தமிழகத்தில் மிக்ஜாம் புயல் நிவாரண நிதி 10000 Michaung cyclone relief fund in tamilnadu tamil

Michaung cyclone relief fund in tamilnadu tamil

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் நிவாரண நிதி 10000

மழையால் சென்னை, புறநகர் பகுதியில் குடும்பங்கள் பொருளாதார, வாழ்வாதார இழப்பை சந்தித்துள்ளன மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்தினருக்கும் ரூ.10,000 இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். Michaung cyclone relief fund in tamilnadu tamil

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

சென்னையில் 3 நாட்களாகியும் வெள்ளம் வடியாத நிலையில் குடும்பத்துக்கு தலா ரூ.10,000 வழங்க வேண்டும்.

மழையால் சென்னை, புறநகர் பகுதியில் குடும்பங்கள் பொருளாதார, வாழ்வாதார இழப்பை சந்தித்துள்ளன – பாமக நிறுவனர் ராமதாஸ்

Michaung cyclone relief fund in tamilnadu tamil
Michaung cyclone relief fund in tamilnadu tamil

மழை வெள்ளத்தால் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் அனைத்து குடும்பங்களும் பொருளாதார இழப்பையும், வாழ்வாதார இழப்பையும் சந்தித்துள்ளன. சென்னை மாநகர மக்களின் துயரங்களை ஓரளவாவது போக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் தலா ரூ.10,000 நிதி உதவி வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நேற்று கரையைக் கடந்த மிக்ஜம் புயல் அண்மைக்காலங்களில் இல்லாத அளவுக்கு பெரும் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. மிக்ஜம் புயல் குறித்த முன்னறிவிப்பு 10 நாட்களுக்கு முன்பாகவே வெளியிடப்பட்டுவிட்ட போதிலும், புயலால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை தடுப்பதிலும், குறைப்பதிலும் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது.

சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் நான்காம் தேதி முன்னிரவிலேயே மழை முற்றிலுமாக ஓய்ந்து விட்டது. அதன்பின்னர் மூன்று நாட்களாகிவிட்ட நிலையில், சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் மழைநீர் வடியவில்லை. எந்தெந்த பகுதிகளில் எல்லாம் கடந்த இரு ஆண்டுகளில் மழைநீர் வடிகால்கள் புதிதாக அமைக்கப்பட்டனவோ, அந்தப் பகுதிகளில் எல்லாம் கடந்த காலங்களை விட மிக அதிக அளவில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. அதற்கு காரணம் ரூ.4000 கோடி செலவில் மழை நீர் வடிகால்கள் எந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்டனவோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றவில்லை என்பது தான் உண்மை.

சென்னையில் கோடம்பாக்கம், மாம்பலம், அசோக்நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த மழை – வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. தாம்பரம், முடிச்சூர், மணிமங்கலம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் மழை பாதிப்புகளை இன்னும் முழுமையாக கணக்கிட முடியவில்லை. பல பகுதிகளை மீட்புக்குழுவினரால் இன்னும் நெருங்கக்கூட முடியவில்லை. மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் தமிழக அரசின் பல துறைகளுக்கிடையே போதிய ஒருங்கிணைப்பில்லை.

சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை – வெள்ளம் வடியாததால் 50% பகுதிகளுக்கு இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை. சென்னையில் இரு நாட்களுக்கு பெய்த மழைக்கே இந்த அளவுக்கு பாதிப்பு என்றால், தொடர்மழை இன்னும் 24 மணி நேரம் நீடித்து இருந்தால், நிலைமை என்னவாகியிருக்கும்? என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது.

மழை மற்றும் மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 15 பேர் உயிரிழந்ததாக அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் பல மடங்கு கூடுதலாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பிற மாவட்டங்களில் இருந்து இன்னும் கூடுதலான பணியாளர்களை வரவழைக்க வேண்டும்; அதிக எண்ணிக்கையிலான இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை மேற்பார்வை பணிக்கு அனுப்ப வேண்டும். சென்னையில் எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக இயல்பு நிலையை திரும்பச் செய்யத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

மிக்ஜாம் புயல் நிவாரண நிதி

மழை வெள்ளத்தால் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் அனைத்து குடும்பங்களும் பொருளாதார இழப்பையும், வாழ்வாதார இழப்பையும் சந்தித்துள்ளன. சென்னை மாநகர மக்களின் துயரங்களை ஓரளவாவது போக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் தலா ரூ.10,000 நிதி உதவி வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

சென்னை வெள்ள பாதிப்பு குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு

வழக்கை உடனடியாக விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முறையீடு

உடனடியாக வழக்கை விசாரிக்க மனுதாரர் கோரிக்கை

உடனடியாக வழக்கை விசாரிக்க மறுத்த நீதிபதிகள் ஜனவரி முதல் வாரத்தில் விசாரிப்பதாக தகவல்

குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ள நீர் – மக்கள் வெளியே வர முடியாத சூழல்

வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம்

ஹெலிகாப்டர் மூலம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கும் ராணுவத்தினர்

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பொதுமக்கள் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை வழங்க உதவி எண்கள் அறிவிப்பு

2345 2359, 2345 2360, 2345 2361, 2345 2377 மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டறை எண் 2345 2437ஐ தொடர்பு கொள்ளலாம்.

Michaung cyclone relief fund in tamilnadu tamil
Michaung cyclone relief fund in tamilnadu tamil

 

Michaung cyclone relief fund in tamilnadu

‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும் சேதங்களை சரி செய்திட இடைக்கால நிவாரணமாக ₹5,060 கோடி வழங்கிடக் கோரி, பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

Michaung cyclone relief fund in tamilnadu PDF

Leave a Comment

error: Content is protected !!