உங்கள் மெசேஜ் நீங்கள் தேட வேண்டியது இல்லை வாட்ஸ் அப்பில் வந்த சூப்பர் அப்டேட் Whatsapp new update 2024 in tamil chat search by date

Whatsapp new update 2024 in tamil chat search by date

உங்கள் மெசேஜ் நீங்கள் தேட வேண்டியது இல்லை வாட்ஸ் அப்பில் வந்த சூப்பர் அப்டேட்

Whatsapp new update 2024 in tamil chat search by date ஸ்மார்ட் போன் வைத்துள்ள அனைவரும் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும் அதுவும் வாட்ஸ்அப் இல்லாத ஸ்மார்ட் போன் பயனார்களை விரல் விட்டு எண்ண முடியும் அந்த அளவுக்கு ஸ்மார்ட்போனில் வாட்ஸ் அப்பில் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

Whatsapp new update 2024 in tamil

வாட்ஸ் அப் இல்லாமல் எந்த தகவலையும் எளிதாக பரிமாற முடியாது என்ற அளவுக்கு வாட்ஸ் அப் மாற்றி இருக்கிறது எந்த வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்களை அவ்வபோது மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகின்றது அந்த வகையில் அறிமுகமான ஒரு சூப்பர் அப்டேட்டை நாம் பார்க்கலாம் வாட்ஸ்அப்பில் தேதி வாரியாக மெசேஜ் சாட்களை ஆண்ட்ராய்டு இயங்குதள போன்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் தேடும் அம்சம் அறிமுகமாகி உள்ளது. முன்னதாக, இந்த அம்சம் வாட்ஸ்அப் வெப் மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் பயனர்கள் பயன்படுத்தி வந்தனர்.

Whatsapp new update 2024 in tamil chat search by date

வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் தேதி வாரியாக மெசேஜ்களை தேடும் அம்சம் அறிமுகமாகி உள்ளது.

இதை எப்படி பயன்படுத்துவது? பயனர்கள் வாட்ஸ்அப்பில் தேதி வாரியாக சாட்களை தேட விரும்பும் கான்டக்ட் அல்லது குரூப்பினை தேர்வு செய்ய வேண்டும். தொடர்ந்து அதன் ‘நேம்’ பகுதியை கிளிக் செய்ய வேண்டும். அதில் ‘Search’ ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அதன் மூலம் பயனர்கள் தேதி அடிப்படையில் மெசேஜ்களை தேடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் டெக்ஸ் ஃபார்மெட்டிங் ஷார்ட்கட்களை வாட்ஸ்அப் வெளியிட்டு இருந்தது.

Leave a Comment

error: Content is protected !!