மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 கூட்டத் தொடரில் முக்கிய அறிவிப்பு! Magalir Urimai Thogai Rs.1000 Announcement TN Assembly

மகளிர் உரிமைத் தொகை ரூபாய் ஆயிரம் கூட்டத் தொடரில் முக்கிய அறிவிப்பு!

Magalir Urimai Thogai Rs.1000 Announcement TN Assembly

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

 Magalir Urimai Thogai Rs.1000 Announcement TN Assembly மகளிர் உரிமைத் தொகை ரூபாய் ஆயிரம் கூட்டத் தொடரில் முக்கிய அறிவிப்பு. தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று துவங்கியிருக்கும் நிலையில் ஆளுநர் உரையை வாசித்த சபாநாயகர் அப்பாவு அரசின் திட்டங்களை பெருமிதமாக கூறியுள்ளார்.

Magalir Urimai Thogai Rs.1000 Announcement TN Assembly
Magalir Urimai Thogai Rs.1000 Announcement TN Assembly

சட்டசபை கூட்டத்தொடர்:

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று ஆளுநர் உரையுடன் காலை 10 மணிக்கு தொடங்கியது. அந்த உரையில் உண்மைக்கு புறம்பான சில தகவல்கள் இருந்த காரணத்தினால் வாசிக்க மறுப்பு தெரிவித்து இரண்டு நிமிடங்களிலேயே ஆளுநர் அவரது உரையை நிறைவு செய்துள்ளார். இதனை அடுத்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு அவர்கள் வாசித்துள்ளார்.

அதாவது, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு ஏகப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இந்தியாவிலேயே காலை சிற்றுண்டி திட்டம் தமிழகத்தில் தான் முறைப்படி செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் மூலமாக லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருவதாகவும் உரையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதனை அடுத்து, தேர்தல் வாக்குறுதியாக வழங்கப்பட்ட இலவச பேருந்து திட்டம், குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் அனைத்தும் முறைப்படி செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளார். மேலும், இந்த சட்டசபை கூட்டத்தொடர் பிப்ரவரி 22ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Leave a Comment

error: Content is protected !!