100 நாள் வேலை திட்டத்துக்கான சம்பளம் இனி இந்த புதிய முறைப்படி வழங்கப்படும் 100 days work salary in abps method today

100 days work salary in abps method

100 நாள் வேலை திட்டத்துக்கான சம்பளம் இனி இந்த புதிய முறைப்படி வழங்கப்படும்

100 days work salary in abps method : 100 நாள் வேலை திட்டத்துக்கான சம்பளம் இனி இந்த புதிய முறைப்படி வழங்கப்படும். 100 நாள் வேலை திட்டம் என்பதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் இந்தியாவில் உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு மூலம் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தின் மூலம் 25 கோடி மேல் உள்ள பயனாளர்கள் கிட்ட திட்டத்தின் மூலம் பயனடைந்து வந்துள்ளனர் தற்போது இந்த திட்டத்துக்கான சம்பளம் வழங்கும் முறையானது புதிய முறைப்படி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

மத்திய அரசின் கொள்கைப்படி தற்போது வழங்கப்படுகின்ற மானியங்கள் என அனைத்திலும் ஆதார் அடிப்படையாகக் கொண்டே பணப்பட்டுவாடா ஆனது மத்திய அரசு செய்து வருகின்றது இந்த திட்டத்தினை 100 நாள் வேலை திட்டத்திலும் நடைமுறைப்படுத்த மத்திய அரசு முன்வந்துள்ளது இதன் மூலம் நேரடியாக பயனாளர்களின் வங்கி கணக்கு எண் மூலம் அவர்களுக்கு வங்கிக் கணக்கில் பணமானது செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

100 days work salary in abps method
100 days work salary in abps method

இன்று முதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஆதார் அடிப்படையிலான பணப்பட்டுவாடா முறையில் (Aadhaar Base Payment System –  ஏபிபிஎஸ்) நேரடிப் பணப்பரிமாற்றம் (டிபிடி) மூலம் ஊதியத்தொகை வழங்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன், காரணமாக தமிழ்நாட்டில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் 100 நாள் வேலைக்கு ஊதியம் பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கிராமப்புற வறுமை ஒழிப்பிற்காக மத்திய அரசு கடந்த 2005ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை (MGNREGA) இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ், 100 நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை இந்த திட்டம் அளிக்கிறது.

100 நாட்கள் வேலை தர அரசு (பஞ்சாயத்து அமைப்புகள்) தவறினால் , பாதிக்கப்பட்டவருக்கு முதல் 30 நாட்களுக்கு சம்பளத்தில் கால் பங்கும், மேலும் தவறினால் பாதி ஊதியத்தை அபராதமாக அரசு தர வேண்டும். இதுநாள் வரையில் இத்திட்டத்தின் கீழ் 25.25 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். இதில், 14.35 கோடி பேர் செயலில் உள்ள தொழிலாளர்களாக (Active Workers) உள்ளனர்.

Pongal parisu

இந்நிலையில், 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகள் பல சந்தர்ப்பங்களில் வங்கிக் கணக்கு எண்ணினை அடிக்கடி மாற்றுவதாலும், பயனாளி சரியான நேரத்தில் புதிய கணக்கு எண்ணினை சமர்ப்பிக்காததால், சம்பந்தப்பட்ட திட்ட அலுவலர் கணக்கு எண்ணினைப் புதுப்பிக்காததாலும், இலக்கு வங்கிக் கிளை மூலம் ஊதியம் செலுத்தும் பல பரிவர்த்தனைகள் நிராகரிக்கப்படுவதாக மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக, 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஊதியம் பெற, ஆதார் எண்ணை கொண்டு பணம் செலுத்தும் முறைகள் (AEPS) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
AEPS என்பது, வங்கிக் கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்கும் ஒரு செயற்முறையாகும். இதன் மூலம், இந்திய அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் அனைத்து மானியப் பலன்களையும் ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பெற முடியும். இதற்கு, நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளைக்கு சென்று, உங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். மேலும், சுய விருப்பத்துடன், அனைத்து நேரடி மானியப் பலன்களை இந்த ஒரு வங்கிக் கணக்கில் பெற விரும்புகிறேன் என்று சம்மதம் அளிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில், இது நாள்வரையில்,  2,02,782 பேர் AEPS முறையின் கீழ் இணைக்கப்படாமல் உள்ளனர். மாநிலத்தில் உள்ள 9, 217,339 திட்ட பயனாளர்களில் (Actieve Workers), 9019143 பேர் ஆதார் எண்ணை கொண்டு பணம் வழங்கும் திட்டட்தின் (AEPS) கீழ் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். தேசிய அளவில்  1.5  கோடிக்கும் அதிகமானோர் AEPS முறையின் கீழ் வரவில்லை என்று சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

 

100 days Active workers india
100 days Active workers india

அடித்தட்டு மக்களுக்கு பாதிப்பு:  

100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ், ஆண்களுக்கும் பெண்களுக்கு சம ஊதியம் வழங்கப்படுகிறது. இது, இந்த திட்டத்தின் முக்கிய பலமாகும். இன்றைய நவநாகரிக காலத்திலும், தமிழ்ச் சமூகத்தில் குடும்பம் என்பது மைய அகலாக (Fundamental Unit) இருந்து வருகிறது. குடும்பத்திற்கு உள்ளேயும், குடும்பம் சார்ந்த தொழில்களிலும் பெண்கள் சம்பளம் பெறாமல் உழைப்பில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால், 100 நாள் வேலைத்திட்டம், பெருவாரியாக கிராமப்புற பெண்களை உழைப்புச் சந்தைக்கு கொண்டு வந்தது. இதன்மூலம் குறிப்பாக, சமூகத்தில் பின் தங்கிய பெண்களிடையே அதிகாரமயமாக்கலை ஏற்படுத்தியது. அதேபோன்று, இந்த திட்டத்தில், தலித் உழைப்பாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது.

எனவே, புதிய AEPS முறையின் கீழ் 1 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் ஊதியம் பெறுவதற்கான தகுதியை இழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

100 days work salary in abps method
100 days work salary in abps method

Leave a Comment

error: Content is protected !!