ரேஷன் பொருட்கள் இனி பாக்கெட்டுகளில் அரசு அதிரடி உத்தரவு!..
Govt Action Orders Ration items No longer in Pockets
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
Govt Action Orders Ration items No longer in Pockets ரேஷன் பொருட்களில் சுகாதாரம் எடை ஆகியவற்றை உறுதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் அரிசி சர்க்கரை பருப்பு கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்களை இனிமேல் பாக்கெட் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இதனால் பொருட்களின் தரம் குறைவதை தடுப்பது மட்டுமின்றி எடையிலும் மாற்றம் இருக்காது என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு மத்திய மாநில அரசுகள் இணைந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையே அத்தியாவசிய பொருட்களான அரிசி, சர்க்கரை, பாமாயில், கோதுமை ,மண்ணெண்ணெய் ,ரவை ,மைதா, சோப்பு ,உப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மலிவு விலையில் நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த பொருட்களை வழங்கி வருகின்றன .அதிலும் குறிப்பாக அரிசியை விலையில்லாமல் வழங்கி வருகின்றது .
ஏற்கனவே பாமாயில் பாக்கெட்களில் நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்து வருகின்ற நிலையில் மற்ற பொருட்களான சர்க்கரை, கோதுமை, அரிசி, பருப்பு உள்ளிட்ட முக்கிய பொருட்களை பாக்கெட்டுகளில் தரமானதாகவும் எடை குறைவில்லாமல் குடும்ப அட்டைதாரர்களுக்கு சென்றடைய மாநில அரசானது புதிய முயற்சியை எடுக்க உள்ளது .அதன்படி நியாய விலைக் கடைகளில் அளிக்கப்படும் அனைத்து பொருட்களும் பாக்கெட்டுகளில் விற்பனை செய்ய வேண்டும் என அரசு முடிவு செய்துள்ளது .எனவே ,அரிசியை தவிர மற்ற பொருட்கள் பாக்கெட்டுகளின் மூலம் விற்பனைக்கு கூடிய விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.