தமிழகத்தில் 7 புதிய மாவட்டங்கள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? Tamil Nadu Have New 7 District Announced Soon

தமிழகத்தில் 7 புதிய மாவட்டங்கள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

Tamil Nadu Have New 7 District Announced Soon

Tamil Nadu Have New 7 District Announced Soon நிர்வாக காரணங்களுக்காகவும் மற்றும் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை அடிப்படையில் 7 புதிய மாவட்டங்கள் உருவாகப் போவதாக சொல்லப்படுகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Tamil Nadu Have New 7 District Announced Soon
Tamil Nadu Have New 7 District Announced Soon

அந்த மாவட்டங்கள் என்ன என்னவென்றால் கும்பகோணம், பொள்ளாச்சி ,ஆரணி ,விருதாச்சலம், கோவில்பட்டி ,பழனி, கோபிசெட்டிபாளையம் ஆகியவை புதிய மாவட்டங்களாக உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது.

புதிய மாவட்டங்களாக அறிவிப்பு வெளியான உடனே அம்மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்படுவர்.

கும்பகோணம், பொள்ளாச்சி, கோவில்பட்டி, பழனி, ஆரணி, விருத்தாச்சலம், கோபிச்செட்டிபாளையம் ஆகியவை புதிய மாவட்டங்களாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் எழு புதிய மாவட்டங்கள் உதயமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நிர்வாகக் காரணங்களுக்காகவும் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையின் அடிப்படையிலும் இந்த புதிய மாவட்டங்களைப் பிரிக்க திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தற்போது தமிழகத்தில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. கடைசியாக 2020ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து, புதியதாக மயிலாடுதுறை மாவட்டம் 38வது மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு 2019ஆம் ஆண்டில் 5 மாவட்டங்கள் புதிதாக உருவெடுத்தன.

முன்னதாக, நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டம் (33), விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் (34), வேலூர் மாவட்டத்தைப் பிரித்து திருப்பத்தூர் மாவட்டம் (35) மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் (36), காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டு மாவட்டம் (37) என 5 புதிய மாவட்டங்கள் உருவாயின.

Tamil Nadu Have New 7 District Announced Soon

இந்த ஐந்து மாவட்டங்கள் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரிக்கப்பட்டன. ஐந்து புதிய மாவட்டங்களுக்கும் அதே ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.

பிறகும் பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தனி மாவட்டம் கோரி அரசிடம் மனுக்கள் அளித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் புதிதாக 7 மாவட்டங்கள் உதயமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கும்பகோணம், பொள்ளாச்சி, கோவில்பட்டி, பழனி, ஆரணி, விருத்தாச்சலம், கோபிச்செட்டிபாளையம் ஆகியவை புதிய மாவட்டங்களாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Leave a Comment

error: Content is protected !!