ஆதார் கார்டில் போன் நம்பர் மாற்றம் செய்யலாம்.. இனி வீட்டில் இருந்த படியே!.. Happy You can change phone number in Aadhaar card at home

You can change phone number in Aadhaar card at home

ஆதார் கார்டில் போன் நம்பர் மாற்றம் செய்யலாம்.. இனி வீட்டில் இருந்த படியே!.

You can change phone number in Aadhaar card at home ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய தகவல் அதாவது ஆதார் கார்டில் மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இனிமேல் அதற்காக எங்கும் அலைய வேண்டாம். வீடு தேடி உங்களுக்கு அதிகாரிகளை அந்த பணிகளை செய்து கொடுப்பார்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
You can change phone number in Aadhaar card at home
You can change phone number in Aadhaar card at home

 

ஆதார் கார்டில் சில தகவல்களை அப்டேட் செய்ய வேண்டும் என்றால் அரசு இணையதளத்தில் பதிவு செய்தால் போதும், அதிகாரிகளே வீடு தேடி வந்து உங்களுக்கு பணிகளை செய்து கொடுப்பர்.

ஆதார் கார்ட்டில் செல்போன் எண், வீட்டு முகவரி, பெயரில் திருத்தம், வயதில் ஏதேனும் திருத்தம் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள இ சேவை மையங்களுக்கு செல்ல வேண்டும். அங்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் சில நேரங்களில் இருக்கும்.

ஆதார் அனைத்துக்குமான ஆதாரமாக விளங்குகிறது. வயதானவர்கள் அப்படிப்பட்ட நீண்ட வரிசையில் நின்று வாங்குவது சிரமம். அது போல் வேலைக்கு செல்வோரும் குறிப்பிட்ட நேரத்தில் போய் வாங்க முடியாத நிலை உள்ளது.

இதனால் பலர் தங்கள் முகவரியை மாற்றாமல் அவதிப்படுகிறார்கள். அரசு நலத்திட்டங்களுக்கான டோக்கன் பெறும் போது கூட ஆதார் முகவரியில் அந்த கார்டுதாரர் இல்லாவிட்டால் பெரும் சிக்கல் ஏற்படும். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அரசு மிகப் பெரிய உதவியை பொதுமக்களுக்கு செய்கிறது. ஆனால் இது இத்தனை நாட்களாக நமக்கு தெரியாமல் இருந்துள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து Film Food Fun Fact என்ற எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: நம் ஆதார் கார்டில் சில தகவல்களை அப்டேட் செய்ய ஆன்லைனிலேயே வசதிகள் வந்து விட்டன. ஆனாலும் மொபைல் நம்பர் சேஞ்ச் பண்ணும் போது ஆன்லைனில் செய்ய முடியாது. அதற்கு ஆதார் சென்டருக்கு நேரில் தான் சென்று கைரேகை வைக்க வேண்டும். ஆனால் அந்த சென்டர்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் வயதானவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் செல்ல முடிவதில்லை.

அதனால் இந்த வெப்சைட்டில் அப்ளை செய்தால் உங்கள் இருப்பிடம் தேடி வந்து அப்டேட் செய்து தருவார்கள். இதுவும் அரசாங்க இணையதளம் தான் இந்திய தபால் துறையினரால் இயக்கப்படுகிறது. தேவை உள்ளவர்கள் பயன் பெற்றுக் கொள்ளலாம். இந்த இணையதளம் மூலம் மேலும் பல சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்.

இணையதள முகவரி
https://ippbonline.com/web/ippb/ippb-customers தேவைப்படும் உங்கள் சொந்தங்களுக்கு இந்த தகவலை தெரியப்படுத்தவும். இவ்வாறு அந்த எக்ஸ் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த லிங்கிற்கு சென்றால் அதில் door step banking service request form என்பதை ஓபன் செய்தால் அதில் நிறைய ஆப்ஷன்கள் உள்ளன.

அதில் Aadhar Mobile Update என்பதை கிளிக் செய்து அதில் கேட்கப்பட்ட தகவல்களை கொடுக்க வேண்டும். அதில் Any specific request என இருக்கும். அதில் Aadhar Mobile Update என்ற இடத்தில் செல்போன் எண்ணை கொடுத்துவிட்டு சப்மிட் பட்டனை அழுத்தினால் போதும். Your Submission has been Successful என வரும். நாம் கொடுத்த தகவல்கள் எல்லாம் தபால் அலுவலகத்திற்கு செல்லும். அங்கிருந்து தபால்காரர் வீட்டுக்கே வந்து கைரேகையை வாங்கிக் கொண்டு நம் ஆதாரில் உள்ள செல்போன் எண்ணை மாற்றி தருவார்.

ஆன்லைனில் ஆதார் அட்டை விவரங்களை எவ்வாறு புதுப்பிப்பது?

உங்கள் பெயர், பிறந்த தேதி, முகவரி மற்றும் பாலின விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்கலாம். இருப்பினும், மாற்றங்களைச் செய்ய உங்கள் மொபைல் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும்.

பெயர், முகவரி, பாலினம் மற்றும் பிறந்த தேதி விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்கும் செயல்முறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது:

You can change phone number in Aadhaar card at home
You can change phone number in Aadhaar card at home

aadhaar phone number change tamil

படி 1 – UIDAI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப்  பார்வையிடவும் 

படி 2 –  ‘ புதிய மக்கள்தொகை தரவு மற்றும் நிலையை சரிபார்க்கவும் ‘ என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் ஆதார் மற்றும் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐப் பயன்படுத்தி போர்ட்டலில் உள்நுழைக.

படி 3 –  ஆதார் எண் r மற்றும் கேப்ட்சாவை உள்ளிடவும் .

படி 4 –  ‘ Send OTP ‘ என்பதைக் கிளிக் செய்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐ உள்ளிடவும்.

படி 5 –  அடுத்து, ‘புதுப்பிப்பு மக்கள்தொகை தரவு’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 6 –  அடுத்த பக்கத்தில் தொடர்புடைய விருப்பங்களைத் தேர்ந்தெடுத்து, ‘ தொடரவும் ‘ என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 7 –  அடுத்த பக்கத்தில் மாற்றங்களைச் செய்யலாம். தொடர்புடைய ஆவணத்தை அடுத்து பதிவேற்றவும்.

படி 8 –  அடுத்து, நீங்கள் உள்ளிட்ட விவரங்களை மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

படி 9 –  அடுத்து, மாற்றம் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும். முகவரி மாற்றத்தின் நிலையைக் கண்காணிக்க, புதுப்பிப்பு கோரிக்கை எண்ணைப் (URN) பயன்படுத்தலாம் .

Leave a Comment

error: Content is protected !!