அனைவரும் எதிர்பார்த்த வண்டி வந்தாச்சு.. பெட்ரோல் பேட்டரி இரண்டிலும் ஓடும் வண்டி!!.. Happy Yamaha Mobility Expo New Two Wheeler Launch 2024

அனைவரும் எதிர்பார்த்த வண்டி வந்தாச்சு.. பெட்ரோல் பேட்டரி இரண்டிலும் ஓடும் வண்டி!!..

Yamaha Mobility Expo New Two Wheeler Launch 2024

Yamaha Mobility Expo New Two Wheeler Launch 2024 பெட்ரோல் வண்டி வைத்துள்ளார்கள் அனைவரும் அடுத்த கட்ட நகர்வாக பேட்டரி வாகனங்கள் வாங்க வேண்டுமென எதிர்பார்த்தார்கள் ஆனால் அந்த பேட்டரி வண்டிகள் வாங்கும் போது தற்போது அதற்கேற்ற பேட்டரி சார்ஜ் செய்யும் ஸ்டேஷன்கள் குறைவாக உள்ளதாலும் அதிக தூரம் பயணம் செல்லும் வகையில் இருக்கும் வண்டிகள் விலை உயர்வாக உள்ளதாகவும் பெட்ரோல் மற்றும் பேட்டரியில் இயங்கக்கூடிய ஒரு வண்டி வந்தால் அனைவரும் அந்த வண்டி தான் வாங்குவார்கள் என அறிந்து இந்த வண்டியை அறிமுகம் செய்துள்ளது யமஹா நிறுவனம் இதைப் பற்றி முழுமையாக பார்க்கலாம் .
Yamaha Hybrid Mobility Expo New Two Wheeler Launch 2024
Yamaha Hybrid Mobility Expo New Two Wheeler Launch 2024

பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ கண்காட்சியில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் கலந்து கொண்டு தங்கள் வாகனங்களை காட்சிப்படுத்தி வருகின்றன. இப்படியாக யமஹா நிறுவனமும் தனது வாகனங்களை எல்லாம் அந்த எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளது. இதில் ஒரே நேரத்தில் பெட்ரோலிலும் பேட்டரியிலும் இயங்கும் டூவிலர் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டில்லியில் உள்ள பாரத் மண்டபம் என்ற இடத்தில் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ என்ற கண்காட்சி நடந்து வருகிறது. இதில் ஆட்டோமொபைல் தொடர்பான தொழில்நுட்பங்கள் தயாரிப்புகள் எல்லாம் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. பல முக்கிய நிறுவனங்கள் எல்லாம் இந்த கண்காட்சியில் பங்கேற்று வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து கூட சில நிறுவனங்கள் இங்கு பங்கேற்க வந்துள்ளன.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

இந்த கண்காட்சியில் யமஹா நிறுவனமும் தனது பங்கிற்கு சுமார் 400 சதுர மீட்டர் பரப்பளவில் கண்காட்சியை ஏற்பாடு செய்து தனது வாகனங்களை எல்லாம் காட்சிப்படுத்தியுள்ளது. இதில் யமஹா நிறுவனத்தின் அனைத்து ரக வாகனங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. யமஹா நிறுவனத்தின் ஸ்கூட்டர் முதல் பெரிய பெரிய பைக்குகள் வரை காட்சிப்படுத்தப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் பலர் பார்த்து செல்கின்றனர்.

Yamaha Hybrid Mobility Expo New Two Wheeler Launch 2024

இந்த கண்காட்சியில் யமஹா நிறுவனத்தின் மிக முக்கியமான டூவீலர் ஒன்று தற்போது பொதுமக்களை ஈர்க்கும் வகையில் இருந்து வருகிறது. யமஹா நிறுவனம் அது பேஸினோ எஃப்ஐ ஹைபிரிட் என்ற ஸ்கூட்டரை காட்சிப்படுத்தி இருந்தது. இது மக்களை கவரும் வகையில் இருந்தது. இங்கு ஸ்கூட்டர் ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டர் தான். இது ஒரே நேரத்தில் பேட்டரியிலும் பெட்ரோலிலும் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரை பொறுத்தவரை ஒரு லிட்டருக்கு 65.75 கிலோ மீட்டர் மைலேஜ் தருகிறது. இதற்கு முக்கியமான காரணம் ஸ்கூட்டரில் உள்ள ஹைபிரிட் தொழில்நுட்பம் தான். இந்த ஸ்கூட்டரில் பெட்ரோல் இன்ஜினுடன் சேர்த்து ஹைபிரிட் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.
இது 16 சதவீதம் மைலேஜ் அதிகப்படுத்துகிறது. வண்டியின் டார்க் திறனை 30 சதவீதம் வரை அதிகப்படுத்துகிறது. இதன் மூலம் வெறும் பெட்ரோல் ஸ்கூட்டரில் மட்டும் இருக்கும் 9.7 என்எம் என்ற டார்க் திறன் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் சேரும்போது 10.3 என்எம் டார்க் திறனாக மாறுகிறது. பவரை பொருத்தவரை அதே 8.2 பிஎஸ் பவர் தான் ஸ்கூட்டரில் வெளிப்படுத்தப்படுகிறது.

அதிக டார்க் திறனை மற்றும் அதிக மைலேஜ் காரணமாக இந்த ஹைபிரிட் ஸ்கூட்டர் நிச்சயம் பலரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தது. இந்த ஸ்கூட்டரில் ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ஸ்கூட்டர் ஸ்டார்ட் செய்யும் போது சத்தமே இல்லாமல் ஸ்டார்ட் செய்ய முடியும். அதே நேரம் சிக்னலில் காத்திருக்கும் போது ஸ்கூட்டர் ஆனில் இருந்தால் அது தானாக ஆஃப் செய்யவும் மீண்டும் சிக்னல் விழுந்தவுடன் ஆக்ஸிலரேட்டரை திருக்கினால் தானாக ஸ்டார்ட் செய்யும் தொழில்நுட்பமும் இந்த ஸ்கூட்டரில் இருக்கிறதே இதுவும் அதிக மைலேஜ்காக வழங்கப்பட்டுள்ள முக்கியமான அம்சம்தான்.

Yamaha Hybrid Mobility Expo New Two Wheeler Launch 2024
இந்த ஸ்கூட்டரில் உள்ள அம்சங்களை பொருத்தவரை எல்இடி ஹெட்லைட், மற்றும் டெயில் லைட், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, 21லிட்டர் சீட்டுக்கு அடியில் உள்ள ஸ்டோரேஜ் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன. இதில் உள்ள பிரேக்கிங் வசதியை பொருத்தவரை 190மீமி டிஸ்க் பிரேக் அல்லது டிரம் பிரேக் ஆகிய சிபிஎஸ் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 12இன்ச் அலாய் வீலும் பின்பக்கம் 10இன்ச் அலாய் வீலும் வழங்கப்பட்டுள்ளது.

ஹைபிரிட் சிஸ்டத்துடன் கூடிய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ரூபாய் 79,600 முதல் 92,530 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த ஸ்கூட்டர் பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய இரண்டிலும் ஓடும் என்பதால் மக்கள் மத்தியில் இது பிரபலமான பேட்டரி ஸ்கூட்டராக மாறி உள்ளது. இந்த ஸ்கூட்டர் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் பலர் பார்த்து செல்கின்றனர். டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ என்பது ஆட்டோமொபைல் தொழில்நுட்பத்தில் உள்ள கலைஞர்களுக்கு மிக முக்கியமான கண்காட்சியாக இருக்கிறது. இதில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வாகனங்களை காட்சிப்படுத்தியுள்ளது. பலரை கவரும் வகையில் இருந்துள்ளது இதில் யமஹா நிறுவனத்தின் இந்த ஸ்கூட்டர் நிச்சயம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!