ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி மீண்டும் விநியோகம்!!
Ration Products Again Distribute In Punjab 2024
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி மீண்டும் விநியோகம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முன்னதாக மறுக்கப்பட்டிருந்த பொருட்கள் விநியோகம் ஆனது மீண்டும் கிடைக்க அரசு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. Ration Products Again Distribute In Punjab 2024.
மீண்டும் விநியோகம்:
நாடு முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் உணவு தானிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட பொருளாதார மற்றும் வாழ்வாதார சிக்கல்களை நீக்கும் வகையில் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் மத்திய அரசின் வாயிலாக தொடங்கப்பட்டது. இந்நிலையில் திட்டத்தின் கீழ் தகுதியற்ற மக்கள் பலரும் பயனடைவதாக அரசுக்கு புகார்கள் வந்தது. இதனை தவிர்க்கும் வகையில் தகுதியான ரேஷன் அட்டைதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு மற்ற ரேஷன் அட்டைகள் திட்டத்திலிருந்து நீக்கம் செய்யப்பட அரசு உத்தரவிட்டுள்ளது.
Ration Products Again Distribute In Punjab 2024
பஞ்சாப் மாநிலத்தில் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் தொடர்புடைய 40000 ரேஷன் அட்டைகள் 2023 ஆம் ஆண்டு உணவு மற்றும் வழங்கல் துறையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அதிருப்தி கொண்டிருந்தனர். இந்நிலையில் வரவுள்ள தேர்தலை முன்னிட்டு மக்களை கவரும் வகையில் ரத்து செய்யப்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் நாற்பதாயிரம் பேருக்கும் நடப்பு மாதத்தில் இருந்து மீண்டும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இது குறித்தான உத்தரவை பஞ்சாப் மாநில அரசு மாவட்ட நிர்வாக அலுவலருக்கு தெரிவித்துள்ளது.