Pongal Parisu 2024 Government Order Released பொங்கல் பரிசு அரசாணை வெளியீடு எவ்வளவு ரூபாய்? தொகுப்பு பொருட்கள் என்ன? Happy

Pongal Parisu 2024 Government Order Released

பொங்கல் பரிசு 2024 அரசாணை வெளியீடு எவ்வளவு ரூபாய்? தொகுப்பு பொருட்கள் என்ன?

Pongal Parisu 2024 Government Order Released : பொங்கல் பரிசு 2024 காண அரசாணை வெளியீடு தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் துவங்க உள்ள நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் இருந்தே தமிழக அரசு பொங்கல் தொகுப்பாக என்னென்ன பொருட்கள் வழங்கும் எவ்வளவு தொகை வழங்கும் என பொதுமக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

அந்த எதிர்பார்ப்பை ஈடு செய்யும் வகையில் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளதா என்பதை இந்த அரசாணையின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம் இதில் என்னென்ன பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது பொங்கல் தொகுப்பு தொகை வழங்கப்படுகிறதா உள்ளிட்ட முக்கிய தகவல்களை நாம் இங்கு பார்க்கலாம் இது போன்ற பயனுள்ள தகவலை தொடர்ந்து பெற நமது தமிழ் நியூஸ் 360 Tamil News 360 பார்க்கவும்.

அரசாணையில் வெளிவந்துள்ள தகவல்கள் தமிழர் திருநாள் தை பொங்கல் 2024 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கை தமிழ் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் தலா ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்குதல் தொடர்பான அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு 2024 அரசாணை வெளியீடு

இந்த அரசாணையானது கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு அரசாணையானது வெளியிடப்பட்டுள்ளது நாள் 2.1.2024.

Pongal Parisu 2024 Government Order Released
Pongal Parisu 2024 Government Order Released

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் கடிதம் ஆனது மேற்கோள் காட்டப்பட்டு அந்த அரசாணையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனரின் கடிதங்களில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகையாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழ் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு

பொங்கல் தொகுப்பு பொருட்கள் 2024

தலா ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்கிட 31.10.2023 அன்றைய தேதி நிலவரப்படி இரண்டு கோடியே 19 லட்சத்து 56 ஆயிரத்து 420 எண்ணிக்கையிலான குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பட்சத்தில் தோராயமாக ரூபாய் 238 கோடியே 92 லட்சத்து 72ஆயிரத்து 741 மற்றும் செலவிடும் ஏற்படும் என்றும் அதற்கான விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட உள்ள பச்சரிசியினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்காக கொள்முதல் செய்யும் நிறுவனமான தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு இந்தியா லிட் என்சிசி எப் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள வெளிச்சந்தை விலையான கிலோ ஒன்றுக்கு 35 ரூபாய் 20 பைசா வீதம் கொள்முதல் செய்யவும் அதனை அரசு நியாய விலை கடைகள் மூலம் அனைத்து அரிசி மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழ் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கிட வேண்டிய தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை நாளை வெளியிடும் என்றும் ஜனவரி 8ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பரிசுத் தொகுப்பை விநியோகம் செய்வதை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்றும் கோட்டை வட்டாரத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களும் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களும் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பணத்தை முன்கூட்டியே பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கவும் ஆலோசனைகள் நடைபெறுகின்றன. நவம்பர் மாதத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகளிர் உரிமைத் தொகை 15ஆம் தேதிக்கு முன்னரே பயனாளர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி மற்றும் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்குவது குறித்து, ஜனவரி 3 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக்கு பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கக் கூடிய குடும்பங்கள் என 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்புடன் ரூ.1000 ரொக்கம் ஆகியவை பொங்கல் பரிசாக தமிழக அரசால் கடந்த ஆண்டு (2023) வழங்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கடந்த ஆண்டு வழங்கியது. இதற்கான அறிவிப்பை டிசம்பர் மாத இறுதியில் வெளியிட்டு.

Pongal Parisu 2024 Government Order Released
Pongal Parisu 2024 Government Order Released

ரொக்க பணம்

ரொக்க பணம் எவ்வளவு கொடுப்பது என்பதற்கான அறிவிப்பு இன்று காலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Leave a Comment

error: Content is protected !!