தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு பறவை காய்ச்சல் அலார்ட்!!.. சுகாதாரத்துறை எச்சரிக்கை!.. Bird flu Alert for 5 Districts in Tamil Nadu Health Department Alert

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு பறவை காய்ச்சல் அலார்ட்!!.. சுகாதாரத்துறை எச்சரிக்கை!..

Bird flu Alert for 5 Districts in Tamil Nadu Health Department Alert

Bird flu Alert for 5 Districts in Tamil Nadu Health Department Alert 5 மாவட்டங்களுக்கு பறவைக்காய்ச்சல் அலெர்ட்.திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு பறவை காய்ச்சல் அலெர்ட்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Bird flu Alert for 5 Districts in Tamil Nadu Health Department Alert
Bird flu Alert for 5 Districts in Tamil Nadu Health Department Alert

ஆந்திர மாநிலம் நெல்லூரில் கடந்த 17ஆம் தேதி 10 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் உயிரிழந்துள்ளது.பறவை காய்ச்சல் காரணமாகவே பறவைகள் உயிரிழந்திருப்பது ஆய்வில் உறுதி.5 அண்டை மாவட்டங்களிலும் தீவிரமாக கண்காணிக்கும் படி தமிழக சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன. இதற்கு பறவைக்காய்ச்சல் பரவலே காரணம் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது மனிதர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஆந்திர எல்லையோரத்தில் உள்ள திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களின் சுகாதாரத் துறை துணை இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Bird flu Alert for 5 Districts in Tamil Nadu Health Department Alert

அதில், இந்த 5 மாவட்டங்களிலும் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் பறவைக் காய்ச்சல் போன்ற பாதிப்புகளுடன் யாராவது வந்துள்ளார்களா என கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Bird flu Alert for 5 Districts in Tamil Nadu Health Department Alert

பறவைக்காய்ச்சல் பாதிப்புகளை எதிர்கொள்ள மருத்துவமனைகளில் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!