மோசமான இன்ஜினியரிங் கல்லூரிகள் மூட நடவடிக்கை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு!! 25 Engineer Colleges Closed Minister Rajakannappan Announced

மோசமான இன்ஜினியரிங் கல்லூரிகள் மூட நடவடிக்கை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு!!

25 Engineer Colleges Closed Minister Rajakannappan Announced

25 Engineer Colleges Closed Minister Rajakannappan Announced பொறியியல் கல்லூரிகளை பொறுத்த வரை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக பொறியியல் கல்லூரிகள் உள்ளன என் நிலையில் தமிழகத்தில் உள்ள மோசமான பொறியியல் கல்லூரிகளை மூட நடவடிக்கை ஏற்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
25 Engineer Colleges Closed Minister Rajakannappan Announced
25 Engineer Colleges Closed Minister Rajakannappan Announced

பொறியியல் கல்லூரிகள் மேல் மாணவர்களுக்கு இருந்த ஆர்வம் தற்போது குறைந்துள்ளதால் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் குறைந்த அளவிலே மாணவர்கள் சேர்க்கையானது நடைபெறுகின்றது.

ஒரு சில கல்லூரிகளில் ஒரு இலக்கங்களில் கூட மாணவர்கள் சேர்க்கை இருப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயங்கள் இதனால் அந்த கல்லூரிகளில் திறம்பட முழுமையாக கல்லூரிகள் செயல்பட முடியாமல் தடுமாறி வருவதால் அந்த கல்லூரிகளை கண்டறிந்து அதற்கான அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள மிக முக்கிய தகவல் பார்க்கலாம்.

அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் 25 பொறியியல் கல்லூரிகள் மோசமான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிண்டிகேட் ஒப்புதல் பெற்று அவை மூடப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

தமிழக உயர்கல்வி அமைச்சர் ராஜகண்ணப்பன், அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நிதிப் பற்றாக்குறை நாடு முழுவதும் உள்ளது. பல்கலைக்கழகங் களைப் பொறுத்தவரை சிலவற்றில் பற்றாக்குறை உள்ளது. சிலவற்றில் நிதி அதிகமாக உள்ளது. பாரதியார், அண்ணா பல்கலைக்கழகங்களில் பற்றாக்குறை உள்ளது. இவற்றை சரிசெய்துவிடலாம். உயர்கல்வியில் 50 சதவீதத்துக்கு மேல் தமிழகத்தில் சேர்க்கை உள்ளது. இந்திய அளவில் நாம் முதலிடம் வகிக்கிறோம்.

25 Engineer Colleges Closed Minister Rajakannappan Announced

சென்னை பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. துணைவேந்தர் நியமனம் தொடர்பாக ஆளுநர், முதல்வருடன் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

நிர்வாக ரீதியான கருத்துகள்: அரசு என்பது மக்களால் தேர்தல்மூலம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், ஆளுநர் நியமிக்கப்பட்டவர். அவரை குறைகூற விரும்பவில்லை. பிப்.12-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது. ஆளுநரை அழைத்துள்ளோம். ஆளுநரைப் பொறுத்தவரை அரசியல் ரீதியானவற்றைத் தவிர, நிர்வாக ரீதியான கருத்துகள் கூறினால் அவற்றை ஏற்கத் தயாராக உள்ளோம்.

பேராசிரியர் நியமனத்தை பொறுத்தவரை நிதி இருப்பை பொறுத்து நியமிக்கப்படுகின்றனர். தற்போதுகூட ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 4 ஆயிரம் பேர் நியமிக்கப்படுகின்றனர். அனைத்து துறைகளிலும் காலியிடங்கள் உள்ளன. அதேநேரம் நிதிநிலைமை குறித்தும் பார்க்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கான சம்பளம் 74 சதவீதம் சென்று விடுகிறது. இதற்கிடையே பேரிடர்களையும் அரசு சந்திக்க வேண்டியிருப்பதால், பிரச்சினைகள் உள்ளன. அடுத்த கல்வியாண்டில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு விடுவார்கள்.

25 Engineer Colleges Closed Minister Rajakannappan Announced

பொறியியல் கல்லூரிகளில் தமிழகத்தைப் பொறுத்தவரை எந்தமோசமான சூழலும் இல்லை. சில கல்லூரிகளை நடத்த முடியாமல் உள்ளனர். அதுதொடர்பாக 7 கல்லூரிகள் விண்ணப்பித் துள்ளனர். அதேபோல், அண்ணாபல்கலைக்கழகத்தின் விசாரணையில் மோசமான கல்லூரிகளாக 25 கல்லூரிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றையும் மூட வேண்டிய சூழல் உள்ளது. சிண்டிகேட் ஒப்புதல் பெற்று அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய கல்விக் கொள்கையில் நல்ல விஷயங்கள் இருந்தால் அவை ஏற்கப்படும். மாநில கல்விக்கொள்கை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின், முதல்வர் தலைமையில் இரண்டும் ஒப்பிடப் பட்டு முடிவெடுக்கப்படும்.

அரசின் முடிவே இறுதி: தமிழக பல்கலைக்கழகங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் அளிக்கப்படும். துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவில் உள்ள ஒருவரை நியமிக்க வேண்டும் என்று ஆளுநர் பரிந்துரைத்தாலும் அரசின் முடிவே இறுதியானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது, துறையின் செயலர் கார்த்திக், பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Leave a Comment

error: Content is protected !!