world highest Ram statue in ayodhya
உலகில் இதுவரை இல்லாத அளவு உயரமான சிலையாக வரவுள்ளது ராமர் சிலை
World highest ram statue in ayodhya : ஒற்றுமையின் சிலை என்று அழைக்கப்படும் குஜராத் மாநிலம் கெவாடியாவில் கட்டப்பட்ட 790 அடி அளவிலான சர்தார் வல்லபாய் படேலின் சிலைதான் இதுவரை உலகின் மிக உயரமான சிலை என்ற சாதனை படைத்துள்ளது. இந்த சிலையின் 70 முதல் 80% வேலை சீனாவில் செய்யப்பட்டிருந்தாலும், நரேஷ் குமாவத், பட்ஜெட்டின் இறுதி ஒப்புதலைப் பெற்றால், ராமர் சிலை முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உலகின் மிக உயரமான சிலையாக இருக்கும் என்று கூறுகிறார்.
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
உலகின் நான்காவது பெரிய சிலை என்ற சாதனை ராஜஸ்தான் மாநிலம் நாத்துவாராவில் நிறுவப்பட்ட சிவன் சிலைக்கு உண்டு. இதுவும் நரேஷ் குமாவத்தின் கலைப்படைப்பு ஆகும். சிற்பி நரேஷ் குமாவத், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடமிருந்து சிலையின் முன்மாதிரிக்கான ஒப்புதலைப் பெற்றுள்ளார் என்று தெரிகிறது. இந்த சிலை பஞ்ச உலோகத்தால் செய்யப்பட உள்ளது, அதில் 80% செம்பு பயன்படுத்தப்படும். இந்த சிலையை முடிக்க 3,000 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நொய்டாவில் உள்ள சிவனின் சிலையும் சிற்பி நரேஷ் குமாவத் உருவாக்கிய கலைப்படைப்பு ஆகும். இது தவிர, உச்சநீதிமன்றத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கரின் சிலை, இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை, நாடாளுமன்றத்திற்குள் உள்ள பல கலை படைப்புகள் ஆகியவை உலோகத்தால் செய்யப்பட்டவை.
அயோத்தி ராமர் கோயில்
823 அடி உயர ராமர் சிலையை உருவாக்க ஹரியானாவைச் சேர்ந்த சிற்பியான நரேஷ் குமாவத் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். இந்த சிலை அயோத்தியில் சரயு நதிக்கரையில் நிறுவப்படலாம் என்று கூறப்படுகிறது. இது நடக்கும் பட்சத்தில் ராமரின் இந்த வடிவம் உலகின் மிக உயரமான சிலை என்ற சாதனையை படைக்கும் என்று கூறுகின்றனர். இந்த சிலை 13,000 டன் எடை கொண்டதாக இருக்கும்.
ஹரியானா மாநிலம் மானேசரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் உலகின் அதி உயர சிலை உருவாக்கம் என்ற சாதனை படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அயோத்தி, ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக காத்திருக்கிறது. ராமர் ஜென்மபூமியில் எந்த வடிவில் ராமர் சிலை நிறுவப்படுகிறது என்பதில் பக்தர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ayodhya ramar statue
கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்தபதி அருண் யோகிராஜ் செதுக்கிய ராமர் சிலை, அயோத்தியில் பிரதிஷ்டை செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் இக்கோயிலில் அன்றைய தினம் குழந்தை ராமரின் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக 3 குழந்தை ராமர் சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. இதில், ஒன்றை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. கோயில் கட்டும் பணியை மேற்கொண்டு வரும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்ததன் அடிப்படையில், பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ள சிலை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் தெரிவித்துள்ள கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ராமர் எங்கே இருக்கிறாரோ அனுமனும் அங்கே இருப்பார். அயோத்தியில் ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ள ராமர் சிலையை தேர்வு செய்யும் பணி முடிந்துவிட்டது. நமது நாட்டின் புகழ்பெற்ற சிற்பி அருண் யோகிராஜ் வடித்த சிலை தேர்வு செய்யப்பட்டுள்ளது. ராமரையும் அனுமனையும் பிரிக்க முடியாது என்பதற்கு இது மற்றுமொரு உதாரணம். அனுமனின் பூமியான கர்நாடகாவில் இருந்து குழந்தை ராமர் சிலை தேர்வானதில் தவறில்லை என குறிப்பிட்டுள்ளார்.
வால்மீகி ராமாயண காப்பியத்தில், தான் கோகர்ண என்ற இடத்தில் பிறந்தவன் என அனுமன் சீதையிடம் சொல்கிறார். கோகர்ண என்ற இடம் வட கர்நாடகாவில் ஹம்பிக்கு அருகே துங்கபத்ரா நதிக்கரையில் உள்ளது. இந்த இடமே அனுமன் பிறந்த இடமாகக் கருதப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். முன்னதாக, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும், கர்நாடகாவின் அருண் யோகிராஜ் வடித்த சிலையே தேர்வு செய்யப்பட்டுள்ளது எனக் கூறி இருந்தார். இந்த சிலை 51 அங்குலம் உயரம் கொண்டது.
எந்த அடிப்படையில் சிலை தேர்வு செய்யப்படும் என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அறக்கட்டளை உறுப்பினர் பிம்லேந்திரா மோகன் பிரதாப் மிஸ்ரா, “நீங்கள் பார்க்கும்போது சிலை உங்களோடு பேசும்; உங்களை மயக்கும்” என கூறி இருந்தார். எனினும், சிலை தேர்வு தொடர்பாக அறக்கட்டளை சார்பில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
ayodhya ramar temple kumbabishekam
அயோத்தியில் ராமர் கோயில் ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், குழந்தை ராமர் சிலைகளை உருவாக்கிய மூன்று சிற்பிகளில் ஒருவரான அருண் யோகிராஜுக்கு கர்நாடக பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மூன்று சிலைகளில் எது சன்னதியில் வைக்கப்படும் என்பதை ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் யோகிராஜின் பணி தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறினர்.
மைசூருவில் வசிக்கும் யோகிராஜ், பிரபல சிற்பி குடும்பத்தைச் சேர்ந்தவர். தனது குடும்பம் 250 ஆண்டுகளாக அல்லது கடந்த ஐந்து தலைமுறைகளாக இந்த வேலையைச் செய்து வருவதாக அவர் கூறுகிறார்.
யார் இந்த அருண் யோகிராஜ் ?
38 வயதான யோகிராஜ், நாட்டில் அதிகம் விரும்பப்படும் சிற்பிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். எம்பிஏ பட்டம் பெற்று சிறிது காலம் வேலையில் பணியாற்றிய அருண், மீண்டும் தனது குடும்பத் தொழிலுக்கு திரும்பினார்.
“நான் 11 வயதிலிருந்தே என் தந்தைக்கு சிற்பக்கலையில் உதவி வருகிறேன். சில மாதங்கள் வேறொரு இடத்தில் வேலை செய்த பிறகு, சிற்பம் செய்வது தான் எனக்கு பிடித்த விஷயம் என்பதை உணர்ந்தேன். நான் 2008 இல் வீட்டிற்கு வந்தேன். என் தந்தை என் முடிவை ஆதரித்தாலும், நான் வேலையை விட்டு வந்ததில் என் அம்மாவுக்கு மகிழ்ச்சி இல்லை. இறுதியாக 2014 இல் தென்னிந்தியாவின் இளம் திறமைக்கான விருதைப் பெற்றபோது என் அம்மாவுக்கு நம்பிக்கை வந்தது, ”என்று யோகிராஜ் கூறினார்.
அவரது தாத்தா, பி பசவண்ணா சில்பி, மைசூர் மன்னர்களால் ஆதரிக்கப்பட்டு, மைசூர் அரண்மனையின் அரச குருவான ஷில்பி சித்தாந்தி சித்தலிங்க சுவாமியிடம் பயிற்சி பெற்றார்.
மைசூர் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள காயத்ரி கோவிலுக்கு 11 மாதங்களில் 64 சிலைகளை பசவண்ணா ஷில்பி செய்து கொடுத்துள்ளார்.
அருண் யோகிராஜ் குழுவில் 15 கைவினைஞர்கள் உள்ளனர் மற்றும் சில மாணவர்கள் கலையைக் கற்றுக்கொள்ள முன்வந்துள்ளனர். இந்தியா தவிர, அமெரிக்கா, மலேசியா மற்றும் பிற இடங்களில் இருந்தும் அவருக்கு பல ஆர்டர்கள் வருகிறது.
மேலும் பல மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்துள்ளார். குழந்தைகளுக்கு களிமண் மாடலிங் மற்றும் பிற திறன்களைப் பயிற்றுவிப்பதற்காக மைசூருவில் பிரம்மர்ஷி காஷ்யப ஷில்பகலா ஷாலா அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.
அவருடைய சில பிரபலமான படைப்புகள் யாவை?
யோகிராஜின் சில படைப்புகளில் டெல்லி இந்தியா கேட் பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸின் 28 அடி உயரஒற்றைக்கல் கருப்பு கிரானைட் கல் சிற்பம்; உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள 12 அடி உயர ஆதி சங்கராச்சாரியார் சிலை; மைசூர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் , இந்தியாவின் மிகப்பெரிய 10 அடி ஒற்றைக்கல் வெள்ளை பளிங்கு கல் சிற்பம் அடங்கும். இதுதவிர இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களில் பஞ்சமுகி கணபதி, மகாவிஷ்ணு, புத்தர், நந்தி, சுவாமி சிவபால யோகி, சுவாமி சிவகுமார மற்றும் பனசங்கரி தேவி ஆகியோரின் சிற்பங்கள் நிறுவப்பட்டுள்ளன.
51 அங்குலம் (4.25 அடி) கொண்ட சிலை ஐந்து வயது குழந்தை ராமர் போல இருக்க வேண்டும் என்று மூன்று சிற்பிகளிடம் அறக்கட்டளை கூறியதாக யோகிராஜ் கூறினார்.
“நேபாளம், உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள கார்காலா, மைசூரு மாவட்டத்தில் உள்ள எச்டி கோட் மற்றும் ராஜஸ்தானின் மக்ரானா போன்ற பல இடங்களில் இருந்து கற்கள் வழங்கப்பட்டன. நான் எச்டி கோட்டிலிருந்து கிருஷ்ண ஷிலா கல்லைத் தேர்ந்தெடுத்தேன். சுரங்கம் மற்றும் புவியியல் துறையின் விஞ்ஞானிகளும் உள்ளீடுகளை வழங்கினர்.
இந்த கற்களில் சில பக்தர்கள் ஊற்றும் தண்ணீர் மற்றும் பாலுக்கு எதிர்வினையாற்றுகின்றன. கிருஷ்ணா ஷிலா என்பது எந்த திரவத்திற்கும் வினைபுரியாத ஒரு தனித்துவமான கல், இது கர்நாடகாவில் 1,000 ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது, ”என்று அவர் கூறினார்.
குழந்தை கிருஷ்ணர்
குழந்தை கிருஷ்ணர் பற்றிய குறிப்புகள் இருந்தாலும், ராமரின் குழந்தைப் பருவத்தைப் பற்றி சில விளக்கங்களே கிடைக்கின்றன என்று கலைஞர் மேலும் கூறினார்.
“நான் சில பள்ளிகளுக்குச் சென்றேன். மைசூருவில் ஒரு குழந்தைகளுக்கான நிகழ்வு (சின்னரமேளா, ரங்கயானாவில் ஒரு கோடைகால முகாம்) இருந்தது. குழந்தைகளை அவதாணிப்பதற்காக அங்கு சென்றேன். ஐந்து வயது குழந்தை மூன்று வயது அல்லது நான்கு வயது குழந்தையிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. சுமார் 1,200 புகைப்படங்களுடன் ஐந்து வயதுக் குழந்தை எப்படி இருக்கிறது என்பதைப் பிடிக்க முயற்சித்தேன்.
ஒரு குழந்தையின் அப்பாவித்தனத்துடன் சிலை, தெய்வீகத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். சிலையை கற்பனைக்கு கொண்டுவர இரண்டு மாதங்கள் ஆனது.
அடுத்த நான்கு மாதங்களில், சிலையை செதுக்கினேன். நான் வீட்டை விட்டு வெளியே அயோத்தியில் இருந்ததால், ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்தேன், அதன் பிறகு அடுத்த நாளுக்கு சில ஹோம்வொர்க் செய்தேன்” என்று யோகிராஜ் கூறினார்.
பெங்களூரைச் சேர்ந்த ஜி.எல்.பட் மற்றும் ராஜஸ்தானின் சத்தியநாராயண பாண்டே சிலையை உருவாக்கிய மற்ற இரண்டு சிற்பிகள். அறக்கட்டளை இந்த மூன்று சிலைகளில் ஒன்றை கருவறைக்குள் நிறுவும், மற்ற இரண்டு கோவில் வளாகத்தில் வைக்கப்படும்.