உங்கள் மெசேஜை அழகாக மாற்றும் சூப்பர் அப்டேட் whatsapp கொண்டு வந்த புதிய அறிமுகம்!! Whatsapp New Text Update 2024 Tamil

உங்கள் மெசேஜை அழகாக மாற்றும் சூப்பர் அப்டேட் whatsapp கொண்டு வந்த புதிய அறிமுகம்!!

Whatsapp New Text Update 2024 Tamil

Whatsapp New Text Update 2024 Tamil WhatsApp தளமானது தங்களது பயன்பாட்டாளர்களை மேலும் வசீகரிக்கும் வகையில் புதியபுதிய அப்டேட்களை வழங்கி அமர்க்களப்படுத்தி வருகிறது. சமீபத்தில் பெரும்பான்மையாக இருக்கும் எளியமக்களின் மகிழ்ச்சியை முன்னிலை படுத்திய மெட்டா நிறுவனம், எளிமையான சாட்களில் சுவாரசியத்தை கூட்டும் வகையில் காமெடி ஸ்டிக்கர்களை வாட்ஸ்அப்பிலேயே உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Whatsapp New Text Update 2024 Tamil
Whatsapp New Text Update 2024 Tamil

அந்தவகையில் தற்போது அலுவலகம் சார்ந்து வாட்ஸ்அப்பை பயன்படுத்திவரும் பயனாளர்கள், தாங்கள் அனுப்பக்கூடிய செய்திகளை நேர்த்தியாக மாற்றி பிரசண்ட் செய்யும் வகையில் டெக்ஸ்ட்களில் மாற்றம் செய்யக்கூடிய புதிய அம்சங்களை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது வாக்கியங்களை வித்தியாசமான முறையில் கோட் செய்யவும், மேற்கோள் காட்டவும், தனிமைபடுத்தி காட்டவும் கூடிய எழுத்து மாற்றங்களை வாட்ஸ்அப் கொண்டுவந்துள்ளது. அதன்படி ”புல்லட் லிஸ்ட், நம்பர் லிஸ்ட்,பிளாக் குவாட்ஸ், இன்லைன் கோட்” முதலிய நான்குபுதிய அம்சங்களும், போல்ட், இடாலிக், ஸ்டிரைக்லைன், மோனோ ஸ்பேஸ் போன்ற எழுத்து மாற்றங்களுக்கான எளிய வழிகளையும் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப் கொண்டுவந்துள்ள டெக்ஸ்ட் மாற்றங்கள்:

1. Bulleted List: (டாட் லிஸ்ட் அப்டேட்)

இந்த அம்சம் உங்கள் செய்திகளில் புல்லட் புள்ளிகளைச் சேர்க்க அனுமதிக்கிறது. அதாவது நீங்கள் ஒரு பட்டியலை புள்ளிவைத்து வரிசை படுத்த நினைத்தீர்கள் என்றால், ஒவ்வொரு வரிசைக்கும் முதலில் புள்ளியை தட்டச்சு செய்துவிட்டு வாக்கியத்தை எழுதுவீர்கள். அதன்பிறகு அடுத்த லைனுக்கு மீண்டும் ஒரு புள்ளியை வைத்து மீண்டும் ஒரு வரியை எழுதுவீர்கள்.

Whatsapp New Text Update 2024 Tamil

 

Whatsapp New Text Update 2024 Tamil

ஆனால் இந்த அம்சத்தின் படி ”-” என்ற குறியீடை பயன்படுத்திவிட்டு அடுத்து ஸ்பேஸ் உடன் வாக்கியத்தை தட்டச்சு செய்யும்போது, புள்ளிக்கு பிறகு உங்கள் வரிகள் முடிவடைகிறது. பின்னர் நீங்கள் அடுத்தவரிக்கு செல்லும்போது தானாகவே அந்த புள்ளி அடுத்தவரிசைக்கு தொடரும். நீங்கள் தனியாக ஒவ்வொரு வரிக்கும் புள்ளியை வைத்துவிட்டு தொடங்கவேண்டியதில்லை.

2. Numbered lists : (எண்ணிடப்பட்ட பட்டியல்)

1, 2, 3 என எண்களை கொண்டு வரிசைப்படுத்தப்படும் அப்டேட்டானது, அப்படியே புல்லட் பட்டியலை போன்றே தான் செயல்படுகிறது.

Whatsapp New Text Update 2024 Tamil

WhatsApp TEXT Update

1 என்ற நம்பரை தட்டச்சு செய்துவிட்டு உடன் புள்ளியை சேர்த்து இடைவெளிவிட்டு எழுதவேண்டும், அதாவது ”1. _” என டைப் செய்துவிட்டு நீங்கள் உங்கள் வாக்கியங்களை எழுதலாம், முதல் வரியின் முடிவில் ஷிஃப்ட் + எண்டர் கொடுக்கும் போது தானாகவே 2, 3, 4 என்ற எண்களை அதுவாகவே இணைத்துக்கொள்ளும். நீங்கள் எந்த எண்ணையும் தனியாக தட்டச்சு செய்து பட்டியலிட வேண்டிய அவசியமில்லை.

3. Block quotes: (மேற்கோள்களுக்கு மாற்று)

இந்த அம்சம் பயனர்களுக்கு அவர்கள் அனுப்பும் பெரிய அல்லது நீண்ட செய்திகளுக்குள் உரையை முன்னிலைப்படுத்த உதவுகிறது. பொதுவாக அவ்வாறு செய்ய ஒற்றை, இரட்டை மேற்கோள் குறிகளை பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த அம்சம் அதனை தடுத்து அந்த வரி அல்லது வாக்கியத்தை வித்தியாசமான முறையில் தன்னித்து காட்ட உதவுகிறது.

Whatsapp New Text Update 2024 Tamil
WhatsApp TEXT Update

இந்த அம்சத்தை பயன்படுத்த, எந்த வரி அல்லது வாக்கியத்தை மேற்கோள் காட்ட நினைக்கிறீர்களோ முன் “>” குறியீட்டைக் கொண்டு ஸ்பேஸ் விட்டு தட்டச்சு செய்யவேண்டும்.

4. Inline Code: (இன்லைன் குறியீடு)

இந்த அம்சமானது நீங்கள் முக்கியமான பாய்ண்ட் என கருதும் வாக்கியங்களை தனித்துக்காட்ட பயன்படுகிறது.

Whatsapp New Text Update 2024 Tamil
WhatsApp TEXT Update

இந்த அம்சத்தை பெற ஒற்றை மேற்கோள்களுக்கு இடையில் அந்த வாக்கியத்தை எழுதவேண்டும். அதாவது ” ` ” என்ற குறியீடுக்கு இடையில் வாக்கியத்தை எழுதவேண்டும். இப்படி `இதை முயற்சித்து பாருங்கள்` என முயற்சித்தால் ஒரு லைனுக்குள் அடைக்கப்பட்டதுபோல தனித்துகாட்டும்.

Whatsapp New Text Update 2024 Tamil
WhatsApp TEXT Shortcuts

இந்த 4 அம்சங்கள் மட்டுமல்லாமல் ”Bold, Italic, Strikethrough மற்றும் Monospace” போன்ற வாக்கியங்கள் அல்லது வரிகளை தனித்துக்காட்டும் செயல்முறைகளுக்கு ஷார்ட்டஸ்ட் வழிமுறையையும் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

Leave a Comment

error: Content is protected !!