நாளை தமிழக பட்ஜெட் 2024 சட்டசபை கூட்டத்தொடர் பற்றிய முக்கிய தகவல் Tamilnadu Budget 2024 New Announced

நாளை தமிழக பட்ஜெட் 2024 சட்டசபை கூட்டத்தொடர் பற்றிய முக்கிய தகவல்

Tamil Nadu Budget 2024 New Announced

Tamilnadu Budget 2024 New Announced மத்திய பட்ஜெட் கடந்த 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை ஆளுநர் உரையுடன் தொடங்க இருக்கிறது. நடப்பாண்டில் தொடங்கும்  முதல் கூட்டத் தொடர் இதுவாகும்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Tamil Nadu Budget 2024 New Announced
Tamil Nadu Budget 2024 New Announced

இதற்காக காலை 9.57 மணிக்கு ஆளுநர் ஆர் என் ரவி சட்டப்பேரவை வளாகத்துக்கு வருவார், அவரை  சிவப்புக் கம்பளம் உள்ள பகுதியில்  சபாநாயகர் அப்பாவு வரவேற்று உரை நிகழ்த்த அழைப்பார். காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்என் ரவி உரையை  ஆங்கிலத்தில் நிகழ்த்த இருக்கிறார்.   ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிக்க இருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, அலுவல் ஆய்வு குழு கூடி, பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்து அறிவிக்கும்.

வரும் 19ஆம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறது. அன்றைய தினம் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். கவர்னர் உரை நிகழ்ச்சியை  டிடி தமிழ் நியூஸ் மூலம் நேரடியாக பொதுமக்கள் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tamil Nadu Budget 2024 New Announced

இந்த கூட்டத்தொடரில் சட்டம் – ஒழுங்கு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.கடந்த ஆண்டு சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, தமிழ்நாடு அரசு தயாரித்து அளித்த உரையில் சிலவற்றை தவிர்த்தும், சிலவற்றை சேர்த்தும் வாசித்தார்.

Tamil Nadu Budget 2024 New Announced

இதனால், ஆளுநர் இருக்கும்போதே, அவருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் முன்மொழியப்பட்டது. அப்போது, ஆளுநர் அவையில் இருந்து வெளியேறிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தாண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

error: Content is protected !!