தமிழ்நாடு பட்ஜெட் 2024 முக்கிய சிறப்பம்சங்களை வெளியிட்டார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு!!.. TN Budget 2024 Live News In Tamil

தமிழ்நாடு பட்ஜெட் 2024 முக்கிய சிறப்பம்சங்களை வெளியிட்டார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு!!..

TN Budget 2024 Live News In Tamil

TN Budget 2024 Live News In Tamil 2024 -25ம் நிதியாண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செயது வருகிறார்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

நிதியமைச்சராக தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்.

TN Budget 2024 Live News In Tamil
TN Budget 2024 Live News In Tamil

புதிய அறிவிப்புகள் பல பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

 • தமிழ்நாடு சட்டசபையில் 2024-25-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்
 • தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை இந்த லைவ் பக்கத்தில் காணலாம்:
 • சென்னையில் ரூ100 கோடியில் கடற்கரைகள் மேம்படுத்தப்படும்
 • வடசென்னை வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்டார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
 • 5,000 ஏரிகள், குளங்கள் புனரமைப்பு…! ரூ.500 கோடி ஒதுக்கீடு…!
 • 5 லட்சம் ஏழைக் குடும்பங்களைக் கண்டறிந்து வறுமையை அகற்றிட முதலமைச்சரின் தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம்
 • கீழடியில் திறந்தவெளி அரங்கம் – ரூ.17 கோடி ஒதுக்கீடு
 •  நாட்டு இரண்டாவது பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு
 • காலை உணவு திட்டத்திற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
   
 • வரவு செலவுத் திட்டத்திற்கு வழிகாட்டி அண்ணா
 • கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு 7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது
 • ஏழு சிறப்பம்சங்களை பட்டியலிடுகிறார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
   
 • தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024 2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல்
 • சிலப்பதிகாரம் மணிமேகலை உள்ளிட்ட நூல்களை மொழி பெயர்க்க இரண்டு கோடி நிதி ஒதுக்கீடு
 • இனி வரும் காலங்களில் மேலும் 600 நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்
 • தமிழ் மின் நூலக மேம்பாட்டிற்கு இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
 • அரிய நூல்களை பாதுகாக்க இரண்டு கோடி நிதி ஒதுக்கீடு
 • அகழ்வாராய்ச்சி செய்ய தொல்லியல் துறைக்கு 5 கோடி நிதி ஒதுக்கீடு
 •  கீழடியில் ஒரு 17 கோடியும் திறந்த வெளி அரங்கம்
 • தொல் மரபணுவியல் ஆய்வக மேம்பாட்டிற்கு மூன்று கோடி நிதி ஒதுக்கீடு
 • TN Budget 2024 Live News In Tamil
   
 • குடிசை இல்லா தமிழ்நாடு இலக்கை எட்ட 2030 ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும்
   
 • நாட்டிலேயே அகழ்வாய்வுக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்த மாநிலம் தமிழகமே ஆகும்
   
 • நாட்டிலேயே தொல்லியல் ஆராய்ச்சிக்கு அதிக நிதியை தமிழக அரசு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
   
 • தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் கோடியில் சாலைகள் மேம்படுத்தப்படும்
 • 2025 ஆம் ஆண்டிற்கும் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்
 •  
 • ஊரகப்பகுதியில் 2000 நீர்த்தேக்க தொட்டிகள் கட்டி தரப்படும்
 • மாநகராட்சி பகுதிகளில் 300 கோடி சாலை உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்
 •  ஊரகப் பகுதிகளில் உள்ள குளம் மற்றும் இடைநிலைகளை தூர்வார 500 கோடி நிதி ஒதுக்கீடு
 •  2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் 365 கோடி நிதி ஒதுக்கீடு
 • தேசிய ஊரக வேலைவாய்ப்புக்கு 3300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
 • 5000 ஏரிகள் குளங்கள் புனரமைப்புக்காக ரூபாய் 500 கோடி நிதி உதவி தேடு
 • தமிழகத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 5 லட்சம் ஏழைகள் மீட்டெடுக்கப்படுவார்கள்
 •  முதலமைச்சரின் தாயுமானவர் வறுமை ஒழிப்பு திட்டம்
 • முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்த 27 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
 • கலைஞர் மேம்பாட்டு திட்டத்திற்கு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
 • கலைஞரின் கனவு இல்லம் 2030க்குள் குடிசை இல்லா தமிழ்நாடு.
 • அரசு பங்காளிப்புடன் பூந்தமல்லி அருகே புதிய திரைப்பட நகரம் உருவாக்கப்படும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
 • மதுரை சேலத்தில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்
 • அடையாறு ஆறு மீட்டெடுக்க 1500 கோடி நிதி ஒதுக்கீடு
 •  சிங்கார சென்னை திட்டத்திற்கு 500 கோடி நிதி ஒதுக்கீடு நிதி அமைச்சர்
   
 • கடற்கரை சாலைகள் மேம்படுத்தப்படும் கோவளம் டென்சன் நகர் எண்ணூர் கடற்கரை சாலைகளை மேம்படுத்த ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கீடு
   
 • கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்ட ரூபாய் 946 கோடியில்
 • புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள் நாமக்கல் ரூபாய் 358 கோடி திண்டுக்கல் ரூபாயை 568 கோடி பெரம்பலூர் ரூபாய் 366 கோடி நிதி ஒதுக்கீடு
 • மதுரை சேலத்தில் 24 மணி நேரம் தடையற்ற குடிநீர் திட்டம்
 • நாமக்கல் மாவட்டம் மக்கள் பயன்பெறும் வகையில் 368 கோடி மதிப்பு கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்
 • வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு 1000 கோடி
 • TN Budget 2024 Live News In Tamil

பட்ஜெட் உரை:

காட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்”

என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.

தொடர்ந்து அவர் ஆற்றிய உரை, “நூற்றாண்டு கண்ட இந்த சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்வதில் மகிழ்ச்சி. இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார கொண்ட மாநிலம் தமிழ்நாடு. 100 ஆண்டுகளில் தாக்கல் செய்த பட்ஜெட், தமிழர்களை தலைநிமிர செய்தது. தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழர்களின் எண்ணங்களை அறிவிப்பாக மாற்றிடும் வகையில் பட்ஜெட் உரை அமையும். பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்திட வேண்டிய சூழலில் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். ஆழி சூழ் தமிழ் நில பரப்பில் அழையா விருந்தாளியாக அவ்வப்போது வரும் இயற்கை பேரிடர்கள் ஒரு பக்கம். கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு மறந்து மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்துகொள்ளும் ஒன்றிய அரசு மறுபக்கம். இதற்கிடையே, தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்ல உதவும் வரவு செலவு திட்டத்தை உருவாக்கிட வேண்டிய தேவைகள் எழும்போதெல்லாம் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் வழிகாட்டுதல் மட்டுமே எங்களுக்கு கலங்கரை விளக்கமாக எங்களுக்கு அமைந்துள்ளன.”

முக்கிய அம்சங்கள்:

> தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

> சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் பொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.

> அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும்.

> தமிழ் மொழியை நவீனப்படுத்த AI உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு.

> முசிறி, தொண்டி ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடத்தப்படும்.

> ரூ.65 லட்சம் செலவில் அழகன் குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.

> கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ளப்படும்.

> கீழடியில் திறந்தவெளி அரங்கு ரூ.17 கோடி செலவில் அமைக்கப்படும்.

> சிந்து சமவெளி நூற்றாண்டு கருத்தரங்கு சென்னையில் நடத்தப்படும்.

> விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு

> ரூ.1000 கோடி செலவில் சாலைகள் மேம்படுத்தப்படும்.

> 5 ஆயிரம் ஏரி, குளங்களை புனரமைக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.

> 2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு.

Leave a Comment

error: Content is protected !!