4G வாடிக்கையாளர்க்கு அதிர்ச்சி! 5G இனிமேல் ஓசி கிடையாது! விரைவில்! Shock for 4G customer 5G is no more free Soon

4G வாடிக்கையாளர்க்கு அதிர்ச்சி! 5G இனிமேல் ஓசி கிடையாது! விரைவில்!

Shock for 4G customer 5G is no more free Soon

4ஜி சேவை பெற்று வரும் வாடிக்கையாளர்கள் ஜியோ ஏர்டெல் வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து அதிர்ச்சி தகவல் விரைவில் வெளியாக உள்ளது 4ஜி சேவை கட்டணம் உயர்வு மற்றும் 4ஜியில் இருந்து 5ஜிக்கு மாறலாம் என நினைத்தவர்கள் இனி 5g மாறினால் அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்கின்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது அதை பற்றி முழுமையாக காண்போம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Shock for 4G customer 5G is no more free Soon
Shock for 4G customer 5G is no more free Soon

உலகிலேயே மிகப்பெரிய ப்ரீபெய்டு மொபைல் சந்தாதாரர்களை, வாடிக்கையாளர்களை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதேபோல உலகிலேயே மிகவும் மலிவான கட்டணத்தில் டேட்டாவை வழங்கும் நாடுகளிலும் கூட இந்தியா உள்ளது.

5ஜி சேவைகளுக்கு 5 – 10% கூடுதல் கட்டணம் வசூலிக்க ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் இந்திய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் குறைந்த கட்டணத்தால் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குவதால் இந்திய டெலிகாம் ஆப்ரேட்டர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொலை தொடர்பு சேவையில் ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பெரும்பாலான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள இந்த இரு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை ஈர்க்க கவர்ச்சிகரமான அறிவிப்புகளை ஆரம்பத்தில் வெளியிட்டு வந்தன. குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த 2016 ஆம் ஆண்டு சந்தையில் அறிமுகம் ஆனது. வாடிக்கையாளர்களே எதிபார்க்காத அளவுக்கு ஜியோ சலுகளை அள்ளி வீசியது.

Shock for 4G customer 5G is no more free Soon


ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய இரண்டுமே ஏற்கனவே எக்கச்சக்கமான பணத்தை, தங்களது 5ஜி சேவைக்காக செலவு (Invest) செய்துள்ளது. மேலும் அடுத்த சில மாதங்களுக்கு கணிசமான பணத்தையும் செலவழிக்க உள்ளன. இருப்பினும், 5ஜி வழியாக அடுத்த பல மாதங்களுக்கு மிகவும் குறைவான வருமானமே (Income) வரும் என்பதை இவ்விரு நிறுவனங்களும் நன்றாக அறியும். ஏனென்றால், 5ஜி நெட்வொர்க் ஆனது ஒரு முக்கியமான தேவையாக மாறுவதற்கு இன்னும் நிறைய காலம் ஆகலாம். அதே போல 5ஜி-க்கான சுற்றுச்சூழல் அமைப்பும் கூட மெல்ல மெல்லவே வளரும்.

அதன்பிறகு கணிசமான வாடிக்கையாளர்களை பெற்ற பிறகு சலுகைகளை குறைத்து கட்டணத்தை அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது 5 ஜி இணைய சேவையை செல்போன் நிறுவனங்கள் வழங்கி வரும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு 4 ஜி கட்டணத்திலேயே 5 ஜி சேவையையும் வழங்கி வருகின்றன. அதுபோக அன்லிமெட்டெடு 5 ஜி சேவையும் தற்போது வழங்கப்படுகிறது.

4ஜி யூசர்களின் பாக்கெட்டில் கை வைக்கும் ஜியோ, ஏர்டெல்! 5ஜி சேவைகளுக்காக செய்த மற்றும் செய்யப்போகும் செலவை சமாளிக்க இந்திய டெலிகாம் நிறுவனங்களுக்கு இருக்கும் ஒரே வழி – 4ஜி வாடிக்கையாளர்களை (4G Customers) வைத்து அதிக பணம் சம்பாதிப்பதே ஆகும். அதாவது நஷ்டங்களில் இருந்து அல்லது அதிக லாபத்திற்கு பதிலாக மிகவும் குறைவான லாபத்தை பெறுவதில் இருந்து தப்பிக்க, ப்ரீபெய்ட் கட்டண உயர்வுதான் தான், டெலிகாம் நிறுவனங்களுக்கு இருக்கும் ஒரே வழி ஆகும்.

Shock for 4G customer 5G is no more free Soon
Shock for 4G customer 5G is no more free Soon

5 ஜி சேவை கட்டணம் 

4 ஜி சேவையுடன் ஒப்பிடும் போது 5 ஜி நெட்வொர்க்கின் வேகம் பலமடங்கு என்பதால் வாடிக்கையாளர்களும் 5 ஜி சேவையை விரும்பி பயன்படுத்தி வருகிறார்கள். நாடு முழுவதும் தற்போது 5 ஜி சேவை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் ஏண்ணிக்கை 125 மில்லியனாக உள்ளது. நடப்பு ஆண்டு இறுதிக்குள் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் 5 ஜி சேவையை பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் தற்போது வருவாயை பெருக்கும் விதமாக ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5 ஜி சேவைக்கான கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 ஜி அன்லிமிட்டடு சேவையையும் திரும்ப பெறுவதோடு 4 ஜி கட்டணத்தை விட கூடுதலாக 5 – 10 சதவிகிதம் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

உலகிலேயே அதிகம்.. உலகிலேயே மலிவு.. இரண்டுமே இந்தியா தான்!
Shock for 4G customer 5G is no more free Soon

அதிகரிக்க வாய்ப்பு: இந்த ஆண்டின் அரையாண்டுக்கு பிறகு அதாவது இன்னும் 6 மாதங்களுக்கு பிறகு இந்த கட்டண உயர்வு இருக்கும் என்று தெரிகிறது. இதுபோக மொபைல் சேவை கட்டணத்தையும் செல்போன் நிறுவனங்கள் 20 சதவிகிதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் வரும் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு இந்த கட்டணம் உயர்த்தப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. ஏற்கனவே செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் அதிக அளவிலான கட்டணத்தை வசூலிப்பதாக வாடிக்கையாளர்கள் புலம்பி வரும் நிலையில், தற்போது 5 ஜி சேவைக்கான கட்டணம் 10 – சதவிகிதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியிருப்பது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

நினைவூட்டும் வண்ணம், கடைசியாக கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது கடந்தது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தான். அதாவது கடைசியாக ரீசார்ஜ் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. ஆக ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்களிடம் இருந்து எப்போது வேண்டுமானாலும் கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம். இதற்கிடையில் 5ஜி அறிமுகம் குறித்து வாயே திறக்காத வோடபோன் ஐடியாவானது, தனது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களின் விலைகளை மறைமுகமாக குறைத்து வருகிறது. இதென்ன தந்திரம் என்பதை வோடாபோன் ஐடியா நிறுவனம் மட்டுமே அறியும்! Shock for 4G customer 5G is no more free Soon

Shock for 4G customer 5G is no more free Soon
Shock for 4G customer 5G is no more free Soon

LPG Gas Latest News

Leave a Comment

error: Content is protected !!