மே மாதம் குரு பெயர்ச்சி வந்தாச்சு இனி 12 ராசியின் பலன்கள் என்னென்ன.. Happy Guru Peyarchi 2024 May 1 Tamil Rasi Palangal all

Guru Peyarchi 2024 May 1 Tamil Rasi Palangal all

மே மாதம் குரு பெயர்ச்சி வந்தாச்சு இனி 12 ராசியின் பலன்கள் என்னென்ன..

அனைவரது வாழ்விலும் நவ கிரகங்களின் பெயர்ச்சியின் மூலம் வாழ்வின் ஒவ்வொரு நிலை ஒவ்வொரு ராசிக்காரர்களும் அந்தந்த காலகட்டங்களில் அனுபவித்து வருகின்றனர் அந்த வகையில் இன்று நடைபெறுகின்ற இந்த குரு பெயர்ச்சியானது பலரது வாழ்வில் ஒளி வீசும் பெயர்ச்சியாக இந்த குரு பெயர்ச்சி அமையப்போகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

இந்த குரு பெயர்ச்சியின் மூலம் குறிப்பிட்ட சில ராசியில் உள்ளவர்களுக்கு மிகுந்த சுப பலன்களை குரு அளிக்கவுல்லா மேலும் சில ராசிகளுக்கு மிதமான பலன்களை அவர் வழங்க உள்ளார் பரிகாரங்கள் செய்யக்கூடிய ராசியில் உள்ளவர்கள் நீங்கள் குருவை முறையாக வழிபடுவதன் மூலம் உங்களது குறைகளை நிவர்த்தி செய்ய எந்த குரு பகவான் வழிவகை செய்வார் எனவே அனைவரும் இந்த குரு பெயர்ச்சி 12 ராசிகளுக்கான பொதுவான பலன்கள் என்ன என்பதை அறிந்து கொள்வோம் குரு பெயர்ச்சி 2024 பற்றி முழுமையான தகவல்களை நாம் இப்போது பார்க்கலாம்.

குரு பெயர்ச்சி 2024

மேஷ ராசியில் இருந்த குரு பகவான் மே மாதம் ஒன்றாம் தேதி, சித்திரை மாதம் 18ஆம் நாளான இன்று பகல் 1 மணிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படியும், மாலை 5.19 மணிக்கு வாக்கிய பஞ்சாங்கப்படியும் ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி ஆகிறார். கோயில்களில் வாக்கிய பஞ்சாங்க நேரப்படி வழிபாடுகள் நடைபெறும்.

Guru Peyarchi 2024 May 1 Tamil Rasi Palangal all
Guru Peyarchi 2024 May 1 Tamil Rasi Palangal all
 • மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு ஜென்மத்தில் இருந்த குரு பகவான் இரண்டாம் இடத்திற்கு வருவதால், மன அழுத்தம் தீரும். தொழில், உத்யோகம், வியாபரத்தில் செல்வாக்கு உயரும். நீண்ட நாட்களாக இருந்த அலைச்சல்கள் மற்றும் பயங்கள் நீங்கி அமைதி கிடைக்கும். 6, 8, 10ஆம் இடங்களை குரு பகவான் பார்ப்பது விஷேஷம் தரும். சத்ருக்கள், துரோகிகளை வெல்வீர்கள். 

 • ரிஷபம்

ஜென்ம ராசிக்கு வரும் குரு பகவான், 5, 7, 9 ஆகிய இடங்களை பார்க்கிறார். 30 வயதை கடந்த ரிஷப ராசிக்காரர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், உத்யோக மாற்றம், தொழில் மாற்றங்களை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு மாறுதல்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்னைகள் தீரும். பிள்ளைகள் படிப்பு, தொழில், உத்யோகம் மேம்படும், திடீர் பணவரவு ஏற்படும். குடும்பத்தில் இருந்த மன அழுத்தம் நீங்கும். கணவன், மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். 

 • மிதுனம்

12 ஆம் இடத்திற்கு வரும் குரு பகவான், உங்கள் ராசிக்கு 4, 6, 8 ஆம் இடங்களை பார்க்கிறார். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய், தந்தை, சகோதர சகோதரிகள் ஆதரவு கிட்டும். கடன் தொல்லைகளில் சிக்கி இருந்தவர்களுக்கு தீர்வுகள் கிடைக்கும். உடல்நல பிரச்னைகள் தீரும். வழக்கு உள்ளிட்ட பிரச்னைகள் உங்களுக்கு சாதகம் ஏற்படுத்தும். தொழில் முதலீடுகளில் மட்டும் கவனமாக இருப்பது அவசியம். 

 • கடகம்

கடக ராசிக்கு 11ஆம் இடத்திற்கு குரு பகவான் வருகிறார். மேலும் 9ஆம் இடத்தில் ராகுவும், 3ஆம் இடத்தில் கேதுவும் உள்ளனர். அஷ்டம சனி பாதிப்பும் கடக ராசிக்கு உள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையாரை வழிபாடு செய்வது மேன்மை தரும். முதலீடு செய்வதில் கவனம் தேவை. தொழில் சார்ந்த விஷயங்களில் இருந்த பிரச்னைகள் நீங்கி ஏற்றம் உண்டாகும். மனக்கவலை படிப்படியாக குறையும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். பிள்ளைகளின் தொழில், வியாபாரம், கல்வி ஏற்றம் பெறும். குடும்பத்தில் புது வரவு வரும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். 

 • சிம்மம்

10ஆம் இடத்தில் வரும் குரு பகவானால் திருச்செந்தூர் முருகனை சரணாகதி அடைவது நல்லது. உத்யோகத்தில் கவனமாக இருப்பது அவசியம். குடும்ப உறவுகள், எதிர் பாலினத்தவர்கள் மூலம் சிக்கல்கள் ஏற்படலாம். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். பெற்றோர், பெரியோருடன் சண்டை இடக்கூடாது. பொறுமையாக இருந்தால் பழைய கடன்கள் தீரும். படிப்பில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். தேக ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். 

 • கன்னி

9ஆம் இடத்தில் குரு பகவான் வருவதால் மன மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் படிப்பு, உத்யோகம், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும்.  உங்கள் தொழில் சார்ந்த விஷயங்களில் வளர்ச்சி கூடும். பண வரவுக்கு உண்டான அனுகூலங்கள் ஏற்படும். எது வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற தைரியம் பிறக்கும். நரம்பு, கழுத்து ஆகிய உறுப்புகளை கவனித்துக் கொள்வது நல்லது. செல்வாக்கு உயர்ந்து வாழ்வில் முன்னேற்றம் கூடும். பூமி, வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கோபம் கூடாது. திருமணம், குழந்தை பாக்கியம், வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, ஊர் மாற்றம் ஆகியவற்றில் நன்மைகள் கூடும். 

 • துலாம்

8ஆம் இடத்தில் வரும் குரு பகவானால், ராஜயோகம் உண்டாகும்.  தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். உடல் நல பாதிப்புக்கு  சுய மருத்துவம் எடுத்துக் கொள்ள கூடாது. பிள்ளைகள் விஷயத்தில் கோபம் கூடாது. தனம், வாக்கு, குடும்பம் விஷயங்களில் அனுகூலம் கூடும். வாழ்கை துணைக்கு புகழ் உண்டாகும். திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். வீடு கட்டுவது, நிலம் வாங்குது, வாகனம் வாங்குவது போன்ற சுப விரயங்கள் ஏற்படும். குடும்பத்தினர் உடன் அன்னோனியம் அதிகரிக்கும். கடன் வாங்கி முதலீடு போட்டாலும் லாபம் கிடைக்கும்.  

 • விருச்சிகம்

மன அழுத்தம் நீங்கும், லாபம் ஏற்படும். பண சேமிப்பு உண்டாகும். புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்வீர்கள். உடற்பயிற்சி செய்வது முக்கியம், வயிறு, கால், முட்டி பாதங்களில் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் கோபம் கூடாது. தாய் மற்றும் தந்தை வழி உறவுகள் உடன் வாக்குவாதம் கூடாது. 

திருமணம், குழந்தை பாக்கியம், வீடு வாங்குவது உள்ளிட்ட சுபகாரியங்கள் நடைபெறும். 3ஆம் இடத்தை குரு பார்ப்பதால் தைரியம் உண்டாகும். இரவு நேர பயணத்தில் கவனம் அவசியம். திருக்கொள்ளிக்காட்டில் வழிபாடு நடத்துவது நன்மை தரும். 

 • தனுசு

6ஆம் இடத்திற்கு குரு பகவான் வருவதால் தனுசு ராசு மிக கவனமாக இருக்க வேண்டும். கோபம், சண்டை சச்சரவு வேண்டாம். தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது முக்கியம். 

குருவின் 10ஆம் இட பார்வையால், உத்யோகம், தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பணத்தட்டுப்பாடு தீரும். புதிய பயணங்கள் உண்டாகும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். பெற்றோர் பெரியோர் உடன் தகராறு வேண்டாம். ஆலங்குடி அல்லது தென்குடி திட்டை கோயில்களில் வழிபாடு செய்வது நன்மை தரும்.  

 • மகரம்

குருவின் 9ஆம் பார்வை கிடைப்பதால் வாழ்கையில் வளர்ச்சி உண்டாகும். தாய் வழி மற்றும் தந்தை வழி உறவுகளில் ஏற்றம் உண்டாகும். லாபம் ஏற்பட்டு பணம் சேரும், முதலீடு செய்யும் அளவுக்கு வசதிகள் பெருகும். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னைகள் நீங்கும். தனியாக சென்று தொழில் செய்ய வாய்ப்பு உண்டாகும். அரசியல், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட சமூகத்தில் மதிப்பு மிக்கவர்களின் தொடர்பு உண்டாகும். கலை, ஊடகத்துறையில் உள்ள மகர ராசிக்கார்கள் விருதுகளை பெருவார்கள். வார்த்தைகளிலும் வயிறு தொடர்பான பிரச்னைகளிலும் கவனம் தேவை. நரசிம்மர் மற்றும் துர்கை அம்மன் வழிபாடு நன்மைகளை ஏற்படுத்தி தரும். 

 • கும்பம்

4ஆம் இடத்திற்கு வரும் குரு பகவான் 8, 10, 12 ஆகிய இடங்களை பார்க்கிறார். தாய் வழி உறவு, பூர்வீக சொத்துக்களில் கவனமாக இருக்க வேண்டும். கோபம் அடையாமல் இருக்கும் கும்ப ராசிக்காரர்கள் நன்மைகளை பெறுவார்கள். யாரையும் சபிக்காமல் இருக்க வேண்டும். மன அழுத்தம் நீங்கும். பிரச்னை உள்ளவர்களிடம் நீங்களே பேசி சமாதானம் செய்து கொள்ளுங்கள். 60 வயதிற்கு மேற்பட்ட கும்ப ராசிக்கார்கள் உடல்நலனின் கவனமாக இருக்க வேண்டும். ஆஞ்சநேயர் வழிபாடு சிக்கல்களை தீர்த்து நன்மைகளை பெருக்கும்.

Guru Peyarchi 2024 May 1 Tamil Rasi Palangal all
Guru Peyarchi 2024 May 1 Tamil Rasi Palangal all
 • மீனம்

மூன்றாம் இடத்திற்கு வரும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களை பார்க்கிறார். திருமணத் தடைகள் நீங்கும், குடும்பத்தில் இருந்த் பிரச்னைகள் தீரும். மன அழுத்தம் இல்லாமல் இருக்க உடற்பயிற்சி செய்வது முக்கியம். நீண்ட காலமாக இருந்த கஷ்டங்கள் நீங்கி ஏற்றம் உண்டாகும். படிப்பு, உத்யோகம், தொழில், வியாபாரங்களில் இருந்த தடைகள் நீங்கி பண வரவு உண்டாகும்.  புதிய முதலீடுகளை செய்யும் நீங்கள் தியான பயிற்சிகளை மேற்கொள்வது முக்கியம். கோளறு பதிக்கத்தை படிக்கவும், கேட்கவும் செய்தால் சிக்கல்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும். 

TN Results 2024

Leave a Comment

error: Content is protected !!