8.2% வட்டியை வழங்கும் போஸ்ட் ஆபீஸ் இன் அருமையான 5 திட்டங்கள்!! Post Office High Interest 5 Schemes Full Details tamil

8.2% வட்டியை வழங்கும் போஸ்ட் ஆபீஸ் இன் அருமையான 5 திட்டங்கள்!!

Post Office High Interest 5 Schemes Full Details tamil

Post Office High Interest 5 Schemes Full Details tamil போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் ஆனது வட்டியை அதிகமாக வழங்கக்கூடிய நாம் அதிகமாக சேமிக்க கூடிய ஒரு வங்கியாகவும் விளங்குகிறது .எனவே மக்கள் அனைவரும் போஸ்ட் ஆபீசில் அதாவது அஞ்சலகத்தில் சேமிப்பு வைத்துக் கொள்வது என்பது ஒரு முக்கியமான அம்சமாக கருதுகிறார்கள் .அதனை ஒட்டி அதிக வட்டியை தரக்கூடிய ஐந்து திட்டங்களை பற்றி தான் நம் கீழ்கண்டவற்று தெளிவாக காணப் போகிறோம். அதைப் பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .மக்கள் அறிந்து அதற்கு ஏற்றவாறு பயன்பெறுங்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Post Office High Interest 5 Schemes Full Details tamil
Post Office High Interest 5 Schemes Full Details tamil

போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் பாரம்பரிய முதலீட்டு கருவிகளாக உள்ளன. தற்போது போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள், கடந்த காலங்களைப் போல் இல்லாமல் முதலீடுகளுக்கு வங்கிகளுக்கு ஈடான வட்டி விகிதத்தை தருகின்றன.

சில திட்டங்கள் வங்கிகளுக்கே சவால்விடும் வகையில் உள்ளன. உதாரணமாக, வங்கி சேமிப்பு கணக்கு வட்டி விகிதங்கள், போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டத்தை விட குறைவாகும்.

தற்போது போஸ்ட் ஆபிஸின் அதிக வட்டி வழங்கும் சிறந்த 5 திட்டங்களை பார்க்கலாம்.

1) பி.பி.எஃப்

பி.பி.எஃப் (PPF) ஒரு ஓய்வூதிய கார்பஸை உருவாக்க மிகவும் பொருத்தமானது. இது 15 வருட லாக்-இன் காலத்துடன் 7.1 சதவீத வட்டியை வழங்குகிறது. குறைந்தபட்ச பங்களிப்பு ரூ. 500 மற்றும் ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.1.5 லட்சம். இதில், ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

Post Office High Interest 5 Schemes Full Details tamil

2) கிஷான் விகாஸ் பத்ரா

18 வயதுக்கு மேற்பட்ட எவரும் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ இந்தத் திட்டத்தைத் தொடங்கலாம். குறைந்தபட்ச முதலீடு ரூ. 1,000, மேல் வரம்பு இல்லை. இது ஒரு குறுகிய கால முதலீட்டு திட்டமாகும், இது 30 மாத முதிர்வு மற்றும் 7.5 சதவீத வட்டியை வழங்குகிறது.

Post Office High Interest 5 Schemes Full Details tamil

3) தேசிய சேமிப்பு சான்றிதழ்

தேசிய சேமிப்பு சான்றிதழ் எனப்படும் (NSC) 5 ஆண்டுகள் முதிர்வு காலத்தைக் கொண்டுள்ளது. 7.7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.

இது ஓய்வு பெறும் அல்லது ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கு மிகவும் பொருத்தமானது. குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ 1,000, அதிகபட்ச வரம்பு இல்லை.

Post Office High Interest 5 Schemes Full Details tamil

4) சுகன்யா சம்ரிதி யோஜனா (செல்வ மகள் சேமிப்பு திட்டம்)

பெண் குழந்தைகளுக்கான பிரத்யேகமான இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீட்டு காலம் 15 ஆண்டுகள் ஆகும். முதிர்வு காலம் 21 ஆண்டுகள் ஆகும்.

இந்தத் திட்டத்தில் ரூ.250 முதலீட்டில் கணக்கு தொடங்கலாம். இந்தத் திட்டம் 8.2 வட்டியை வழங்குகிறது. SSY கணக்கு, வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் ரூ. 1.5 லட்சம் வரையிலான விலக்குகளுக்குத் தகுதியுடையது,

Post Office High Interest 5 Schemes Full Details tamil

5) மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம்

SCSS என்பது அரசாங்கத்தால் வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டமாகும், இதில் வயதானவர்கள் ரூ. 30 லட்சம் வரை பங்களிக்கலாம்.

Post Office High Interest 5 Schemes Full Details tamil

இதில், குறைந்தபட்ச முதலீடு 1,000 ரூபாய் ஆகும். ஐந்து வருடங்களில் முதிர்ச்சியடைந்தாலும், மூன்று வருட இடைவெளியில் ஒருவர் கணக்கை காலவரையின்றி நீட்டிக்க முடியும். இது ஆண்டுதோறும் 8.2 சதவீதம் வட்டியை வழங்குகிறது.

Leave a Comment

error: Content is protected !!