நீங்கள் மறந்த UAN நம்பரை எவ்வாறு தெரிந்து கொள்வது? Know Your UAN, How to find your forgotten UAN number?

Know Your UAN

நீங்கள் மறந்த UAN நம்பரை எவ்வாறு தெரிந்து கொள்வது?

நீங்கள் மறந்த UAN நம்பரை எவ்வாறு தெரிந்து கொள்வது? Know Your UAN : இன்றைய காலகட்டத்தில் ஒருவர் தொடர்ந்து ஒரே நிறுவனத்தில் பணிபுரிவது என்பது கடினமான செயலாக உள்ளது எனவே ஒருவர் தன்னுடைய ஊதியம் மற்றும் தன்னுடைய தேவைகளை கருத்தில் கொண்டு தாங்கள் விரும்பும் அடுத்தடுத்த நிறுவனங்களுக்கு பணிகள் செல்கின்றனர்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

இவ்வாறு பல்வேறு நிறுவனங்களில் அவர்கள் பணிக்கு சென்றாலும் அவர்களுக்கு வருங்கால வைப்பு நிதியானது இந்த சலுகையை வழங்கி வருகிறது ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் எத்தனை நிறுவனங்களுக்கு வேண்டுமானாலும் மாறலாம் அல்லது மீண்டும் அதே நிறுவனத்துக்கு வந்து இணையலாம் எவ்வாறு வேலை செய்தாலும் அவர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான யூ ஏ என் நம்பர் என்பது மாறாத ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை வருங்கால வைப்பு நிதியானது ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.

Know Your UAN
Know Your UAN

How to find your forgotten UAN number?

எம்ப்ளாயிகளின் இந்த பயணத்தின் பொழுது அவர்களது பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்வதில் எம்பிளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் நிறுவனம் (Employees’ Provident Fund Organisation – EPFO) முக்கிய பங்கு வகிக்கிறது. EPFO சிஸ்டத்தின் ஒரு முக்கியமான அம்சமாக யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் அமைகிறது (UAN). இந்த 12 இலக்க அடையாள எண்ணானது ஒருவர் எத்தனை வேலை மாற்றங்கள் செய்தாலும் நிரந்தரமாக மாறாமல் இருக்கக்கூடியது. ஆதார் எண்ணை போலவே UAN என்பது PF தொடர்பான செயல்பாடுகளுக்கு அத்தியாவசியமானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக எம்ப்ளாயிகள் அவர்களது UAN எண்களை தொடர்ந்து கண்காணித்து கொண்டே வரவேண்டும்.

எனினும், வேலை மாற்றங்களுக்கு இடையே எம்ப்ளாயிகள் அவர்களது UAN எண்களை அவ்வப்போது மறந்துவிடுகின்றனர். எனினும் நல்ல செய்தி என்னவென்றால், EPFO-இன் ஆன்லைன் சேவைகள் மூலமாக நீங்கள் வீட்டிலிருந்தபடியே உங்களது UAN எண்ணை மீட்டெடுத்துக் கொள்ளலாம்.

உங்களது UAN எண்ணை ஆன்லைனில் தெரிந்துகொள்ள பின்வரும் எளிய படிகளை பின்பற்றவும்:

அதிகாரப்பூர்வ EPFO வெப்சைட்டுக்கு செல்லவும்:  https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/

சர்வீசஸ் என்ற பிரிவின் கீழ் உள்ள “For Employees” என்ற ஆப்ஷனுக்கு சென்று “Member UAN/Online Service (OCS/OTCP)” என்பதை கிளிக் செய்யவும்.

திரையிடப்படும் புதிய பக்கத்தில் வலது புறத்தில் உள்ள முக்கியமான லிங்குகளின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள “Know your UAN” என்பதை கிளிக் செய்யவும்.

உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் மற்றும் கேப்சாவை என்டர் செய்து, பின்னர் OTP பெறவும் என்பதை கிளிக் செய்யவும்.

உங்களது மொபைல் நம்பரில் பெறப்பட்ட OTP ஐ வேலிடேட் செய்யவும்.

புதிய பக்கத்தில் உங்களது பெயர், பிறந்த தேதி, மெம்பர் ID, ஆதார் அல்லது PAN நம்பர் மற்றும் கேப்சாவை என்டர் செய்யவும். “Show My UAN” என்பதை கிளிக் செய்யுங்கள்.

உங்களது UAN நம்பர் உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதுவரை UAN நம்பரை ஆக்டிவேட் செய்யாத நபர்கள் அதற்கான செயல்முறை பின்வருமாறு:

EPFO வெப்சைட்டிற்கு சென்று சர்வீசஸ் மெனுவின் கீழ் “For Employee” என்பதை கிளிக் செய்யுங்கள்.

சர்வீசஸ் பக்கத்தில் உள்ள “Member UAN/Online Service” என்பதை தேர்வு செய்யுங்கள்.

லாகின் பக்கத்தில் “Activate Universal Account Number (UAN)” என்பதை கிளிக் செய்யுங்கள்.

உங்களது UAN நம்பர், பிறந்த தேதி, மொபைல் நம்பர் மற்றும் கேப்சாவை நிரப்பவும். “Get Authorization Pin” என்பதை கிளிக் செய்யுங்கள்.

உங்களது மொபைல் நம்பரில் பெறப்பட்ட OTP ஐ என்டர் செய்து, விவரங்களை வெரிஃபை செய்த பிறகு விதிகளை ஏற்றுக்கொண்டு உங்களது UAN நம்பரை ஆக்டிவேட் செய்யுங்கள்.

UAN ஆக்டிவேஷன் ஆவதற்கு 6 மணி நேரம் ஆகும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஆன்லைன் செயல்முறைகளை முடிப்பதற்கு உங்களது PF அக்கவுண்டுடன் உங்களது மொபைல் நம்பரை கட்டாயமாக இணைத்திருக்க வேண்டும். ஏனெனில் வெரிஃபிகேஷன் செயல் முறையில் OTP ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த படிகளை பின்பற்றுவதன் மூலமாக எம்ப்ளாயிகள் எளிமையான முறையில் அவர்களது UAN எண்களை மீட்டெடுக்கலாம்.

 

Leave a Comment

error: Content is protected !!