Maha Shivaratri 2024 சகல செல்வங்களையும் வழங்கும் மகா சிவராத்திரில் கடைப்பிடிக்க வேண்டியவைகள் Maha Shivaratri 2024 Vazhipadu Murai Tamil

Maha Shivaratri 2024 Vazhipadu Murai Tamil

Maha Shivaratri 2024 சகல செல்வங்களையும் வழங்கும் மகா சிவராத்திரில் கடைப்பிடிக்க வேண்டியவைகள்

Maha Shivaratri 2024 Vazhipadu Murai Tamil மாசி மாதத்தில், தேய்பிறை சதுர்த்தசி நாளில் வருகிற மகா சிவராத்திரி கூடுதல் புண்ணியங்களையும் பலன்களையும் தரக்கூடியது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

சிவராத்திரி நன்னாளில் கண்விழித்து சிவபெருமானை வழிபட்டால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் விலகும்; கர்ம வினைகள் யாவும் நீங்கும் என விவரிக்கிறது சிவ புராணம்.

இந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரி 

சிவராத்திரி விரதம் இருப்பதால், தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கும் என்பது ஐதீகம்.

Maha Shivaratri 2024 Vazhipadu Murai Tamil
Maha Shivaratri 2024 Vazhipadu Murai Tamil

அம்பிகைக்கு நவராத்திரி… ஈசனுக்கு ஒரு ராத்திரி… அது சிவராத்திரி

மகா சிவராத்திரி விரதம்      

மகாசிவராத்திரி 2024 அன்று விரதம் இருப்பவர்கள், சிவராத்திரிக்கு முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். இயலாதவர்கள், இரவுப் பொழுதில் எளிமையான உணவை எடுத்துக் கொள்ளலாம்.

மகாசிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து, வீட்டில் உள்ள சிவபெருமானின் படத்திற்கு ஆராதனை செய்து வழிபட வேண்டும். தொடர்ந்து, அருகில் உள்ள சிவாலயத்துக்கு சென்று தரிசனம் மேற்கொள்ள வேண்டும். மாலையில் மீண்டும் குளித்துவிட்டு, சிவபூஜையை இல்லத்தில் செய்ய வேண்டும். அன்று இரவு அருகில் உள்ள சிவன் கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு வழிபடுவது மகத்துவம் மிக்கது.

மகாசிவராத்திரி 2024

இந்த பூஜையின் போது ’சிவாய நம’ என்றோ ‘நமசிவாய’ என்றோ மந்திரத்தை மனதில் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

பூஜையின் போது, சிவனுக்கு உகந்த வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது நற்பலனைத் தரும். அன்றைய தினம் இரவில் உறங்காமல், நான்கு வேளையும் நடைபெறும் பூஜைகளை தரிசித்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம், தயிர்சாதம் என ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்து சிவனை வழிபட வேண்டும். பிறகு, நம்மால் முடிந்த தானங்களை ஏழைகளுக்கு வழங்கி, விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

சிவராத்திரி முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், ஒவ்வொரு ஜாம பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

சிவராத்திரி விரதம் இருப்பதால், தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கும் என்பது ஐதீகம்.

சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடைப்பிடித்தால் நம் இல்லத்தில் உள்ள தரித்திரம் விலகும். வீட்டில் சுபிட்சம் குடிகொள்ளும். இல்லத்தில் தனம், தானியம் பெருகும். முக்கியமாக, முக்திப் பேறு அடையலாம் என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.

விரதத்தை முடிக்கும் போது செய்ய வேண்டியவை

விரதத்தை முடிக்கும் போது சரியான உணவை உட்கொள்வது அவசியம். விரதத்தை நிறைவு செய்யும் போது காய்கறிகள், புரதம், கொழுப்பு, மாவுச்சத்து மற்றும் சர்க்கரை நிறைந்துள்ள உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் விரதத்தை முடிக்க முதலில் இனிப்பை எடுத்துக்கொள்ளக்கூடாது.

விரதத்தை எளிதாக்க சில டிப்ஸ்

1. முறையான திட்டமிடுதலுடன் தொடங்க வேண்டும்.

2. உங்களை நீரேற்றத்துடன் வைத்திருக்க தண்ணீர் அதிகமாக அருந்தவும்.

3. நீங்கள் சாப்பிடும் போது மெதுவாகவும் கவனமாகவும் சாப்பிட வேண்டும்.

4. ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.

5.  பூண்டு, வெங்காயம், வாழைக்காய், பெருங்காயம் ஆகியவை சேர்க்காத உணவுகளை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல் நல்லது.

6. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே உணவை சமைத்து வையுங்கள்.

7. உங்கள் இரவு உணவில் புரதம், நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்புகள் நல்ல அளவில் இருக்க வேண்டும்.

8. விரதத்தின் போது குளுக்கோஸ் தண்ணீர், கிரீன் டீ, சூப் போன்றவையும் பருகலாம். கிரீன் டீ ‘ஆன்டிஆக்ஸிடென்ட்’ ஆகச் செயல்பட்டு உடலுக்கு நன்மை செய்யும். போதுமான அளவு காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்வது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுச்சத்துகள் கிடைக்க வழி செய்கிறது.

9. பழச்சாறு, மோர், பானகம், எலுமிச்சைச்சாறு, இளநீர் போன்ற நீர்ச்சத்து பானங்களை போதுமான இடைவேளைகளில் அருந்தலாம். வேக வைத்த காய்கறிகள், முளை கட்டிய தானியங்கள், சோயா பீன்ஸ், சுண்டல், நவதானியங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். ஒரு கப் தானியக் கஞ்சி அல்லது ஓட்ஸ் கஞ்சி குடிக்கலாம். இது உடலுக்கு சக்தி இழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

10. உணவு, பசி, மனம் மூன்றுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எந்த வகையான உணவுகள் உண்ணுகிறோமோ அதற்கேற்ற எண்ணங்களே வரும். வயிறு காலியாக இருக்கும் போதுதான் பொறாமை, கோபம், அகத்தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படும். உங்கள் முகப்பொலிவையும் பாதிக்கும். உங்கள் விரத முறையை மேலும் நிலையானதாக மாற்ற இந்தப் பரிந்துரைகளைப் பயன்படுத்தவும்” 

Leave a Comment

error: Content is protected !!