தமிழகத்தில் நாளை (பிப் 1 ) 11 பள்ளிகளுக்கு விடுமுறை
வெளியான முக்கிய செய்தி!..
Local Holiday For 11 schools in Kanchipuram
Local Holiday For 11 schools in Kanchipuram தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு பொதுவாக விடுமுறையானது தமிழகம் முழுவதுமாகவும் மற்றும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சிறப்பு வாய்ந்த பண்டிகைகள் மற்றும் திருவிழா காலங்களில் அந்தந்த மாவட்டங்களுக்கு விடுமுறையும் இன்னும் ஒரு சில பகுதிகளில் அந்த குறிப்பிட்ட வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறையானது விடுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 பள்ளிகளுக்கு கச்சபேஸ்வரர் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெறுவதை ஒட்டி பிப்ரவரி 1-ம் தேதி விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பற்றி முழுமையான தகவலை நாம் இப்போது காணலாம்.
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
தமிழகத்தின் 11 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை தினமாக அறிவித்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
Local Holiday For 11 schools in Kanchipuram
பள்ளிகள் விடுமுறை:
தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டம் கோயில்களின் நகரமாக விளங்கி வருகிறது. அங்கு பல்வேறு புராதான சிறப்புமிக்க கோயில்களும் உள்ளது. அதில் முக்கியமாக கச்சபேஸ்வரர் திருக்கோவில் சிறப்புமிக்க ஒன்றாக விளங்கி வருகிறது காஞ்சி கச்சபரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா பிப்ரவரி 1ஆம் தேதி ஆன வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளது.
இதனால் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் 11 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு வெளியிட்டுள்ளார். இதனால் நாளை ஒரு தினம் மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதியில் செயல்பட்டு வரும் 11 பள்ளிகளுக்கு விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் மாற்று வேலைநாள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.