விஜயின் கோட் படத்தில் பிரபுதேவா பிரசாந்தின் ரோல் என்ன தெரியுமா?..Do you know role of Prabhu Deva Prashant in Vijay’s GOAT

Table of Contents

விஜயின் கோட் படத்தில் பிரபுதேவா பிரசாந்தின் ரோல் என்ன தெரியுமா?..

Do you know role of Prabhu Deva Prashant in Vijay’s GOAT

Do you know role of Prabhu Deva Prashant in Vijay’s GOAT விஜய் நடித்துக் கொண்டிருக்கின்ற பிரபுதேவா மற்றும் பிரசாந்தின் ரோலை பற்றி நாம் விரிவாக பார்ப்போம் .லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Do you know role of Prabhu Deva Prashant in Vijay's GOAT
Do you know role of Prabhu Deva Prashant in Vijay’s GOAT

ஆங்கில புத்தாண்டை ஒட்டி படத்தின் முதல் போஸ்டரும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று இரண்டாவது போஸ்டரும் வெளியாகின. இந்தச் சூழலில் GOAT படத்தில் பிரசாந்த் மற்றும் பிரபுதேவா ஆகியோரின் ரோல்கள் குறித்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பீஸ்ட், வாரிசு தோல்விக்கு பிறகு லியோ படத்தில் நடித்தார் விஜய். தொடர்ந்து இரண்டு படங்கள் தோல்வியடைந்ததால் லியோவை ரொம்பவே நம்பியிருந்தார். ஆனால் அந்தப் படமும் விமர்சன ரீதியாக அடி வாங்கியது. இதற்கிடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று லியோ படம் நடந்துகொண்டிருக்கும்போதே அறிவிப்பு வெளியானது. அதன்படி ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. புதிய கீதை படத்துக்கு விஜய் நடிக்கும் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

நட்சத்திர பட்டாளம்:

Do you know role of Prabhu Deva Prashant in Vijay's GOAT

இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மீனாட்சி செளதரி, மைக் மோகன், ஜெயராம், பிரேம்ஜி அமரன், வைபவ் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. லியோ படம் சறுக்கலை சந்தித்ததால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடித்து விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற வேண்டும் என விஜய்யும், அவரது ரசிகர்களும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

சம்பவம் உறுதி?:

கண்டிப்பாக தங்களது நம்பிக்கை பொய்க்காது என்பதே விஜய் ரசிகர்களின் கருத்து. ஏனெனில் முதன்முறையாக வெங்கட் பிரபு விஜய்யுடன் இணைகிறார். அவரது இயக்கம் என்றாலே படம் படு ஜாலியாக நகரும். விஜய்க்கும் அந்த மாதிரியான ஜானர் செட் ஆகும். அதனால் இந்த முறை மிஸ் ஆகாது என கூறுகின்றனர். அதேபோல் அஜித்துக்கு எப்படி மங்காத்தா படத்தின் மூலம் தரமான சம்பவத்தை செய்தாரோ அதேபோல் இப்படத்தின் மூலமும் விஜய்யை வைத்து தரமான சம்பவம் செய்வார் என்றும் ரசிகரக்ள் கூறுகின்றனர்.

Do you know role of Prabhu Deva Prashant in Vijay's GOAT

GOAT:

படத்துக்கு என்ன பெயர் வைக்கப்படும் என பலரும் ஆவலோடு காத்திருந்தனர். அதன்படி படத்துக்கு GOAT (The Greatest Of All Time)என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது யாருமே எதிர்பார்க்காத ஒரு பெயராக அமைந்திருக்கிறது. முக்கியமாக ஒரு துறையில் சாதித்த லெஜெண்டுகளை GOAT என்று அழைக்கும் வழக்கம் உலகம் முழுவதும் இருக்கிறது. எனவே கண்டிப்பாக இந்தப் படம் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமையும். அது பெயரிலேயே தெரிகிறது என்கிறார்கள் ரசிகர்கள். புதிய போஸ்டர்: இந்த சூழலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  படத்திலிருந்து புதிய போஸ்டர் வெளியானது. அதில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் கமாண்டோ உடையில் கையில் துப்பாக்கியுடன் சிரித்திருக்கும்படி இருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ட்ரீட் கொடுக்கும் என்பதை போஸ்டர் உறுதி செய்திருப்பதாக கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்தனர்.

பிரசாந்த், பிரபுதேவா ரோல்:

இந்நிலையில் GOAT படத்தில் பிரசாந்த் மற்றும் பிரபுதேவா ஆகியோரின் ரோல்கள் என்னவாக இருக்கும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தின் விஜய்க்கு டபுள் ஆக்‌ஷன் என்று கூறப்படுகிறது. அதில் தந்தை விஜய்க்கு நண்பர்களாக இவர்கள் இரண்டு பேரும் வருவார்கள் என்று திரைத்துறையில் பேச்சு எழுந்திருக்கிறது.இதற்கிடையே இப்படம் டைம் ட்ராவல் ஜானரில் உருவாகியிருப்பதாகவும் கடந்த சில காலமாகவே தகவல் ஓடியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

error: Content is protected !!