5 வருடத்தில் 15 லட்சம் பெறும் போஸ்ட் ஆபீஸ் சூப்பர் திட்டம்..MIS Post Office Scheme 5 years Income for 15 Lakhs

5 வருடத்தில் 15 லட்சம் பெறும் போஸ்ட் ஆபீஸ் சூப்பர் திட்டம்..

MIS Post Office Scheme 5 years Income for 15 Lakhs

MIS Post Office Scheme 5 years Income for 15 Lakhs 5 வருடத்தில் 15 லட்சம் பெறும் போஸ்ட் ஆபீஸ் சூப்பர் திட்டம் அஞ்சல் அலுவலகத்தால் நடத்தப்படுகிறது, இதன் மூலம் கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து ஆண்டுக்கு ரூ.59,400 சம்பாதிக்கலாம். இந்தத் திட்டத்தின் பெயர் போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமானத் திட்டம் (எம்ஐஎஸ்), இதன் மூலம் நீங்கள் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானத்தைப் பெறுவீர்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
MIS Post Office Scheme 5 years Income for 15 Lakhs
MIS Post Office Scheme 5 years Income for 15 Lakhs

post office money scheme 2024

தபால் நிலையங்களில் மக்களுக்கு பயன்படும் வகையில் பல வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் மாதாந்திர வருமான திட்டம் (MIS). இந்த திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்தால், மாதம்தோறும் வருமானம் பெற முடியும். மாதாந்திர வருமான திட்டத்தில் ஒருவர் சிங்கிள் கணக்கு மூலம் அதிகப்பட்சமாக ரூ.9 லட்சம் வரையும், கூட்டு கணக்கு மூலம் அதிகப்பட்சமாக ரூ.15 லட்சம் வரையும் முதலீடு செய்யலாம். எந்த கணக்கில் நீங்கள் டெபாசிட் செய்தாலும் உங்களுக்கு மாதம்தோறும் அதற்கு உண்டான வட்டியை பெறலாம். தற்போது இந்த திட்டத்திற்கு 7.4 சதவிகிதம் வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

ஐந்து வருட காலத்திற்கு டெபாசிட் செய்யப்படும் இந்த தொகையின் மூலம், தொடர்ச்சியாக ஐந்து வருட காலத்திற்கு இதற்கு உண்டான வட்டி வருமானத்தை நீங்கள் பெறலாம். இந்த டெபாசிட் தொகை முதிர்வடைந்ததும் உங்களுக்கு திருப்பி தரப்படும். ஆனால் ஐந்து வருடத்திற்கு முன்பே உங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டால், இதிலிருந்து பணத்தை பெறுக்கொள்ளும் வசதியும் உள்ளது. எனினும் இதற்கென சில விதிமுறைகள் உள்ளன.

மாதாந்திர வருமான திட்டத்தில் 5 வருட காலத்திற்கு முன்பே பணத்தை திரும்ப பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? : 

இந்த திட்டத்தில் டெபாசிட் தொகை முதிர்வடைவதற்கு முன்பே பணத்தை திரும்ப பெற வேண்டும் என நினைத்தால் முதலீடு செய்த முதல் வருடத்தில் அதை பெற முடியாது. ஒரு வருடத்திற்கு பிறகுதான் பணத்தை திரும்ப பெறும் வசதி உங்களுக்கு கிடைக்கும். அப்போதும் கூட உங்களின் டெபாசிட் தொகையிலிருந்து குறிப்பிட்ட அளவு பணம் அபராதமாக வசூலிக்கப்படும்.

ஒரு வருடத்திற்கும் மூன்று வருடத்திற்கும் இடைபட்ட காலத்தில் பணத்தை திரும்ப பெற நினைத்தால், டெபாசிட் தொகையிலிருந்து 2 சதவிகிதம் பணம் அபராதமாக வசூலிக்கப்படும். ஒருவேளை கணக்கு தொடங்கி மூன்று வருட காலத்திற்குப் பிறகு பணத்தை திரும்ப பெற நினைத்தால், டெபாசிட் தொகையிலிருந்து ஒரு சதவிகிதம் அபராதமாக பிடித்தம் செய்யப்படும்.

MIS Post Office Scheme 5 years Income for 15 Lakhs
MIS Post Office Scheme 5 years Income for 15 Lakhs

கால நீட்டிப்பிற்கான விதிமுறைகள் :

பொதுவாக ஃபிக்சட் டெபாசிட், வருங்கால வைப்பு நிதி திட்டம் போன்றவற்றில் இன்னும் சில காலங்களுக்கு நம்முடைய கணக்கை நீட்டித்துக்கொள்ள முடியும். ஆனால் தபால் நிலைய மாதாந்திர வருமான திட்டத்தில் அப்படி எந்த வசதியும் இல்லை. இந்த திட்டத்தில் மேலும் பலன்களை பெற வேண்டுமென்றால், முதிர்வடைந்த பிறகு புதிதாக இன்னொரு கணக்கை திறப்பது ஒன்றுதான் வழி.

Whatsapp Chennal Link Join

Jandan account holders SBI Bank is offering two lakhs Super Scheme Tamil

Leave a Comment

error: Content is protected !!