அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேரம் எப்போது? When is Ayodhya Ram Temple Kumbabhishekam Time

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேரம் எப்போது?

When is Ayodhya Ram Temple Kumbabhishekam Time?

 When is Ayodhya Ram Temple Kumbabhishekam Time    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவான இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்கிறார். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகமானது எந்த மணி நேரத்தில் ஆரம்பிக்கிறது என்றால் 12.05 மணி முதல் 12 .55 மணி வரையிலான நேரத்தில் ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெற உள்ளது .மிகவும் நல்ல நேரம் ஆன 12 மணி 29 நிமிடங்கள் முதல் 12 மணி 30 நிமிடங்களில் இந்த நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளது .அப்போது ஹெலிகாப்டர்கள் மூலம் கோயிலில் மலர்கள் தூவப்படும்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
When is Ayodhya Ram Temple Kumbabhishekam Time
When is Ayodhya Ram Temple Kumbabhishekam Time


அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான பூஜைகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கின. 6 நாட்களாக பல்வேறு பூஜைகள் நடந்த நிலையில், 7ஆவது நாள் பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்கிறார். டெல்லியில் இருந்து புறப்படும் அவர், காலை 10.25 மணி அளவில் அயோத்தி விமான நிலையம் சென்றடைகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் 10.55 மணிக்கு விழா நடைபெறும் ராமஜென்ம பூமிக்கு செல்கிறார். 11 மணி அளவில் ராமர் கோயிலுக்குள் சென்று, அங்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்துகொள்கிறார். நண்பகல் 12 மணி வரை அந்த பூஜைகள் நடைபெறும்.


When is Ayodhya Ram Temple Kumbabhishekam Time?

அதனைத் தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான, ராமர் சிலை பிரதிஷ்டை அபிஜித் முகூர்த்த நேரத்தில் நடைபெறும். 12.05 மணி முதல் 12.55 மணி வரையிலான நேரத்தில் ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெறவுள்ளது. மிகவும் நல்ல நேரமான 12 மணி 29 நிமிடங்கள் முதல் 12 மணி 30 நிமிடங்களில் இந்த நிகழ்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது ஹெலிகாப்டர்கள் மூலம் கோயிலில் மலர்கள் தூவப்படுகிறது.

பிரதமர் முன்னிலையில் இந்த பிரதிஷ்டை நடைபெறுவதால், 11 நாட்களாக கடும் விரதத்தை அவர் மேற்கொண்டுள்ளார். பிரதிஷ்டையின்போது, சடங்குகளை முன்னின்று நடத்த நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்குப் பகுதிகளில் இருந்து 14 தம்பதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உரையாற்றுவர் 2.10 மணி அளவில் ராம ஜென்மபூமி வளாகத்தில் உள்ள சிவன் கோயிலில் பிரதமர் வழிபடுகிறார்.


When is Ayodhya Ram Temple Kumbabhishekam Time?

ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க 8 ஆயிரத்திற்கும் அதிகமான சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இசைஞானி இளையராஜா பங்கேற்கவில்லை. தமிழ்நாட்டில் இருந்து ரஜினிகாந்த், தனுஷ், TCS என்.சந்திரசேகரன், ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட சிறப்பு அழைப்பாளர்கள் பிரதமருடன் சிறப்பு விருந்தில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

விழா முடிந்து பிரதமர் 3.30 மணிக்கு அயோத்தியில் இருந்து புறப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி அயோத்தி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.


When is Ayodhya Ram Temple Kumbabhishekam Time?

 

Leave a Comment

error: Content is protected !!