மிகக் குறைந்த விலையில் புதிய jio போன் வந்தாச்சு!!.. இனிமே எல்லார் கையிலும் இதுதான்!..
Jio New Phone Launch 2024
Jio New Phone Launch 2024 மிகக் குறைந்த விலையில் புதிய jio போன் வந்தாச்சு .ஜியோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கம்மி விலையில் சாதனங்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் சாதனங்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
இந்நிலையில் ஜியோ நிறுவனம் மீண்டும் ஒரு மலிவு விலை பீச்சர் போனை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது இந்நிறுவனத்தின் பீச்சர் போன் ஒன்று BIS சான்றிதழ் தளத்தில் காணப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது தற்போது BIS சான்றிதழ் இணையதளத்தில் JBB121B1 என்ற மாடல் நம்பர் கொண்ட ஜியோ பீச்சர் போன் ஒன்று காணப்பட்டுள்ளது. இது ஜியோ பாரத் 2 போன் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மலிவு அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ பாரத் போனுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
அதேபோல இந்த ஜியோ பாரத் 2 (Jio Bharat 2) போனும் மலிவு விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஆனால் தற்போது ஜியோ பாரத் 2 போனின் விவரக்குறிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. வரும் வாரங்களில் இந்த போனின் விவரக்குறிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ஜியோ பாரத் போன் ஆனது ரூ.999 விலையில் விற்பனைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது ஜியோ பாரத் போன் மாடலின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஜியோ பாரத் போன் அம்சங்கள் (Jio Bharat Phone Specifications):ஜியோ பாரத் போனில் ஒரேவொரு சிம் கார்ட் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் 4ஜி VoLTE சப்போர்ட் உள்ளதால் வாய்ஸ் கால் மற்றும் இன்டர்நெட் அனுபவம் மிகுந்த தரம் வாய்ந்தாக இருக்கும். 1.77 இன்ச் TFT டிஸ்பிளே கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளேவுக்கு கீழ் அருமையான கீபேட் வசதி உள்ளது. அதேபோல் இந்த போனின் டிஸ்பிளே சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. ஜியோ சினிமா (JioCinema), ஜியோ சாவன் (JioSaavn) போன்ற ஜியோ ஆப்ஸ் (Jio Apps) போன்றவை இதில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.
ஜியோ பாரத் போனுக்கு 1000எம்ஏஎச் கழற்றி மாட்டக்கூடிய பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பேட்டரியை ஒருமுறை ஃபுல் சார்ஜ் செய்தால், 24 மணி நேரம் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் இந்த போனுக்கு 128 ஜிபி எஸ்டி கார்டு சப்போர்ட் உள்ளது. 3.5மிமீ ஆடியோ ஜாக், 0.3 எம்பி கேமரா, டார்ச்லைட் (Torch), எஃப்எம் ரோடியோ (FM radio) போன்ற பல சிறப்பு அம்சங்களுடன் இந்த அட்டகாசமான பீச்சர் போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.