மத்திய அரசு பாரத் அரிசி விற்பனை திட்டம் தொடக்கம் எங்கு கிடைக்கும்?.. Central Govt Bharat Rice Sales Start 1kg Rs.29

மத்திய அரசு பாரத் அரிசி விற்பனை திட்டம் தொடக்கம் எங்கு கிடைக்கும்?..

Central Govt Bharat Rice Sales Start 1kg Rs.29

Central Govt Bharat Rice Sales Start 1kg Rs.29 பாரத் அரிசி விற்பனை திட்டம் தொடக்கம்.மலிவு விலையில் மத்திய அரசு விற்பனை செய்யும் ‘பாரத் அரிசி’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.பாரத் அரிசி ஒரு கிலோ ரூ.29க்கு விற்கப்படுகிறது; 5 மற்றும் 10 கிலோ பாக்கெட்டுகளில் அரிசி விற்பனை.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Central Govt Bharat Rice Sales Start 1kg Rs.29
Central Govt Bharat Rice Sales Start 1kg Rs.29

தேசிய வேளாண் கூட்டுறவு சங்கம், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் சில்லறை விலையில் பாரத் அரிசி விற்பனை.

பாரத அரிசியின் விலை ரூபாய் 29 மட்டுமே மத்திய அரசு அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் அரிசியின் விலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்துவரும் நிலையில் தற்போது புதிய தகவல்  வெளியாகி உள்ளது.

மத்திய அரசின் நடவடிக்கை:

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரிசியின் விலை அதிகரித்து வந்த நிலையில் விலைவாசியை கட்டுப்படுத்தும் வகையில் அரசு ஏற்றுமதிக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது. இதனால் அரிசியின் விலை உள்நாட்டில் கட்டுக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் கடந்த மாதங்களில் அரிசியின் விளைச்சல் உற்பத்தி பாதிப்பு மற்றும் தேவை அதிகரிப்பின் காரணமாக தொடர்ந்து அரிசியின் விலை ஆனது உயர்ந்து வருகிறது. இதனால் பாதிக்கப்படும் சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு பாரத் அரிசி என்ற மானிய விலை அரசு திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த திட்டத்தில் ஒரு கிலோ அரிசி ரூபாய் 29 க்கு மத்திய அரசின் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு, தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் மத்திய அரசின் விற்பனை மையங்கள் மூலமாக சில்லறை சந்தையில் விற்பனை செய்யப்படும். இத்திட்டத்தின் தொடக்கத்திற்காக முதல் கட்டத்தில் 5 லட்சம் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளில் கிடைக்கும் பாரத் அரிசி இணையவழி விற்பனை மூலமாகவும் சந்தைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!