செய்கூலி சேதாரம் இல்லாமல் தங்கம் வாங்கணுமா.. இந்த 5 நாட்கள் மட்டுமே கிடைக்கும்!.. Sovereign Gold Bond Scheme Start Feb 12

செய்கூலி சேதாரம் இல்லாமல் தங்கம் வாங்கணுமா.. இந்த 5 நாட்கள் மட்டுமே கிடைக்கும்!..

Sovereign Gold Bond Scheme Start Feb 12

Sovereign Gold Bond Scheme Start Feb 12 தங்கத்தை முதலீட்டு நோக்கில் மட்டும் வாங்க மட்டுமே விரும்புபவர்களை இலக்காக வைத்து 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது தான் தங்கப் பத்திரத் திட்டம் (Sovereign Gold Bond scheme – SGB). இத்திட்டத்தில் தங்கத்தை பொருள் வடிவில், அதாவது நகையாகவே, நாணயமாகவோ வாங்காமல் பத்திர வடிவில் வாங்கி முதலீட்டிற்கான பலனை பெற முடியும். இதில் உள்ள மற்றொரு முக்கிய சிறப்பு அமசம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Sovereign Gold Bond Scheme Start Feb 12
Sovereign Gold Bond Scheme Start Feb 12

தங்கத்தை பொருள் வடிவில் வைத்திருந்தால், அதனை திருடு போகாமல் பாதுக்காக்க வேண்டிய பொறுப்பும் ஏற்படுகிறது. அப்படி அல்லாமல், தங்கத்தை ஆவண வடிவில் பாதுகாப்புதும் மிக எளிது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவினை பொறுத்தவரையில் தங்கத்தின் மீதான ஆர்வம் என்பது எப்போதுமே அதிகம். குறிப்பாக தமிழகத்தில் மிக அதிகம். டிஜிட்டல் தங்கத்தின் மீது தற்போது ஆர்வம் கூடிக் கொண்டே செல்லும் நிலையில், இந்த பேப்பர் தங்கம் என்பது மிகச் சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

சந்தை விலையை விட குறைந்த விலையில் தங்கம் வாங்க அரசாங்கம் மீண்டும் ஒரு வாய்ப்பைக் கொண்டு வந்துள்ளது. பட்ஜெட்டுக்கு முன்பாக தங்கத்தை மலிவாக வாங்க  மத்திய அரசு வாய்ப்பளித்து வருகிறது. தங்கத்தை மலிவாக வாங்க இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது.

தங்கப் பத்திரத் திட்டம் 2023-24 ( Sovereign Gold Bond scheme) 18 டிசம்பர் 2023 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை டிசம்பர் 22, 2023 வரை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தங்க பத்திரம் 28 டிசம்பர் 2023க்குள் வழங்கப்படும். சவரன் தங்கப் பத்திரத் திட்டத் தொடர்  பிப்ரவரி 12, 2024 அன்று தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சில வாரங்களில் தங்க பத்திரங்களை அரசு விற்பனை செய்கிறது குறிப்பிடத்தக்கது. 

தங்கப் பத்திரம் 8 ஆண்டுகளுக்கு ஒருமுறை முதிர்ச்சியடையும். விற்க விரும்புபவர்கள் 5 ஆண்டுகளுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் விற்கலாம்.

சவரன் தங்கப் பத்திரத் திட்டம்:

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு வரவுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி 2023-24 தொடரின் கடைசி தவணையான சவரன் தங்கப் பத்திரங்களை பிப்ரவரி 12 அன்று வெளியிட உள்ளது. எனவே பிப்ரவரி 12, 2024 அன்று திறக்கப்படும் SGB சந்தா பிப்ரவரி 16 அன்று நிறைவடையும். இதுகுறித்து தெளிவாக பார்க்கலாம்.

மூன்றாவது தவணை வெளியீடு டிசம்பர் 18-22, 2023 அன்று முடிவடைந்தது. அப்போது, ​​தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,199 என ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்தது. 2023-24 தொடரின் முதல் பகுதி ஜூன் 19-23 மற்றும் இரண்டாவது பகுதி செப்டம்பர் 11-15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

24 காரட் சுத்த தங்கத்தை சவரன் தங்கப் பத்திரத் திட்டத்தின் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம். மத்திய அரசின் சார்பாக ரிசர்வ் வங்கி இந்த PASI பத்திரங்களை வெளியிடுகிறது.

திட்டம் என்ன: இத்திட்டம் 2015-ல் தொடங்கப்பட்டது. இது நீங்கள் பார்க்கும் உண்மையான தங்கம் அல்ல. இது டிஜிட்டல் தங்கம். இது கண்ணுக்கு தெரியாதது. நீங்கள் வீட்டில் வைத்திருக்கும் தங்கம் அல்ல. அதன் கொள்முதல் மற்றும் விற்பனை ஆன்லைனில் செய்யப்படுகிறது. வெளியில் தங்கம் வாங்குவதை விட டிஜிட்டல் தங்கம் வாங்குவது அதிக பலன் தரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Sovereign Gold Bond Scheme Start Feb 12

விலை எவ்வளவு குறைவு?

சவரன் தங்கப் பத்திரத் திட்டத்தில், ரிசர்வ் வங்கி தங்கத்தை பத்திரங்களாக வெளியிடுகிறது. ஒரு பத்திரம் ஒரு கிராம் தங்கத்திற்கு சமம். ஆன்லைனில் பத்திரங்களுக்கு விண்ணப்பித்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால், கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி கிடைக்கும்.

பத்திரங்களை எப்படி வாங்குவது?

ஷெட்யூல்டு கமர்ஷியல் வங்கிகள், தபால் நிலையங்கள், இந்திய பங்குகளை வைத்திருக்கும் கார்ப்பரேஷன் (SHCIL), கிளியரிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (CCIL), அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகள் (NSE, BSE) மூலம் சவரன் தங்கப் பத்திரங்களுக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் வாங்கலாம். தனிநபர்கள் ஒரு நிதியாண்டில் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை வாங்கலாம். அதாவது, 4,000 பத்திரங்கள் வாங்கலாம். தங்கம் வாங்குவதற்கான KYC விதிகள் இந்த தங்கப் பத்திரத்திற்குப் பொருந்தும்.

எப்படி விற்பனை செய்வது:

இந்த தங்கப் பத்திரம் 8 ஆண்டுகளுக்கு ஒருமுறை முதிர்ச்சியடையும். விற்க விரும்புபவர்கள் 5 ஆண்டுகளுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் விற்கலாம். அப்போதைய விற்பனை விலையின் அடிப்படையில் விற்பனை செய்யப்படும்.

Sovereign Gold Bond Scheme Start Feb 12

பத்திரம் வைத்திருப்பதால் என்ன பலன்?

இந்த பத்திரங்கள் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் 2.50 சதவீத வட்டியை செலுத்துகின்றன. அதாவது 6 மாதங்களுக்கு ஒருமுறை வட்டி சேர்க்கப்படும். பங்குச் சந்தையில் சவரன் தங்கப் பத்திரங்களையும் வர்த்தகம் செய்யலாம். இவை ஜிஎஸ்டிக்கு உட்பட்டவை அல்ல. மேலும், இந்தப் பத்திரங்களை 8 ஆண்டுகள் வைத்து விற்பனை செய்தால், அதில் வரும் வருமானத்தில் டிடிஎஸ் இருக்காது. இருப்பினும், நீங்கள் பத்திரங்களை வாங்கிய நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விற்றால், வருமானம் உங்கள் தனிப்பட்ட வருமானத்தில் சேர்க்கப்படும். வருமான வரி ஸ்லாப்-படி வரி செலுத்துங்கள். 3 ஆண்டுகளுக்குப் பிறகு விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் நீண்ட கால மூலதன ஆதாயமாக இருக்கும். ஆனால், அதற்கும் வரி செலுத்த வேண்டியது அவசியம்.

Leave a Comment

error: Content is protected !!