சூப்பர் ஜியோ Vs ஏர்டெல் 90 நாட்கள் வேலிடியில் அதிக ஆஃபர்கள் Jio vs Airtel 90 days validity best offer plan 2024

Jio vs Airtel 90 days validity best offer plan 2024

சூப்பர் ஜியோ Vs ஏர்டெல் 90 நாட்கள் வேலிடியில் அதிக ஆஃபர்கள்

Jio vs Airtel 90 days validity best offer plan 2024 சூப்பர் ஜியோ Vs ஏர்டெல் 90 நாட்கள் வேலிடியில் அதிக ஆஃபர்கள் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களில் ஏர்டெல் (Airtel) பிரியர்களே மூக்கில் விரல் வைக்கும் படியான சலுகைகளை ஜியோ (Jio) நிறுவனம் கொடுக்கிறது. ஜியோவில் கிடைக்கும் ரூ 749 திட்டத்திலும், ஏர்டெல்லில் கிடைக்கும் ரூ.779 திட்டத்திலும் மிகப்பெரும் சலுகை வித்தியாசம் இருக்கிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Jio vs Airtel 90 days validity best offer plan 2024
Jio vs Airtel 90 days validity best offer plan 2024

ஜியோ ரூ 749 திட்ட விவரங்கள் (Jio Rs 749 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) வாய்ஸ் கால்கள் (Voice Calls), டேட்டா (Data), எஸ்எம்எஸ் (SMS) மற்றும் ஜியோ ஆப்ஸ் (Jio Apps) போன்ற சலுகைகள் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் கொடுக்கப்படுகிறது.

இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு நாளொன்று 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஆகவே, மொத்தமாக 180 ஜிபி டேட்டா சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 2 ஜிபி டேட்டா முற்றிலும் காலியான பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) சலுகையை பயன்படுத்தலாம்.

அதுமட்டுமல்லாமல், ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் வெல்கம் ஆஃபர் (Jio Welcome Offer) பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த 5ஜி டேட்டாவானது, உங்களது திட்டத்தின் டேட்டாவில் இருந்து கழிக்கப்படாது. முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆகவே, டேட்டாவை பற்றிய கவலையே இந்த திட்டத்தில் இருக்காது. அதேபோல நளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த திட்டத்தில் செய்து கொள்ளலாம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice Call) சலுகையை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வளவு சலுகைகள் போக ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகிய ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 90 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. ஆகவே, இதற்கான மாதாந்திர செலவானது, ரூ.249ஆக மட்டுமே இருக்கிறது. இப்போது, ஏர்டெல் திட்டத்தின் சலுகைகளை பார்ப்போம். ஏர்டெல் ரூ 779 திட்ட விவரங்கள் (Airtel Rs 779 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் (Airtel Prepaid Plan) 90 நாட்கள் வேலிடிட்டி, டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல் கூடுதலாக பல்வேறு சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், தினசரி 1.5 ஜிபி டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. ஆகவே, மொத்தமாக 135 ஜிபி டேட்டா கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. இந்த திட்டத்திலும், 2 ஜிபி தினசரி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல ஏர்டெல் 5ஜி டேட்டா சேவை கிடைக்கும் பகுதிகளில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது.

முந்தைய திட்டத்தைப் போலவே, நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். அதேபோல அன்லிமிட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகைகளை பெற்று கொள்ளலாம். இந்த சலுகைகள் போக அப்பல்லோ 24/7 சர்கிள் மெம்பர்ஷிங் மூன்று மாதங்களுக்கு கொடுக்கப்படுகிறது. ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் சலுகை கிடைக்கிறது.

எந்த திட்டம் பெஸ்ட்? இந்த சலுகைகளை வைத்து பார்க்கையில் எது பெஸ்ட் திட்டம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். ஜியோவில் தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அப்படியானால், 1.5 ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்லைவிட 45 ஜிபி டேட்டா கூடுதலாக கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், ரூ.30 விலைக்குறைவாக ஜியோ திட்டம் கிடைக்கிறது. ஆகவே, ஜியோவே பெஸ்ட் திட்டத்தை கொடுக்கிறது.

Leave a Comment

error: Content is protected !!