7.75 % வட்டி வீதத்தை உயர்த்தி உள்ளது IDBI பேங்க் உடனே செக் பண்ணுங்க!!.. IDBI Bank Increase Interest 7.75%

7.75 % வட்டி வீதத்தை உயர்த்தி உள்ளது IDBI பேங்க் உடனே செக் பண்ணுங்க!!..

IDBI Bank Increase Interest 7.75%

IDBI Bank Increase Interest 7.75% வட்டி வீதத்தை உயர்த்தி உள்ளது ஐடிபிஐ பேங்க் உடனே செக் பண்ணுங்க. ஐ.டி.பி.ஐ வங்கி தனது டெர்ம் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களைத் திருத்தி உள்ளது. இந்தப் புதிய விகிதங்கள் பிப்ரவரி 15, 2024 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
IDBI Bank Increase Interest 7.75%
IDBI Bank Increase Interest 7.75% 

புதிய வட்டி விகிதத்தின்படி, ஐ.டி.பி.ஐ வங்கியானது வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு 7 நாள்கள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 3% முதல் 7% வரை வட்டி விகிதங்களையும், மூத்தக் குடிமக்களுக்கு 3.5% முதல் 7.5% வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகிறது.

மேலும், இந்தப் புதிய வட்டி விகிதங்கள் ரூ.2 கோடிக்கும் குறைவான திரும்ப பெறக் கூடிய டெபாசிட் திட்டங்களுக்கு கொடுக்கப்படுகின்றன.

ஐ.டி.பி.ஐ வங்கி சிறப்பு எஃப்.டி திட்டங்கள்

எண் சிறப்பு திட்டங்கள் பொது (%) மூத்தக் குடிமக்கள் (%)
01 300 நாள்கள் 7.05 7.55
02 375 நாள்கள் 7.1 7.6
03 444 நாள்கள் 7.25 7.75

வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்

ஐ.டி.பி.ஐ வங்கி 5 ஆண்டுகள் வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு பொதுமக்களுக்கு 6.5 சதவீதமும், மூத்தக் குடிமக்களுக்கு 7 சதவீதமும் வட்டி விகிதங்களை வழங்குகிறது.

IDBI Bank Increase Interest 7.75%

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம்

சாதாரண டெபாசிட் திட்டங்களை பொறுத்தவரை ஐ.டி.பி.ஐ வங்கி, 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான டெபாசிட் திட்டங்களுக்கு பொதுமக்களுக்கு 7 சதவீதம் வட்டியும், மூத்தக் குடிமக்களுக்கு 7.50 சதவீதம் வட்டியும் வழங்குகிறது.

10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 4.8 சதவீதம் முதல் 5.30 சதவீதம் வரை வட்டி கிடைக்கின்றது.

IDBI Bank Increase Interest 7.75%

அதேபோல், 61-90 நாள்கள் முதலீடுக்கு 4.5 சதவீதம் முதல் 5 சதவீதம் வரையும், 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 6.8 சதவீதம் முதல் 7.3 சதவீதம் வரை வட்டியும் வழங்கப்படுகிறது.

ஐடிபிஐ வங்கி முன்கூட்டியே மூடப்பட்ட டெபாசிட்டுகளுக்கு பொருந்தக்கூடிய விகிதத்தில் 1% அபராதம் விதிக்கும். இத்தகைய மூடல்களில் ஸ்வீப்-இன்கள் மற்றும் பகுதியளவு திரும்பப் பெறுதல்கள் ஆகியவை அடங்கும்.

Leave a Comment

error: Content is protected !!