வி மற்றும் கல்விசார் செயல்பாடுகளில் மாணவர்களின் பங்கேற்பினை , ஆண்டு இறுதியில் மாணவர்கள் அவர்கள் தம் பெற்றோர்கள் முன்னிலையில் வெளிப்படுத்த நல்வாய்ப்பாக அமைவது பள்ளி ஆண்டு விழாவாகும். மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துதல் குறித்து தமிழ்நாடு சட்டப் பேரவையில் பின்வரும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள். 

Documentary Pondicherry, Tamil Nadu,India May 12 School , 57% OFF

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழா சிறப்பான முறையில் நடத்தப்படும். இதில் மாணவர்களின் கலை , இலக்கியம் , விளையாட்டு போன்ற பல்வேறு திறன்களை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் வெளிக்காட்ட வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் . இதற்கென சுமார் 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். “

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழா சிறப்பான முறையில் நடைபெற வேண்டும். மாணவர்களின் தனித்திறன்களை அவர் தம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பாக வெளிப்படுத்த ஏதுவாக அரங்கம் அமைத்து, சிறந்த ஒளி , ஒலி அமைப்பினை ஏற்படுத்தி ஆண்டு விழாவினை கொண்டாடிட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் , பள்ளி மேலாண்மைக் குழுவுடன் இணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
Day before Class XII results, TN ends rank system in board exams | Chennai  News - Times of India

எனவே , மேற்குறிப்பிட்டுள்ளவாறு உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 10.02.2024 – க்குள் ஆண்டு விழாவினை நடத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ( தொடக்கக் கல்வி ) – ஆகியோருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

Leave a Comment

error: Content is protected !!