11th 12th செய்முறை தேர்வு பற்றி பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!..11th 12th Practical Exam Full Details For Educational Department Announced

11th 12th செய்முறை தேர்வு பற்றி பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!..

11th 12th Practical Exam Full Details For Educational Department Announced

11th 12th Practical Exam Full Details For Educational Department Announced தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு எப்போது எனவும், அதற்கான வழிகாட்டுதல்களையும் பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
11th 12th Practical Exam Full Details For Educational Department Announced
11th 12th Practical Exam Full Details For Educational Department Announced

செய்முறை தேர்வு:

தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 ஆம் தேதி முதல் மார்ச் 25ஆம் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது. இன்னும் தேர்வுக்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில் மாணவர்கள் தீவிரப் பயிற்சியில் இறங்கியுள்ளனர். இதற்கு முன்பாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையிலும் நடைபெற இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்த வழிகாட்டுதல்களை தற்போது தேர்வு துறை இயக்குனரகம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளது.

11th 12th Practical Exam Full Details For Educational Department Announced

அதாவது, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வினை பிப்.12ஆம் தேதி முதல் 17ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கும்படியும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வினை பிப். 19ஆம் தேதி முதல் 24 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை தலைமை ஆசிரியர்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும் எனவும், தேர்வின் போது மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செய்முறை தேர்வின் போது பள்ளிக்கு வருகை தராத மாணவர்களின் விவரங்களையும் படிவத்தில் பூர்த்தி செய்து பள்ளி கல்வித்துறைக்கு ஒப்படைக்க வேண்டும்படியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

11th 12th Practical Exam Full Details For Educational Department Announced

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வுக்கான செய்முறைத் தோ்வு தேதிகள், வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தோ்வுத் துறை இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

தமிழக பள்ளிக் கல்வியில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தோ்வு மாா்ச் 1 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதற்குமுன் மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் பிப்.12 முதல் 24-ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி பிளஸ் 2 வகுப்புக்கு பிப். 12 முதல் 17-ஆம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு பிப். 19 முதல் 24-ஆம் தேதி வரையும் செய்முறைத் தோ்வு நடத்தி முடிக்க வேண்டும்.

இதையடுத்து மாணவா்களின் செய்முறைத் தோ்வு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியலை பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் பிப்ரவரி 5 முதல் 17-ஆம் தேதிக்குள் தோ்வுத் துறை (‌h‌t‌t‌p://‌w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n) வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் மாணவா்களின் செய்முறை மதிப்பெண் விவரங்களை பூா்த்தி செய்து மாவட்ட தோ்வுத்துறை அலுவலகங்களில் சமா்பிக்க வேண்டும். தோ்வின் போது மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.

 

அதேபோல், தோ்வுக்கு வருகை புரியாதவா்களின் விவரங்களையும் அதற்குரிய படிவத்தில் பூா்த்தி செய்து வழங்க வேண்டும். தோ்வுக்கு தேவையான முன்னேற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியா்கள் முன்கூட்டியே திட்டமிட்டு முறையாக செய்ய வேண்டும்.

 

இதுதவிர செய்முறை தோ்வுக்கான புறத்தோ்வாளராக பிற பள்ளிகளின் ஆசிரியா்களைத்தான் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!