தமிழ் புதல்வன் திட்டம் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 எவ்வாறு விண்ணப்பிப்பது முழு விவரம் Tamil Puthalvan Thittam how to apply online 2024

Tamil Puthalvan Thittam how to apply online 2024

தமிழ் புதல்வன் திட்டம் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 எவ்வாறு விண்ணப்பிப்பது முழு விவரம்

Tamil Puthalvan Thittam how to apply online 2024 தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (பிப்.19) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்பில் பல புதிய திட்டங்களும் இடம்பெற்றுள்ளன. அதில், ‘தமிழ்ப் புதல்வன்’ என்பதும் இடம்பெற்றுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Tamil Puthalvan Thittam how to apply online 2024
Tamil Puthalvan Thittam how to apply online 2024

தமிழ்நாடு பட்ஜெட்டில், அரசு பள்ளியில் படித்த மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடும் வகையில், ”தமிழ்ப் புதல்வன்” என்னும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சமூக நீதி, கடைக்கோடித் தமிழர் நலன், உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், மகளிர் நலன் காக்கும் சமத்துவப் பாதை, பசுமைவழிப் பயணம் மற்றும் தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் என 7 முதன்மையான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். அதில் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தன. அந்த வகையில், அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு ( ஆண்கள்) மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ரூ.1000 மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பெண்கள் உயர் கல்வியை தொடர மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம் செயல்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய திட்டம் மூலம் சுமார் 3 லட்சம் கல்லூரி மாணவர்கள் பயனடைவர் என நம்பிக்கை தெரிவித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, வரும் நிதியாண்டில் இதற்காக ரூ.360 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

தமிழ்ப் புதல்வன்:

தமிழ்ப் புதல்வன் எனும் ஒரு மாபெரும் திட்டம் வரும் நிதியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.

இத்தகைய முன்னோடித் திட்டங்களின் மூலம் நமது இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி அவர்கள் நமது மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழ்வார்கள்.

தமிழ் புதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனத்தின் மூலம் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் விண்ணப்பிக்கும் மாணவர்கள் முதலில் உங்களுடைய ஆதார் எண்ணானது வங்கி கணக்கு என்னுடன் சீடிங் செய்யப்பட்டுள்ளதா என்பதை மாணவர்கள் சரி பார்த்துக் கொள்ளவும். மாணவர்கள் தங்களுக்கு வங்கி கணக்கு இல்லையெனில் புதிதாக வங்கி கணக்கு எண்ணை துவக்கிக் கொள்ளவும் உங்களுடைய பெயர் மதிப்பெண் சான்றிதழ் பத்தாம் வகுப்பில் உள்ளவாறு ஆதார் கார்டு மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தில் உள்ளனவா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும் இல்லையெனில் அதை சரி செய்து தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும் இந்த தமிழ் புதல்வன் திட்டத்திற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டி வரும் விரைவில் இதற்கான தமிழக அரசின் வழிகாட்டுதல் வெளியாகும் வெளிவந்தவுடன் இதில் அப்டேட் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Comment

error: Content is protected !!