செல்வம் அதிகரிக்க 2024 பொங்கல் வைக்க சிறந்த நேரம் 2024 is the best time to celebrate Pongal

செல்வம் அதிகரிக்க பொங்கல் வைக்க சிறந்த நேரம் 2024

2024 is the best time to celebrate Pongal

நல்ல நேரத்தில் பொங்கல் வைப்பதால் செல்வ வளம் அதிகரிக்கும். தை மாதத்தில் வரும் பொங்கல் பண்டிகையானது சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளது. பொங்கல் விழாவானது கடவுள் வழிபாட்டிற்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கு நல்ல எடுத்துக்காட்டான விழாவாகவும் இருக்கிறது. பொங்கல் அன்று வீட்டில் இருக்கக்கூடியவர்கள் முதலில் பார்ப்பது தை திருநாளான பொங்கலை எந்த நேரத்தில் வைப்பது என்பதைத்தான். எந்த ஒரு காரியத்தையும் நல்ல நேரம் பார்த்து வைப்பது பெரியவர்களின் வழக்கமாகும்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
2024 is the best time to celebrate Pongal
2024 is the best time to celebrate Pongal

பொங்கல் வைக்க சிறந்த நேரம் 2024

நல்ல நேரத்தில் பொங்கல் வைப்பதால் செல்வ வளம் அதிகரிக்கும்.

பொங்கல் வைக்க நல்ல நேரம் திங்கள் கிழமை தை 1ம் தேதி காலை 6.30 முதல் 7.30 வரை நல்ல நேரம். மேலும் 9.30 முதல் 10.30 மணி வரை ஆகும். ஆனால் 7.30 மணி முதல் 9.30 மணி வரை ராகுகாலம் என்பதால் அந்த நேரத்தில் பொங்கல் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் நான்கு நாட்கள் களைகட்டும். விளைச்சலுக்கும், உழவுத் தொழிலுக்குத் தேவையான உதவிகளை செய்யும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் அனைத்துக்கும் மரியாதை செய்யும் விதமாக, நன்றி தெரிவிக்கும் விதமாகவும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் ஏன் கொண்டாடப்படுகிறது

பொங்கல் திருநாளானது ஒரு அறுவடை பண்டிகை நாள் ஆகும். அது செழிப்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் நாட்டில் விவசாயம் செழிக்க உதவிய இயற்கைக்கு நன்றி செழுத்தும் விதமாகவே தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர். பொங்கல் தினங்களில் வீட்டின் வெளியில் கோலம் இடுகின்றனர். அந்த ஆண்டில் வயலில் அறுவடை செய்த புதிய அரிசியில் வெல்லம் நெய் சேர்த்து பொங்கல் தயாரித்து சூரியபகவானுக்கு படைக்கின்றனர்.

 

இப்படி கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகவும் இந்த விழா கொண்டாடப்படுகிறது. மக்கள் இந்த பண்டிகையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உற்சாகமாக கொண்டாடி, சிறப்பாக தயாரிக்கப்பட்ட பொங்கல் பிரசாதத்தை உண்டு மகிழ்கின்றனர்.

2024 is the best time to celebrate Pongal
2024 is the best time to celebrate Pongal
தமிகத்தில் பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. 2024ல் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி தொடங்கி ஜனவரி 18ம் தேதி முடிவடையும். ஜனவரி 14 போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 15, தை பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 16, மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 17 மற்றும் கன்யா பொங்கல் ஜனவரி 18 அன்று கொண்டாடப்படுகிறது. பொங்கல் நாளில் இருந்து தமிழ் புத்தாண்டு தொடங்கும் என்பது ஒரு தரப்பினரின் நம்பிக்கையாக உள்ளது.

Leave a Comment

error: Content is protected !!