ரேஷன் அட்டைக்கும் ரூபாய் 6000 நிவாரணத்தொகை அறிவிப்பு michaung cyclone relief fund rs 6000

Michaung cyclone relief fund rs 6000

ரேஷன் அட்டைக்கும் ரூபாய் 6000 நிவாரணத்தொகை அறிவிப்பு

michaung cyclone relief fund rs 6000 ரேஷன் அட்டைக்கும் ரூபாய் 6000 நிவாரணத்தொகை அறிவிப்பு “மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6000 மும், இதர நிவாரண உதவித் தொகைகளும் உயர்த்தி ரேஷன் கடைகள் மூலமாக நிவாரண தொகை ரொக்கமாக வழங்கப்படும்” michaung cyclone relief fund rs 6000

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

“சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.8 ஆயிரமும், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்”.

michaung cyclone relief fund rs 6000
ரேஷன் அட்டைக்கும் ரூபாய் 6000 நிவாரணத்தொகை அறிவிப்பு

“எருது, பசு உயிரிழப்புகளுக்கு ரூ.37,500, ஆடுகளுக்கு ரூ.4,000 வழங்கப்படும்”

“சேதமடைந்த படகுகளுக்கு ரூ.50 ஆயிரமும், கட்டுமரங்களுக்கு ரூ.15 ஆயிரம், வல்லம் வகை படகுகளுக்கு ரூ.1 லட்சம், வலைகளுக்கு ரூ.15,000 நிவாரணம்

“நெல் மற்றும் இறவைப் பாசன பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17 ஆயிரமும், பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதத்திற்கு ஹெக்டேருக்கு ரூ.22,500, மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500 நிவாரணம்”

– முதலமைச்சர் ஸ்டாலின்

மழை நிவாரணம் 6000

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ₹6,000 வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையாக ₹5,00,000 வழங்கப்படும்.

சேதமடைந்த குடிசைகளுக்கு ₹8,000 வழங்கப்படும்.

மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ₹17,000 வழங்கப்படும்.

பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ₹22,500 வழங்கப்படும்.

மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ₹8,500 வழங்கப்படும்.

எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்புக்கு நிவாரணமாக ₹37,500 வழங்கப்படும்.

வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்புக்கு நிவாரணமாக ₹4,000/- வழங்கப்படும்.

முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட) ₹50,000 வழங்கப்படும்.

பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ₹15,000 வழங்கப்படும்.

முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு ₹1,00,000 வழங்கப்படும்.

முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு ₹7,50,000 வழங்கப்படும்.

சேதமடைந்த வலைகளுக்கு ₹15,000 வழங்கப்படும்.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த கல்லூரிகள் திங்கட்கிழமை திறப்பு

கல்லூரி திறக்கப்படுவதற்கு முன் 20 வகையான அறிவுறுத்தல்களை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்: உயர்கல்வித்துறை

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நேரடியாக பள்ளிக் கல்வி இயக்குநர், இணை இயக்குனர்கள் ஆய்வு மேற்கொள்ள உத்தரவு

கல்லூரி வளாகத்தில் சுற்றுச்சுவர் ஈரப்பதத்துடன் இருக்கும் என்பதால் அதில் இருந்து 20 அடி தூரத்தில் தடுப்புகள் அமைக்க வேண்டும் – உயர்கல்வித்துறை

கல்லூரி வளாகத்தில் உள்ள மின் இணைப்புகளை சரி செய்து மின் கசிவு ஏற்பட்டுள்ளதா என்பதை சோதிக்க வேண்டும் – உயர்கல்வித்துறை

மின்கசிவு ஏதேனும் கண்டறியப்பட்டால், தற்காலிகமாக மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் – உயர்கல்வித்துறைச் செயலாளர்

குடிநீர் தொட்டிகளில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும் – உயர்கல்வித்துறை

மிக்ஜாம் புயல் நிவாரணம் 6000

தொழில்துறைக்கும் மின் கட்டண சலுகை பொருந்தும்”

மின் கட்டணத்தை அபராதமின்றி செலுத்த அறிவித்த கால நீட்டிப்பு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும் – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அபராதமின்றி மின் கட்டணம் செலுத்த டிச.18ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

michaung cyclone relief fund rs 6000
ரேஷன் அட்டைக்கும் ரூபாய் 6000 நிவாரணத்தொகை அறிவிப்பு

 

Tamil nadu offical website Click

Tamil News 360 Home page Click

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கும் பணிக்கென தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, பெரிய அளவில் சமையல் அறைகள் நிறுவப்பட்டு, தரமான உணவு சமைக்கப்பட்டு, சென்னை மாவட்டத்தில் மட்டும் 8-12-2023 வரை, மூன்று வேளை உணவாக, மொத்தம் 47 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இதுவரை 51 லட்சத்திற்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், பால் ஆகிய பொருட்கள் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் பெறப்பட்டு, முறையாக வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றின் விவரம் பின்வருமாறு:

  • பால் பவுடர் 58,222 கிலோ
  • குடிநீர் பாட்டில்கள் 9,67,000 எண்ணிக்கை
  • பிரட் பாக்கெட் 2,65,000 எண்ணிக்கை
  • பிஸ்கட் பாக்கெட் 10,38,175 எண்ணிக்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மழைநீர் தற்போது வடிந்துள்ள நிலையில், அந்தப் பகுதிகளில் தற்போது 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை ஈடுபடுத்தி, பேரிடர் மீட்புக் குழுவினரின் உதவியுடன் போர்க்கால அடிப்படையில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மருத்துவ முகாம்களும் தேவையான இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு பல்வேறு மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!