நாளை தமிழகத்தில் பட்ஜெட் 2024 வெளியான முக்கிய தகவல் Tamil Nadu Budget 2024 Important News Released

நாளை தமிழகத்தில் பட்ஜெட் 2024 வெளியான முக்கிய தகவல்

Tamil Nadu Budget 2024 Important News Released

Tamil Nadu Budget 2024 Important News Released நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை காலை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Tamil Nadu Budget 2024 Important News Released
Tamil Nadu Budget 2024 Important News Released

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்.12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவிஉரையுடன் தொடங்கியது. ஆளுநர் தமிழக அரசு தயாரித்து அளித்த உரையின் முதல் பத்தியை மட்டும்படித்த நிலையில், கூடுதலாக இணைத்து படித்தவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. தமிழக அரசு தயாரித்து அளித்த தமிழ், ஆங்கில உரைகள் மட்டும்அவைக்குறிப்பில் இடம்பெறும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

இதைத்தொடர்ந்து, அன்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் முதல்வர் பதிலுரை ஆகியவை பிப்.15-ம் தேதிவரை நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி பிப்.13-ம் தேதிஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. 14–ம் தேதியும் விவாதம் தொடர்ந்து நடைபெற்ற நிலையில், பிப்.15–ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.

இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் நாளை (பிப்.19) காலை 10 மணிக்கு கூடுகிறது. அப்போது, 2024–25-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை, நிதியமைச்சர் தங்கம்தென்னரசு தாக்கல் செய்கிறார். தொடர்ந்து, பிப்.20–ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார்.

கடந்தாண்டு மார்ச் மாதம் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல்செய்யப்பட்டு, தொடர்ந்து துறைகள்தோறும் மானியகோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று, துறைகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு வரும்மார்ச் மாதம் மக்களவை பொதுத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டால், நடத்தை விதிகள் அமலாகிவிடும். அதன்பின் மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடவோ, செயல்படுத்தவோ இயலாது. எனவே, தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய அறிவிப்புகளை வெளியிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படியே, இந்தாண்டு பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. மேலும் வரும் நிதியாண்டுக்கான துணை மானிய கோரிக்கைகளையும் பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். பொது பட்ஜெட், வேளாண்பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து, பிப்.20–ம் தேதி முதலே 2 பட்ஜெட்கள் மீதான விவாதமும் தொடங்குகிறது. பிப்.21-ம் தேதி காலை மற்றும் மாலை என 2 வேளைகளும் பட்ஜெட்கள் மீதான விவாதம் நடைபெறுகிறது. அதன்பின், பிப்.22–ம்தேதி விவாதத்துக்கு இரு அமைச்சர்களும் பதிலளிக்கின்றனர். தொடர்ந்து, நிதி ஒதுக்கத்துக்கானசட்ட முன்வடிவு தாக்கல் செய்யப் பட்டு நிறைவேற்றப்படுகிறது.

தங்கம் தென்னரசின் முதல் பட்ஜெட்:

கடந்தாண்டு பட்ஜெட்டில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், தேர்தலை முன்னிறுத்தி புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர, இந்தாண்டு நிதி யமைச்சராக தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment

error: Content is protected !!