மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த எலெக்ட்ரிக் லூனா மொப்பட் மிக குறைவான விலையில் வந்தாச்சு!!.. Luna Electric Bike Today Launch 2024

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த எலெக்ட்ரிக் லூனா மொப்பட் மிக குறைவான விலையில் வந்தாச்சு!!..

Luna Electric Bike Today Launch 2024

Luna Electric Bike Today Launch 2024 வண்டி வாங்க வேண்டும் என்பது ஒவ்வொருவரும் வாழ்க்கையிலும் மிகப்பெரிய முதல் ஆசையாக இருக்கும் என்றால் அது மிகையாகாது. அவ்வாறு வாங்கும் வண்டிக்கு ஒவ்வொரு முறையும் பெட்ரோல் போடும் செலவும் வண்டி வாங்கும் செலவும் ஒப்பிடும்போது வண்டி வாங்கும் செலவை விட பெட்ரோல் போடும் செலவு பல மடங்காக இருப்பதினால் பலரின் கனவு பேட்டரியில் இயங்கக்கூடிய இருசக்கர வாகனங்களை வாங்கினால் பெட்ரோல் செலவை குறைத்து மாத சேமிப்பை மிச்சப்படுத்தலாம் என எண்ணும் நபர்கள் அதிகம் பேர்.
Luna Electric Bike Today Launch 2024
Luna Electric Bike Today Launch 2024
தற்போது வாங்குவது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வும் மிக அதிகமான விலைக்கு விற்கப்படுவதால் விலை குறைந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்போது வரும் அதை நாம் வாங்கலாம் என காத்துக் கொண்டிருந்தவருக்கு வந்தாச்சு. மிகக்குறைந்த விலையில் எல்லோரும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த எலக்ட்ரிக் பைக் அறிமுகம் அவை பற்றிய முழு தகவலை நாம் இப்போது பார்க்கலாம்.

கைனெடிக் கிரீன் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் மொபட் இன்று அறிமுகமாகிறது மிக நீண்ட நாட்களாக மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த இந்த எலெக்ட்ரிக் லூனா மொப்பட் மிக குறைவான விலையில் இன்று அறிமுகமாக உள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

1980களில் மொப்பட்டுகள் மிகவும் பிரபலமாகின சிறு சிறு வணிகர்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை பலர் இந்த மொப்பட்டுகளை வாங்கி பயன்படுத்த துவங்கினார்கள். மக்களுக்கு போக்குவரத்திற்கான வாகனம் பிரபலமாக துவங்கும் போது இந்த மொப்பட்கள் மிகக் குறைவான விலையில் மக்களுக்கு கிடைத்ததால் பலர் இந்த மொப்பாட்களை வாங்கி பயன்படுத்த துவங்கினர்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Luna Electric Bike Today Launch 2024

அந்த காலங்களில் லூனா என்ற மொபட் மிகப்பெரிய அளவில் பிரபலமாக இருந்தது. ஆனால் காலம் வளர இதன் விற்பனை சரிவடைந்ததால் இந்த லூனா மொப்பட் விற்பனையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை மீண்டும் புதுமையாக வந்துள்ளது. இதனால் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க மக்கள் ஆர்வமாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் கைனடிக் கிரீன் என்ற நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் வெர்ஷனில் லூனா மொப்பாட்டை மீண்டும் களம் இறக்க முடிவு செய்துள்ளது.

இதற்கான அறிவிப்புகள் எல்லாம் ஏற்கனவே வெளியான நிலையில். இன்று அந்த இ-லூனா என்ற எலெக்ட்ரிக் மொபட் அறிமுகமாகிறது. இதை முன்பக்கம் ஹாலஜன் பல்ப் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்லிமான சிம்பிளானா வடிவமைப்பு ஒரிஜினல் டிசைனில் இருந்து பெரிய அளவில் மாற்றம் செய்யப்படாத லுக். 16இன்ச் வயர் ஸ்போக் வீல்கள். 1335மிமீ கொண்ட வீல் பேஸ், 760 மிமீ கொண்ட சீட்டு உயரம், 170மிமீ கொண்ட கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகிய அம்சங்களுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

Luna Electric Bike Today Launch 2024

இந்த இ-லூனா மொப்பட்டில் பின்பக்கம் உள்ள சீட் தனியாக கழட்டி எடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை லக்கேஜ் கேரியராகவும் பயன்படுத்த முடியும். இது போக இதில் யூஎஸ்பி சார்ஜ் போட்டுகள் சைடு ஸ்டாண்ட் சென்சார் பேசிக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகிய அம்சங்கள் இருக்கிறது. இதனால் இது பார்ப்பதற்கு பழைய லூனா மொபட் லுக்கிலேயே இருக்கும்படி டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதன் பேட்டரி ஆப்ஷனை பொருத்தவரை இரண்டு கிலோ வாட் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 22 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மொபட்டை அதிகபட்சமாக 50 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இதற்காக இரண்டு கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 110 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய நான்கு மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும். இதன் சிறிய ரக பேட்டரி பேக் வெர்ஷன் பின்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கம் டெலஸ்கோபிக் சஸ்பென்ஷனும் பின்பக்கம் டூயல் ஷாக் அப்சர்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மொப்பட்டில் கம்பைன் பிரேக்கிங் சிஸ்டம் இருக்கிறது.

இதன் விலையை பொருத்தவரை ரூ75 ஆயிரம் என்ற விலையில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களை குறைவான விலையில் வாங்க மக்கள் பலர் காத்திருக்கும் நிலையில் இந்த விலை நிச்சயம் மக்களை கவரும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஏற்கனவே கைனடிக் கிரீன் நிறுவனம் இந்தியாவில் இந்த எலெக்ட்ரிக் மொபட்டிற்கான புக்கிங்கை துவங்கிவிட்டது. பலர் வேகமாக இதை புக் செய்துவரும் நிலையில் இன்று அறிமுகமாகி விலை உறுதியாகிவிட்டால் ஏராளமான மக்கள் பலர் இந்த வாகனத்தை புக் செய்ய முன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

error: Content is protected !!