JIO அறிவித்த ஸ்பெஷல் ஆஃபர் ரீசார்ஜ் செய்து ரூ.50 திரும்பி வாங்கிக்கோங்க!! Happy Jio Special 50 Rupees Cashback Offer Tamil

JIO அறிவித்த ஸ்பெஷல் ஆஃபர் ரீசார்ஜ் செய்து ரூ.50 திரும்பி வாங்கிக்கோங்க!!

Jio Special 50 Rupees Cashback Offer Tamil

Jio Special 50 Rupees Cashback Offer Tamil  ஜியோ ரிலையன்ஸ் நிறுவனமானது ஒவ்வொரு நாளும் புதிய புதிய ஆஃபர்களை தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.எனவே அப்படியான ஒரு சிறப்பு சலுகையான ஆஃபர் தான் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது ஜியோவின் ரூபாய் 866 ரீசார்ஜ் மீது அம்பது ரூபாய் கேஷ் பேக் மற்றும் ரூபாய் 600 மதிப்புள்ள மூன்று மாதங்களுக்கான ஸ்விக்கி ஒன் லைட்டிருக்கான இலவச சந்தா அறிவிக்கப்பட்டுள்ளது அது குறித்து செய்தியை கீழ்க்கண்டவற்றுள் தெளிவாக காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

‘அறிமுகமான நாளிலிருந்து.. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு “பின்னடைவு” என்பதே இல்லை. ஜியோவிற்கு முன்பாக இந்திய டெலிகாம் துறையை ஆட்சி செய்த ஏர்டெல் நிறுவனத்தால் ஜியோவின் வருகைக்கு பின்னர், இரண்டாவது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு செல்லவே முடியவில்லை.

Jio Special 50 Rupees Cashback Offer Tamil
Jio Special 50 Rupees Cashback Offer Tamil

ட்ராய் (TRAI) வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி ஜியோ நிறுவனத்தின் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 459.81 மில்லியன் ஆகும். மறுகையில் உள்ள ஏர்டெல்லின் ஒட்டுமொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 381.73 மில்லியனாகும். ஜியோவின் இந்த அபார வளர்ச்சிக்கு, அவ்வவ்போது அறிவிக்கப்படும் சிறப்பு சலுகைகளே (Special Offers) காரணம்!

அப்படியான ஒரு ஸ்பெஷல் ஆஃபர் தான் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபர், 84 நாட்கள் வேலிடிட்டி உடன் வரும் ஜியோவின் ரூ.866 திட்டத்தின் மீது கிடைக்கிறது. ஜியோ ரூ.866 ரீசார்ஜின் வழக்கமான நன்மைகள் என்ன? இதன் மீது கிடைக்கும் ஸ்பெஷல் ஆபர் என்ன?

Jio Special 50 Rupees Cashback Offer Tamil

இதோ விவரங்கள்:

ஜியோவின் ரூ.866 ரீசார்ஜ் மீது ரூ.50 கேஷ்பேக் (Rs.50 Cashback) மற்றும் ரூ.600 மதிப்புள்ள 3 மாதங்களுக்கான ஸ்விக்கி ஒன் லைட்டிற்கான இலவச சந்தா (Free Swiggy One Lite Subscription For 3 Months) அறிவிக்கப்பட்டுள்ளது. கேஷ்பேக் சலுகையை பொறுத்தவரை, ரூ.866 திட்டத்தை ரீசார்ஜ் செய்தாலே போதும்,உங்களுக்கு ரூ.50 கேஷ்பேக் கிடைக்கும். ஜியோவின் மற்ற கேஷ்பேக் ஆபர்களை போலவே இதையும் நீங்கள் அடுத்த ரீசார்ஜின் போது ரிடீம் (Redeem) செய்யலாம்.

ஸ்விக்கி ஒன் லைட் சந்தாவை பொறுத்தவரை ரூ.149க்கு மேல் உணவு ஆர்டர் செய்தால் 10 இலவச ஹோம் டெலிவரி கிடைக்கும். மேலும் ரூ.199க்கு மேல் உள்ள இன்ஸ்டாமார்ட் ஆர்டர்களுக்கும் கூட 10 இலவச ஹோம் டெலிவரி கிடைக்கும். மேலும் 20,000-க்கும் மேற்பட்ட உணவகங்களில் வழக்கமான சலுகைகளை விட 30% வரையிலான கூடுதல் தள்ளுபடிகள் கிடைக்கும்.

கடைசியாக ரூ.60க்கு மேலான ஜீனி டெலிவரிகளுக்கு 10% தள்ளுபடியும் கிடைக்கும். இதுதவிர்த்து ஜியோவின் ரூ.866-ன் நன்மைகளில் எந்த மாற்றமும் இல்லை. இது 84 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் (84 Days Validity) கீழ் தினமும் 2ஜிபி டேட்டா (Daily 2GB Data) என மொத்தம் 168ஜிபி டேட்டாவை வழங்குகிறது. கூடவே அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் (Unlimited Voice Calling) மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்-களையும் (Free 100 SMS / Day) வழங்குகிறது.

ஜியோ தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை, இந்நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த செமிகண்டக்டர் தயாரிப்பாளர் ஆன குவால்காம் (Quallcomm) நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இந்தியாவிலேயே மிகவும் மலிவான 5ஜி ஸ்மார்ட்போனை (Most Affordable 5G Smartphone) அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.அது ஜியோ எக்ஸ்1 5ஜி (Jio X1 5G) என்று அழைக்கப்படலாம். இது ரூ.8000 பட்ஜெட்டில், 2024 ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் ஜியோ எக்ஸ்1 5ஜி ஸ்மார்ட்போன் குறித்து வெளியான சில கான்செப்ட்கள் (Concepts) நம்பவே முடியாத சில அம்சங்களை பரிந்துரைக்கின்றன. கிடைக்கப்பெற்ற தகவலின்படி ஜியோ எக்ஸ்15ஜி ஸ்மார்ட்போனில், கார்னிங் கொரில்லா கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.72-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே இடம்பெறலாம். மேலும் இது மீடியாடெக் டைமென்சிட்டி 7020 சிப்செட் (MediaTek Dimensity 7020 Chipset) உடன் வரலாம்.

ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை, 8ஜிபி விர்ச்சுவல் ரேமிற்கான (Virtual RAM) ஆதரவுடன் 8ஜிபி ரேம் இடம்பெறலாம். இது 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்படலாம். மேலும் ஜியோ எக்ஸ்1 5ஜி ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம்.

அதில் 64எம்பி மெயின் சென்சார் + 8எம்பி வைட்-ஆங்கிள் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் இடம்பெறலாம். கூடவே இது 120W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5600mAh பேட்டரியை பேக் செய்யலாம்.. என்றெல்லாம் கூறப்படுகிறது. பெரும்பாலும் இது சாத்தியமில்லாத அம்சங்களாகவே உள்ளன.

 

 

Leave a Comment

error: Content is protected !!