பிப்ரவரி 9 முதல் அரிசியின் விலை ரூ.29 மட்டுமே மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு!.. Happy February 9 start to sales Bharat Rice Only For Rs.29

பிப்ரவரி 9 முதல் அரிசியின் விலை ரூ.29 மட்டுமே மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு!..

February 9 start to sales Bharat Rice Only For Rs.29

February 9 start to sales Bharat Rice Only For Rs.29 பிப்ரவரி 9 முதல் பாரத் அரிசியின் விலை ரூ.29 மட்டுமே மத்திய அரசு அறிவிப்பு .அதிகரித்து வரும் அரிசியின் விலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வரும் நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
February 9 start to sales Bharat Rice Only For Rs.29
February 9 start to sales Bharat Rice Only For Rs.29

மத்திய அரசின் நடவடிக்கை:

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரிசியின் விலை அதிகரித்து வந்த நிலையில் விலைவாசியை கட்டுப்படுத்தும் வகையில் அரசு ஏற்றுமதிக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது. இதனால் அரிசியின் விலை உள்நாட்டில் கட்டுக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் கடந்த மாதங்களில் அரிசியின் விளைச்சல் உற்பத்தி பாதிப்பு மற்றும் தேவை அதிகரிப்பின் காரணமாக தொடர்ந்து அரிசியின் விலை ஆனது உயர்ந்து வருகிறது. இதனால் பாதிக்கப்படும் சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு பாரத் அரிசி என்ற மானிய விலை அரசு திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த திட்டத்தில் ஒரு கிலோ அரிசி ரூபாய் 29 க்கு மத்திய அரசின் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு, தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் மத்திய அரசின் விற்பனை மையங்கள் மூலமாக சில்லறை சந்தையில் விற்பனை செய்யப்படும். இத்திட்டத்தின் தொடக்கத்திற்காக முதல் கட்டத்தில் 5 லட்சம் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளில் கிடைக்கும் பாரத் அரிசி இணையவழி விற்பனை மூலமாகவும் சந்தைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

February 9 start to sales Bharat Rice Only For Rs.29

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கவும், சில்லறை பணவீக்கத்தைக் குறைக்கவும் மத்திய அரசு மலிவான விலையில் அரிசியை விற்பனை செய்யும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதற்காக, ‘பாரத் அரிசி’ என்ற பெயரில் அடுத்த வாரம் முதல் ஒரு கிலோ 29 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு அரிசி இருப்புகளை வெளியிடுமாறு வியாபாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

February 9 start to sales Bharat Rice Only For Rs.29

மத்திய அரசின் இந்த நடவடிக்கை சந்தையில் விலைவாசி உயர்வைக் குறைக்கும் முயற்சியாகும். மத்திய உணவுத் துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா இதுகுறித்துக் கூறுகையில், ”பல்வேறு வகையான அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், கடந்த ஓராண்டில் அரிசியின் சில்லறை மற்றும் மொத்த விற்பனை விலை சுமார் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே விலையைக் குறைக்க, NAFED மற்றும் NCCF ஆகிய இரண்டு கூட்டுறவு சங்கங்களைக் கொண்ட மத்திய அங்காடிகள் மூலம் அரிசியை சில்லறை விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது” என்றார்.

Leave a Comment

error: Content is protected !!