தமிழகத்தில் 10,11,12 பொதுத் தேர்வு குறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!.. Tamil Nadu 10th 11th 12th Public Exam Update 2024

தமிழகத்தில் 10,11,12 பொதுத் தேர்வு குறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!..

Tamil Nadu 10th 11th 12th Public Exam Update 2024

Tamil Nadu 10th 11th 12th Public Exam Update 2024 தமிழகத்தில் 10,11,12 பொதுத் தேர்வு குறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு .தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் பொதுத்தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Tamil Nadu 10th 11th 12th Public Exam Update 2024
Tamil Nadu 10th 11th 12th Public Exam Update 2024

பொதுத்தேர்வு ஏற்பாடு

தமிழகத்தில் 10, 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் முதல் பொதுத்தேர்வு தொடங்குகிறது. அதில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26 ஆம் தேதியும் தேர்வு நடைபெற இருக்கிறது. இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வுகளை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறையின் அரசு தேர்வு துறை சார்பில் அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவார்கள்.

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பொதுத்தேர்வை கண்காணிக்கவும், மேற்பார்வையிடவும், பள்ளிக்கல்வி, தொடக்கக்கல்வி இயக்ககங்கள், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி, மற்றும் பயிற்சி நிறுவனம், ஆசிரியர் தேர்வு வாரியம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி,தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகளை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன் அரசாணை பிறப்பித்துள்ளாா்.

 

Leave a Comment

error: Content is protected !!