பொங்கல் பரிசு ரூபாய் 1000 வங்கி கணக்கில் வழங்கப்படும் – அரசு அறிவிப்பு Pongal Gift 2024 Rs1000 Announcement

Pongal Gift 2024 Rs1000 Announcement

பொங்கல் பரிசு ரூபாய் 1000 வங்கி கணக்கில் வழங்கப்படும் – அரசு அறிவிப்பு

Pongal Gift 2024 Rs1000 Announcement : தை முதல் நாள் என்றாலே தமிழகத்தில் அனைவருக்கும் நினைவு வருவது உழவர் திருநாளான உங்கள் திருநாள் அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் அனைவருக்கும் ஞாபகம் வரும்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

அதே சமயம் குடும்ப அட்டை வைத்துள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு ஞாபகம் வரும் அதில் அரசு என்ன அறிவிக்கும் என பொதுமக்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருப்பார்கள் பொங்கல் தொகுப்பு பொருட்கள் கரும்பு, வெள்ளம், பச்சரிசி,முந்திரி, திராட்சை, நெய், உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான தொகுப்பாக பொருட்களை அரசு வழங்குமா

Pongal Gift 2024 Rs1000 Announcement
Pongal Gift 2024 Rs1000 Announcement

அல்லது அதற்கான தொகையை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 1000 வழங்குமா அல்லது 2000 வழங்குமா அல்லது எவ்வளவு தான் வழங்கும் என நடுத்தர பொதுமக்கள் காத்துக் கொண்டிருப்பார்கள் அந்த தொகை வங்கி கணக்கில் வழங்கப்படுமா அல்லது ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுமா என அடுத்த கட்டமாக மக்கள் எண்ணிப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் அவர்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது அது என்ன என்பதை முழுமையாக பார்க்கலாம்.

பொங்கல் பரிசு ரூபாய் 1000

புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow the Tamil News 360 channel on WhatsApp Join
Telegram (Daily Jobs ) Join
பொங்கல் பரிசு 2024 :

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 791 வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படுத்தி வரும் ஏழை மக்களுக்கான இலவச துணி வகைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடப்பு ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிகளுக்கு பதிலாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கில் நேரடியாக ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப உணவு பங்கீடு அட்டைதாரர்களில் ஒரு நபர் கொண்ட அட்டைதாரர்களுக்கு ₹500 மற்றும் இரண்டுக்கும் மேற்பட்ட குடும்ப நபர்களைக் கொண்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹ 1000 நேரடியாக வங்கி கணக்கின் மூலம் ஜனவரி 4, 2024 அன்று செலுத்தப்படும்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதன் வாயிலாக அரசுக்கு ரூபாய் 12.29 கோடி கூடுதல் செலவாகும என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் குடும்பத் தலைவிகளுக்கான மாதாந்திர உதவித் தொகை திட்டத்தில் விண்ணப்பித்திருந்த தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் அவர்களின் வங்கி கணக்கில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கான உதவித்தொகை பணம் செலுத்தப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் இருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டைக்கும் ரூபாய் 6000

Leave a Comment

error: Content is protected !!