புத்தாண்டு 2024 ஆம் ஆண்டு ஒரு ரீசார்ஜ் ஒரு வருட வேலிடிட்டி ஜியோ, ஏர்டெல், வோடபோன், New Year Offer 2024 Jio Airtel Vi Best Plan

New Year Offer 2024 Jio Airtel Vi Best Plan

புத்தாண்டு 2024 ஆம் ஆண்டு ஒரு ரீசார்ஜ் ஒரு வருட வேலிடிட்டி ஜியோ ஏர்டெல் வோடபோன்

New Year Offer 2024 Jio Airtel Vi Best Plan: புத்தாண்டு 2024 ஆம் ஆண்டு கொண்டாடுவதை ஒட்டி மொபைல் சிம் நிறுவனங்கள் புதிய வாடிக்கையாளர்களை கவரும் வண்ணமும் மேலும் தங்களிடம் உள்ள வாடிக்கையாளர்களை தொடர்ந்து அந் நிறுவனத்தில் நீடிக்கும் வண்ணமும் ஒவ்வொரு நிறுவனங்களுக்கு இடையே கடுமையான போட்டிகள் உருவாக்கிக் கொண்டுள்ளது அந்த வகையில் இந்தியாவில் ஜியோ ஏர்டெல் வோடபோன் ஐடியா இந்த மூன்று நிறுவனங்களுக்கு இடையே கடுமையான போட்டி உள்ளது அதிலும் குறிப்பாக ஜியோ ஏர்டெலுடைய போட்டி 5ஜி இன்டர்நெட் மூலம் மேலும் அதிகரித்துள்ளது இந்த போட்டி வாடிக்கையாளர்களுக்கு நன்மை அளிக்கும் போது தான் அதை வாடிக்கையாளர்கள் கொண்டாடுகின்றனர்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
New Year Offer 2024 Jio Airtel Vi Best Plan
New Year Offer 2024 Jio Airtel Vi Best Plan

new year offer Vi recharge 2024

வோடபோன் ஐடியா ரூ.3099 ப்ரீபெய்ட் திட்டம் (vi rs 3099 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக இதில் பின்ஞ் ஆல் நைட் (Binge All Night), வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) மற்றும் டேட்டா டிலைட் (Data delights) ஆகியவற்றைப் பெற்று கொள்ளலாம்.

இதுதவிர ஒரு வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) மற்றும் விஐ மூவிஸ் மற்றும் டிவி (Vi movies & TV) சப்ஸ்கிரிப்ஷன் வழங்குகிறது இந்த வோடபோன் ஐடியா ரூ.3099 ப்ரீபெய்ட் திட்டம்.

எதை தேர்வு செய்வது? அதிக வேலிடிட்டி மற்றும் டேட்டா தேவைப்படும் பயனர்கள் ஜியோவின் ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது. ஆனால் இந்த ஜியோ திட்டத்தில் ஓடிடி சலுகைகள் இல்லை என்பது தான் மிகப்பெரிய குறை. அதேசமயம் ஒரு வருடத்திற்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் வேண்டும் என்றால் ஏர்டெல், வோடபோன் திடங்களைத் தேர்வு செய்வது நல்லது. ஆனால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் குறைந்த டேட்டா சலுகைகளை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Follow the Tamil News 360 channel on WhatsApp Join
Telegram (Daily Jobs ) Join

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு புதிய புதிய திட்டங்கள் மற்றும் அசத்தலான சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்நிறுவனங்கள் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2024 புத்தாண்டு சலுகையை அறிவித்தது. அதாவது ஜியோவின் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்துக்கு மட்டும் புத்தாண்டு சலுகை வழங்கப்பட்டது. இந்நிலையில் ஜியோவின் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்துக்குப் போட்டியாக வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்களும் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளன. இப்போது அந்த திட்டங்களின் நன்மைகளைப் பார்ப்போம்.

New Year Offer 2024 Jio Airtel Vi Best Plan
New Year Offer 2024 Jio Airtel Vi Best Plan

new year offer jio recharge 2024

ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் ( jio rs 2999 plan): 2024 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஜியோ நிறுவனம் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் சலுகையை வழங்கி உள்ளது. பொதுவாக ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினமும் 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 365 நாள் வேலிடிட்டி வழங்கும் எனவே இந்த திட்டம் மொத்தமாக 912.5 ஜிபி டேட்டா வழங்கும்.

மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமம் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த அசத்தலான ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இதில் ஜியோ டிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை ஒரு வருடத்துக்கும் மேல் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அதேபோல் ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் 365 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி வழங்கி வந்தது. ஆனால் புத்தாண்டு சலுகை மூலம் இந்த வேலிடிட்டியானது தற்போது 23 நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மொத்தமாக 388 நாட்கள் வேலிடிட்டியை ஜியோ ரூ.2999 திட்டம் கொடுக்கிறது. இந்த 23 நாட்களுக்கான சலுகைகளைப் பார்த்தால், நாளொன்றுக்கு 2.5 ஜிபி வீதம் மொத்தமாக 57.5 ஜிபி டேட்டா இலவசமாகக் கிடைக்கிறது. அதேபோல அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகளும் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

New Year Offer 2024 Jio Airtel Vi Best Plan
New Year Offer 2024 Jio Airtel Vi Best Plan

new year offer Airtel recharge 2024

அதாவது ஒரு வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சப்ஸ்கிரிப்ஷனை வழங்குகிறது ஏர்டெல் ரூ.3,359 ப்ரீபெயட் திட்டம். மேலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் உள்ளிட்ட அசத்தலான சலுகைகள் வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.

ஏர்டெல் ரூ.3,359 ப்ரீபெயட் திட்டம் (airtel rs 3,359 plan) ஆனது தினமும் 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் சலுகைகளை வழங்குகிறது ஏர்டெல் ரூ.3,359 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

Pongal Parisu News 2024

Leave a Comment

error: Content is protected !!