TN TRB 2024 தேர்வு கால அட்டவணை வெளியீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு TN TRB Annual Planner Released 2024

TN TRB 2024 தேர்வு கால அட்டவணை வெளியீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

TN TRB Annual Planner Released 2024

TN TRB Annual Planner Released 2024 தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆனது 2024 ஆம் ஆண்டுக்கான தேர்வு பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த தேர்வு கால அட்டவணை ஆனது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் 6000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் டிஎன்டிஆர்பி தேர்வு வாரியம் மூலமாக நியமனம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
TN TRB Annual Planner Released 2024
TN TRB Annual Planner Released 2024
TN TRB Annual Planner 2024:

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் அனைவரும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம தேர்வு செய்யப்படுகின்றனர். ஆண்டுதோறும் பள்ளிகளில் உள்ள காலியிடங்களை பொறுத்து தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆனது 2024ம் ஆண்டுக்கான உத்தேச வருடாந்திர காலண்டரை தற்போது வெளியிட்டு உள்ளது.

அதன்படி நடப்பாண்டு 6000 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் TN TRB தேர்வு வாரியம் மூலமாக நியமனம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக அளவிலானவர்கள் எதிர்பார்த்து வரும் TN TET PAPER I & II தேர்வின் அறிவிப்பு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும். முன்னதாக இம்மாதத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான அறிவிப்பும், அதனை தொடர்ந்து ஏப்ரலில் தேர்வும் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பை கீழே உள்ள அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

TN TRB Annual Planner Released 2024

எப்போது எந்தெந்தத் தேர்வு?

1766 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிக்கை இந்த மாதமே வெளியாகும் என்று டிஆர்பி அறிவித்துள்ளது.

அதேபோல அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில், 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவர்களுக்கு 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிக்கை 2024 பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று டிஆர்பி அறிவித்துள்ளது.

Download TN TRB Annual Planner 2024

ஆசிரியர் தகுதித் தேர்வு தேதிகள்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் மற்றும் இரண்டாம் நாள் தேர்வு, ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. டெட் தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை இதில் அறிவிக்கப்படவில்லை.

முதுநிலைப் பட்டதாரி உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 200 பணியிடங்களைக் கொண்ட இதற்கான தேர்வு குறித்த அறிவிக்கை மே மாதம் வெளியாக உள்ளது.

TN TRB Annual Planner Released 2024

சிஎம்ஆர்எஃப் எனப்படும் முதலமைச்சரின்‌ ஆராய்ச்சி உதவித் தொகைத்‌ திட்டத்திற்கான தகுதித்‌ தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் 120 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிக்கை ஜூன் மாதம் நடைபெற உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

TN TRB Annual Planner Released 2024

விரிவுரையாளர்கள், இளைய விரிவுரையாளர்கள், மூத்த விரிவுரையாளர்கள் ஆகிய பணிகளுக்கான 139 மொத்த காலிப் பணியிடங்களுக்கு டிசம்பர் மாதம் தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தகவலை டிஆர்பி தெரிவித்துள்ளது.

மேலும் அரசு சட்டக் கல்லூரிகளில் உள்ள 56 காலி பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு, அதாவது 2025ஆம் ஆண்டு பிப்ரவரியில் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிக்கை 2024ஆம் ஆண்டு நவம்பரில் வெளியாகும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது உத்தேச பணியிடங்கள் மற்றும் தேதிகள் மட்டுமே என்றும் இதில் கூடுதலோ, குறைவோ, மாற்றமோ இருக்கலாம் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தகுதித் தேர்வுடன் போட்டித் தேர்வு

ஆசிரியர் பணிக்குத் தேர்வாக விரும்பும் தேர்வர்கள் முதலில் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும். தொடர்ந்து அந்தந்த காலிப் பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் போட்டித் தேர்வையும் எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். எனினும் இதற்குத் தேர்வர்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

error: Content is protected !!