அயோத்தி ராமர் சிலை உருமாறி உள்ளது.. அதிசய தகவல்!.. Ayodhya Rama statue has transformed information

அயோத்தி ராமர் சிலை உருமாறி உள்ளது..

அதிசய தகவல்!..

Ayodhya Rama statue has transformed information

Ayodhya Rama statue has transformed information ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு குழந்தை ராமர் சிலையில் பல வித்தியாசங்கள் காணப்படுகிறது சிலை உருமாறி காட்சி அளிக்கிறது என்று சிற்பி அருண் யோகி ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார் இதனைப் பற்றிய முழு தகவல்களை நாம் விரிவாக காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Ayodhya Rama statue has transformed information
Ayodhya Rama statue has transformed information

அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராம ஜென்ம பூமியில் 550 ஆண்டுகளுக்கு பிறகு பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 2000 கோடி ரூபாய் செலவில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் மரங்கள், கற்கள் என ஒவ்வொரு பொருட்களாக கொண்டு வரப்பட்டு அழகிய கலை நயத்துடன் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயிலில் தங்கக்கதவுகளும் இடம் பெற்றுள்ளன. கடந்த 22 ஆம் தேதி ராமர் கோவிலில் பிரான பிரதிஷ்டை செய்யப்பட்டு கோவில் திறப்பு விழா விமரிசையாக நடைபெற்றது. பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று குழந்தை ராமர் சிலையை பிரான பிரதிஷ்டை செய்து வைத்தார். உலக நாடுகள் பலவும் உற்று நோக்கிய இந்த நிகழ்ச்சியில், 7ஆயிரத்துக்கும் அதிகமான பிரபலங்கள் பங்கேற்றனர்.

ராமர் சிலை உருமாறிய அதிசயம்

Ayodhya Ram Mandir Live: பிரதமர் மோடி முதல் பூஜை - அயோத்தியில் எழுந்தருளினார் ஸ்ரீராமர்! | Ayodhya Ram Mandir inauguration live updates - Vikatan

பிரான பிரதிஷ்டை நிகழ்வுக்கு பிறகு கடந்த 23 ஆம் தேதி முதல் பக்தர்கள் ராமரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பால ராமர் சிலையை செதுக்கிய சிற்பி அருண் யோகிராஜ், பிரான பிரதிஷ்டைக்கு பிறகு அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அதில் பிரதிஷ்டை செய்த பிறகு ராமரின் சிலை அப்படியே மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், அயோத்தி ராமர் கோவிலுக்காக நான் வடிவமைத்த ராமர் திருமேனி பிராண பிரதிஷ்டை செய்து முடித்த பிறகு உருமாறி விட்டது. குழந்தை ராமர் சிலையில் கண்ணும் முக பாவனையும் அப்படியே மாறி தோற்றமளிக்கிறது. நான் வடிவமைத்தபோது ராமர் சிலை இப்படி இல்லை.
Ayodhya Ram Mandir special Articles | அயோத்தி ராமர் கோவில் பற்றிய சிறப்புக் கட்டுரைகள்!

இதனை என்னாலேயே நம்ப முடியவில்லை. ராமரின் திருமேனியை வடிவமைக்கும் போது நாள்தோறும் ஒரு குரங்கு எங்கள் இடத்திற்கு வந்து பார்த்துவிட்டு சென்றது. பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு குழந்தை ராமர் சிலையில் பல வித்தியாசங்கள் காணப்படுகிறது. சிலை உருமாறி காட்சியளிக்கிறது.. இவ்வாறு சிற்பி அருண் யோகிராஜ் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவர் சிற்பி அருண் யோகிராஜ். இவர் கருங்கல்லில் செதுக்கிய குழந்தை ராமர் சிலையை கருவறையில் நிறுவ ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை ஒருமனதாக முடிவு செய்தது. இதனை தொடர்ந்தே பிரதமர் மோடி பால ராமர் சிலையை கடந்த 22ஆம் தேதி பிரதிஷ்டை செய்தார். இந்த சிலை 4.5 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!