இலவச வீடு திட்டம் ரூபாய் 3.5 லட்சம் செலவில் கட்டிக் கொள்ளலாம் – கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் Free House Scheme Kalaignar Kanavu Illam in tamil 2024

இலவச வீடு திட்டம் ரூபாய் 3.5 லட்சம் செலவில் கட்டிக் கொள்ளலாம் – கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில்

Free House Scheme Kalaignar Kanavu Illam in tamil 2024

கலைஞரின் கனவு இல்லம் திட்டம்

Free House Scheme Kalaignar Kanavu Illam in tamil 2024 கலைஞரின் கனவு இல்லம் திட்டம் (Kalaignar Kanavu Illam) வரும் நிதியாண்டில் ரூ.3,500 கோடி செலவில் அமைத்துத் தரப்படும் என்கிற முக்கிய அறிவிப்பு ஒன்று பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டது. மேலும் குடிசை இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கினை அடையும் நோக்கத்தில் வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தின் ஊரகப்பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் தலா ஒவ்வொன்றும் 3.5 லட்சம் செலவில் உருவாக்கப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Free House Scheme Kalaignar Kanavu Illam in tamil 2024
Free House Scheme Kalaignar Kanavu Illam in tamil 2024
கலைஞரின் கனவு இல்லம்

கடந்த 2010ம் ஆண்டு குடிசை இல்லா மாநிலம் என்ற இலக்கை எட்டும் வகையில், கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளை குடிசைகளை மாற்றி அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தரும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட சமீபத்திய கணக்கெடுப்பின் படி, கிராமப்பகுதிகளில் ஏறத்தாழ 8 லட்சம் குடிசை வீடுகளில் மக்கள் வாழ்ந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

அத்தோடு, ரூ.365 கோடியில் 2,000 மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கப்படும் எனவும், ஊரகப் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களை தூர்வார ரூ.500கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.தேசிய ஊரக வேலைவாய்ப்புக்கு ரூ.300 கோடியும், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2,482 கிராமங்களுக்கு ரூ. 1,147 கோடியும் நிதி ஒதுக்கப்படுவதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், வடசென்னையில் கழிவுநீர் அகற்று மற்றும் குடிநீர் மேம்பாட்டுக்கு ரூ.948 கோடியில் புதிய வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

ரூ.1,500 கோடியில் அடையாறு கால்வாய் சீரமைக்கப்படும் எனவும், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பசுமையை மேம்படுத்த ”நகர்ப்புற பசுமை திட்டம்”, வறுமையை ஒழிக்க 5 லட்சம் ஏழைக் குடும்பங்களை கண்டறிந்து ”முதலமைச்சரின் தாயுமானவர்” போன்ற புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார். முதலமைச்சரின் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.1,000 கோடியும், 5,000 ஏரிகள், குளங்கள் புனரமைக்க ரூ.500 கோடியும் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!