இந்திய தபால் துறையில் வேலைவாய்ப்பு 55,000 காலி பணியிடங்கள் 2024 முழு தகவல்கள்!! India Post Office Recruitment 2024 Notification

இந்திய தபால் துறையில் வேலைவாய்ப்பு 55,000 காலி பணியிடங்கள் முழு தகவல்கள்!!

India Post Office Recruitment 2024 Notification

India Post Office Recruitment 2024 Notification இந்திய தபால் துறையில் வேலைவாய்ப்பு 55,000 காலி பணியிடங்கள் முழு தகவல்கள். இந்திய அஞ்சல் துறையில் பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி முதல் பட்டப் படிப்பு வரை கல்வித்தகுதி கொண்ட பல்வேறு பணிகளுக்குமான 55,000 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Indian Post Office Recruitment 2024 Notification
Indian Post Office Recruitment 2024 Notification

தபால் துறை:

இந்திய அஞ்சல் துறை ஆனது நாட்டின் மிகப்பெரும் துறையாக அனைத்து பகுதிகளிலும் மூலை முடுக்குகளில் உள்ள மக்களுக்கும் தனது சேவையை வழங்கி வருகிறது. இதனால் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் இத்துறையில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். 2024 ஆம் ஆண்டுக்கான அஞ்சல் துறை ஊழியர்கள் நியமனம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பில் போஸ்டல் அசிஸ்டன்ட், சார்ட்டிங் அசிஸ்டன்ட், போஸ்ட்மேன், மெயில் கார்டு, மல்டி டாஸ்கிங் ஸ்டாப் என்று மொத்தம் ஐந்து பிரிவுகளில் 55 ஆயிரம் காலி பணியிடங்கள் வரை நியமனம் செய்யப்பட உள்ளது.

Indian Post Office Recruitment 2024 Notification

இப்பணிகளுக்கு ரூபாய் 25500 முதல் ரூபாய் 81 ஆயிரத்து 100 வரை மாத சம்பளம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். போஸ்டல் அசிஸ்டன்ட், சார்ட்டிங் அசிஸ்டன்ட் போன்ற பணிகளுக்கு டிகிரி கல்வி தகுதியாகவும், போஸ்ட்மேன், மெயில் கார்டு பணிகளுக்கு 12 ஆம் வகுப்பு கல்வி தகுதி ஆகவும், மல்டி டாக்கிங் ஸ்டாப் பணிக்கு பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி ஆகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட பிரிவுகளுக்கு வயது வரம்பில் தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது.

தபால் துறையில் போஸ்ட்மேன் உள்பட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது இந்த மாதம் வெளியாக உள்ளது.

10ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதன் மூலம் ரூ.81 ஆயிரம் வரையிலான சம்பளத்தில் பணியை பெற முடியும்.

மத்திய தகவல் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தபால்(அஞ்சல்) துறை இயங்கி வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்பட்டு வருகின்றன.

Indian Post Office Recruitment 2024 Notification

காலி பணியிடங்கள்

ஒவ்வொரு மாநிலங்கள் வாரியாக இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தான் 2024ம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு குறித்த விபரம் வெளியாகி உள்ளது.

அதாவது தபால் துறையில் 2024ம் ஆண்டில் மொத்தம் 5 பிரிவுகளுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது. போஸ்டல் அசிஸ்டென்ட், சார்ட்டிங் அசிஸ்டென்ட்(Sorting Assistant), போஸ்ட் மேன், மெயில் கார்ட், மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் என மொத்தம் 5 பிரிவுகளில் 55,000 பேர் வரை தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு என்பது இந்த மாதம் வெளியாகலாம். ஒருவேளை தேர்தல் அறிவிக்கப்பட்டால் அறிவிப்பு என்பது சற்று தாமதமாக வாய்ப்புள்ளது.

சம்பளம்

இதில் போஸ்டல் அசிஸ்டென்ட் சார்ட்டிங் அசிஸ்டென்ட் பணிக்கு மாதம் குறைந்தப்பட்சம் ரூ.25,500 முதல் ரூ. 81,100, போஸ்ட்மேன் மற்றும் மெயில் கார்ட் பணிக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100, மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு ரூ. 18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது.

வயதுவரம்பு

வயது வரம்பை பொறுத்தமட்டில் போஸ்டல் அசிஸ்டென்ட், சார்ட்டிங் அசிஸ்டென்ட், போஸ்ட்மேன், மெயில் கார்ட் பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 முதல் 15 வயது வரையும் தளர்வு என்பது வழங்கப்படும்.

கல்வித் தகுதி

மேலும் போஸ்டல் அசிஸ்டென்ட், சார்ட்டிங் அசிஸ்டென்ட் பணிக்கு டிகிரியும், போஸ்ட்மேன், மெயில் கார்டு பணிக்கு 12ம் வகுப்பும், மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு 10ம் வகுப்பும் முடித்திருக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

error: Content is protected !!