பல வங்கி கணக்குக்கு ஒரே போன் நம்பர் வைத்துள்ளீர்களா வருகிறது புதிய மாற்றம் Have you kept the same phone number for multiple bank accounts 2024

பல வங்கி கணக்குக்கு ஒரே போன் நம்பர் வைத்துள்ளீர்களா வருகிறது புதிய மாற்றம்

Have you kept the same phone number for multiple bank accounts இன்று நம்மில் பல பேர் வங்கி கணக்கு ஒருவருக்கு ஒரு வங்கி கணக்கு மட்டுமல்லாமல் பல வங்கிகளில் பல வங்கி கணக்குகளை வைத்துள்ளனர் ஒருவர் குறைந்த பட்சமாக மூன்று நான்கு வங்கி கணக்குகளை சராசரியாக வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒவ்வொருவரும் தாம் விரும்பும் வங்கிகளுக்கு சென்று புதிய வங்கி கணக்குகளை உருவாக்கிக் கொள்கின்றனர் ஆனால் அந்த அனைத்து வங்கி கணக்குகளுக்கும் ஒரே மொபைல் எண்ணை கொடுத்து பராமரிக்கின்றனர் இதனால் ஒருவர் பல வங்கிகளுக்கு சென்று கேஒய்சி வெரிஃபிகேஷன் செட் செய்வது வருகின்றனர் இந்த நடைமுறையை மாற்ற மத்திய அரசானது முடிவு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது அவற்றை முழுமையாக பார்க்கலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Have you kept the same phone number for multiple bank accounts
Have you kept the same phone number for multiple bank accounts
ஒரே மொபைல் நம்பரை வைத்து பல்வேறு பேங்க் அக்கவுண்ட்டை ஓப்பன் செய்து பயன்படுத்தும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது. அதேபோல ஒரேவொரு பேங்கில் பல அக்கவுண்ட்டை ஓப்பன் செய்துவிட்டு பிற்காலத்தில் ஆன்லைன் பேங்கிங் சேவைகளை பெறுவதில் பலரும் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.
இதனால் பேங்க் நிறுவனங்கள், மொபைல் நம்பரில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank of India) மற்றும் மத்திய அரசு இணைந்து மொபைல் நம்பர் மட்டுமல்லாமல், பேங்க் கேஒய்சி வெரிபிகேஷனில் (Bank KYC Verification) பல்வேறு புதிய விதிகளை கொண்டு வர இருக்கிறது.
இந்த புதிய கேஒய்சி விதிகள் (New KYC Rules) வந்தால், புதிய பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் செய்யும் போது நிரப்பப்படும் கேஒய்சி விவரங்களில் மட்டுமல்லாமல், ஏற்கனவே இருக்கும் அக்கவுண்ட்களின் கேஒய்சி விவரங்களிலும் கூடுதல் வெரிபிகேஷன் மற்றும் அப்டேட்கள் கொண்டுவரப்பட அதிக வாய்ப்புள்ளது.
இந்தியாவில் பேங்க் அக்கவுண்ட்கள் விவரங்கள் மற்றும் கஸ்டமர்களின் அடையாளங்களை சரிபார்த்தல், போலியான ஆவணங்களை வைத்து ஓப்பன் செய்யப்பட்ட அக்கவுண்ட்களை அடையாளம் காணுதல், ஜாயின்ட் அக்கவுண்ட்களை முறைப்படுத்துதல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இந்த புதிய கேஒய்சி வெரிபிகேஷன் விதிகளை ஆர்பிஐ கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது.
இந்த கேஒய்சி விதிகளுக்காக நிதிச் செயலாளர் டி.வி. சோமநாதன் தலைமையிலான குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழுவானது, பேங்க் மட்டுமல்லாமல், நிதித் துறை முழுவதிலும் கேஒய்சி நெறிமுறைகளை (KYC Norms) தரப்படுத்த புதிய விதிகளையும், கட்டுப்பாடுகளையும் கொண்டு வர இருக்கிறது. புதிய கேஒய்சி விதிகள் எப்படி? இந்த விதிகளில் ஜாயின்ட் அக்கவுண்ட்களுக்கு பேன் (PAN), ஆதார் (Aadhaar) மற்றும் யுனிக் மொபைல் நம்பர் (Unique Mobile Number) ஆகியவை செகண்ட்ரி வெரிபிகேஷன்களுக்காக கொண்டுவரப்படும். ஏனென்றால், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, என்ஆர்இஜிஏ அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவை மூலம் பேங்க் அக்கவுண்ட்களை ஓப்பன் செய்து கொள்ள முடிகிறது.
இந்த ஆவணங்களில் மொபைல் நம்பரை இணைத்திருக்கும் கஸ்டமர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். கடந்த காலங்களில் இதுபோன்று லட்சக்கணக்கான அக்கவுண்ட்கள் ஓப்பன் செய்யப்பட்டும் இருக்கின்றன. இவர்களின் அடையாளங்களை சரிபார்க்கும் நோக்குடன் கேஒய்சி வெரிபிகேஷன்களில் புதிய விதிகள் கொண்டு வரப்பட இருப்பதாக தெரிகிறது. அதேபோல ஒரே மொபைல் நம்பர் மூலம் பல்வேறு பேங்க் அக்கவுண்ட்களை ஓப்பன் செய்திருக்கும் கஸ்டமர்களின் விவரங்களையும் இணைக்கவும், சரிபார்க்கவும் கூடுதல் விதிகள் கொண்டுவரப்படுகிறது. இதன் மூலம் வெவ்வேறு கேஒய்சி ஆவணங்களை வைத்து ஓப்பன் செய்யப்பட்ட பேங்க் அக்கவுண்ட்களும் அடையாளம் காணப்பட்டுவிடும்.

இந்த புதிய கேஒய்சி விதிகள் விரைவில் நடைமுறைக்கு வர இருக்கிறது. அதன்பிறகே முழு விவரங்களும் தெரியவரும். இருப்பினும், இதனால் கேஒய்சி வெரிபிகேஷன், அப்டேட் போன்றவற்றுக்கு தயாராக இருக்க வேண்டிருக்கும். இந்த கேஒய்சி விதிகள் தொடர்பான செய்திகள் வெளியாகிவரும் நேரத்தில் புதிய பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் செய்யும்போது 2 மொபைல் நம்பர்களை கொடுக்க வேண்டும் என்ற செய்தியும் பரவி வருகிறது.

Central Govt New Notice to All Bank Customers January 22
Central Govt New Notice to All Bank Customers January 22

 

ங்க் அக்கவுண்ட்கள் மற்றும் கஸ்டமர்களின் கேஒய்சி (KYC) விவரங்களை சரிபார்த்தால், புதிய அக்கவுண்ட் ஒப்பன் செய்யும்போது கேட்கப்படும் ஆவணங்களில் மாற்றம் போன்றவற்றில் புதி விதிமுறைகள் வருகின்றன. இதற்கான முனைப்பில் ஆர்பிஐ (RBI) மற்றும் மத்திய அரசு களமிறங்கி இருக்கிறது. விவரங்கள் இதோ.

Leave a Comment

error: Content is protected !!